இரத்தத் தட்டு அல்லது பிளேட்லெட்டுகள் என்பது இரத்தத்தில் இருக்கக் கூடிய உயிரணுக்களின் ஒரு வகையாகும். இரத்த உறைதலில் இது முக்கிய பங்காற்றுகிறது. எலும்பு மஜ்ஜையில் இரத்த பிளேட்லெட்டுகள் உருவாகி, இரத்த ஓட்டத்தில் பரவுகிறது. குறைந்த பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை பிரச்சனை த்ரோம்போசைட்டோபீனியா என அழைக்கப்படுகிறது. இந்த பிரச்சனை ஏற்படும் போது, இரத்த உறையாமை ஏற்பட்டு, இரத்தப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை இயற்கையாகவே அதிகரிக்கலாம்.
பிளேட்லெட் எண்ணிக்கை குறைவதற்கான காரணம்
ஆல்கஹால், நோய் தொற்றுகள், கல்லீரல் அழற்சி, மண்ணீரல் விரிவாக்கம், போன்றவை குறைந்த பிளேட்லெட்டுகள் எனப்படும் த்ரோம்போசைட்டோபீனியாவை ஏற்படுத்துகிறது. இரத்தப் பரிசோதனையில் பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை குறைவாக இருப்பின், அதனைக் கண்டறிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது அவசியம். அதே சமயம், குறைந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை இருப்பின் சில இயற்கை உணவுப் பொருள்களைக் கொண்டு அதனை அதிகரிக்கச் செய்யலாம். இருப்பினும், மருத்துவ ஆலோசனை மேற்கொள்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க டீ உதவுமா? வாங்க பாக்கலாம்…
பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்கும் உணவு
நாம் சில சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
வைட்டமின் பி-12 சார்ந்த உணவுகள்
இரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் பி-12 சார்ந்த உணவுகள் உதவுகிறது. இந்த வைட்டமின் சத்து விலங்குகள் சார்ந்த உணவாகும். மாட்டிறைச்சி, முட்டை போன்றவற்றில் வைட்டமின் பி-12 காணப்படுகிறது. முட்டை வெள்ளைக் கருவில் அல்புமின் இருப்பதால் இது பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
வைட்டமின் சி உள்ள உணவுகள்
இரத்த பிளேட்லெட்டுகளை திறமையாக செயல்பட வைப்பதில் வைட்டமின் சி உதவுகிறது. அந்த வகையில், வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ள மாங்காய், தக்காளி, காலிஃபிளவர் போன்றவை இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: கர்பகால உடற்பயிற்சியின் நன்மைகள்; கர்பகாலத்தில் உடற்பயிற்சி செய்தால் நார்மல் டெலிவரி ஆகுமா?
பப்பாளி இலை சாறு
இயற்கை மருந்துகளில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக அமைவது பப்பாளி இலை சாறு ஆகும். இது பிளேட்லெட் உற்பத்தியைத் தூண்டுவதற்கான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரும்பாலும் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைந்து விடும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி இலை சாற்றை அருந்துவதன் மூலம் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.
நெல்லிக்காய் சாறு
ஆம்லா எனப்படும் பெரிய நெல்லிக்காய், ஆன்டி ஆக்சிடன்ட்டுகள் நிறைந்த பழமாகும். இது பிளேட்லெட்டுகள் உற்பத்தியை அதிகரிப்பதுடன், நோயெதிர்ப்புச் சக்தியாகவும் உள்ளது. இந்த நெல்லிக்காய் சாற்றை தினந்தோறும் குடித்து வர, பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் செய்ய வேண்டிய 5 யோகாசனங்கள்
Image Source: Freepik