Cumin Powder Benefits : சீரகப் பொடியை இப்படி குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Cumin Powder Benefits : சீரகப் பொடியை இப்படி குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?


Health Benefits Of Cumin Powder: உணவுப் பொருள்களில் ஒன்றான சீரகம் உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. பொதுவாக சீரகம் ஓர் மருத்துவ குணம் மிக்க பொருளாகும். ஓமம் போல் காணப்படும் சீரகம் ஆனது அதன் நறுமணம் மற்றும் சுவையில் வேறுபடும். இந்த சீரகம் உணவிற்கு மணம் மற்றும் சுவையை அளிப்பதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

சீரகத்தின் ஊட்டச்சத்துகள்

சீரகத்தில் நார்ச்சத்துக்கள், கனிமச் சத்துக்களான இரும்புச்சத்து, காப்பர், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, ஜிங்க், மக்னீசியம், செலினியம் போன்றவை அதிகமாக உள்ளது. இதில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பல்வேறு பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும் நிறைந்துள்ளது. மேலும் சீரகத்தில் ஆன்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள், அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் போன்றவை நிறைந்துள்ளது. பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சீரகத்தை உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.

சீரகப் பொடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சீரகப் பொடியை எடுத்துக் கொள்வதால் உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்.

உடல் எடை குறைய

உடல் எடையைக் குறைக்க சீரகம் பெரிதும் உதவுகிறது. இது உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதுடன் டிரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்கும். சீரகப் பொடி உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது. இதற்கு ஒரு கப் தயிரில் 1 டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடி சேர்த்து தினமும் 2 வேளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

எலும்பு வலிமைக்கு

எலும்புகளின் வலிமைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், வைட்டமின் ஏ, பி12, பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை சீரகத்தில் நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள ஈஸ்ட்ரோஜெனிக் பண்புகள், பெண்களைத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க உதவுகிறது. எனவே, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் வராமல் இருக்க சீரகத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது எலும்பு வலிமைக்கு உதவுவதுடன், எலும்பு அடர்த்தி மேம்பாட்டிற்கு உதவுகிறது.

இந்தப் பதிவும் உதவலாம்: Amla Powder Benefits: நெல்லிக்காய் பொடியில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் இதோ!

நினைவாற்றல் மேம்பாட்டிற்கு

சீரகத்தில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளது. இது மனதை ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிக்கும். முக்கியமாக சீரகத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது முதுமைக்காலத்தில் வரும் அல்சைமர் நோயைத் தவிர்க்கலாம். மேலும், சீரகத்தில் உள்ள வைட்டமின் பி, ஈ போன்றவை உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும். எனவே, நினைவாற்றலை அதிகரிக்க விரும்புபவர்கள் தினமும் நீரில் சீரகப் பொடி கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

தூக்கமின்மை

இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற சீரகத்தைப் பயன்படுத்தலாம். சீரகத்தில் மெலடோனின் என்ற ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது. சீரகம் தூக்கமின்மைக்கும், இதர தூக்க பிரச்சனைகளுக்கும் நன்மை தருகிறது. வாழைப்பழத்தை சீரகப் பொடி தொட்டு, இரவில் தூங்கும் முன் சாப்பிடலாம். இல்லையெனில் சீரக டீ குடிக்கலாம். இதற்கு ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து 2-3 நொடிகள் கொதிக்க வைத்து, பின் வெதுவெதுப்பாக வடிகட்டி குடிக்க வேண்டும்.

செரிமான மேம்பாட்டிற்கு

செரிமான பிரச்சனைகளான வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாயுத் தொல்லை, குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆயுர்வேதத்தில் சீரகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு 1 டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடியை 1 டம்ளர் நீரில் சேர்த்து, தினமும் ஒன்றிரண்டு முறை குடித்து வரலாம்.

இந்தப் பதிவும் உதவலாம்: Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

சர்க்கரை நோய்

ஆயுர்வேதத்தில் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க சீரகம் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், சீரகம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவைக் குறைக்கிறது. 8 டீஸ்பூன் சீரகத்தை வறுத்து பொடி செய்து, தினமும் குடிக்கும் நீரில் அரை டீஸ்பூன் சீரகப் பொடி கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 2 முறை என தொடர்ந்து சில மாதங்கள் பின்பற்றுவதன் மூலம் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

இரத்த சோகை

இரத்த சோகை இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது. சீரகத்தில் இரும்புச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. எனவே இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள், சீரகத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நன்மையைத் தரும். 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தில் 4 மிகி இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சீரகம் ஆனது உடலில் ஹீமோகுளோபினை அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபட உதவுகிறது.

இந்தப் பதிவும் உதவலாம்: Platelet Count Increase Food: இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை இயற்கையாக எப்படி அதிகரிப்பது?

Image Source: Freepik

Read Next

Benefits of Coriander Water: வெறும் வயிற்றில் தினமும் காலை கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்