lose belly fat: இதை சாப்பிட்டால் தொப்பை காணாமல் போகும்!

  • SHARE
  • FOLLOW
lose belly fat: இதை சாப்பிட்டால் தொப்பை காணாமல் போகும்!


lose belly fat: எடை என்பது வேறு, தொப்பை குறைப்பு என்பது வேறு என்பது முதலில் அறிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாகும். தொப்பை என்பது பார்ப்பதற்கு மட்டுமல்ல உடல் நலத்திற்கும் நல்லதல்ல. இது சர்க்கரை, இதய பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தொப்பை போடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உடலை பராமரிப்பதன் முக்கிய அங்கமாகும். இதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். தொப்பை குறையும் போது உடல் எடையும் குறையும் அதேநேரத்தில் கட்டுக்கோப்பாகவும் காட்சி அளிக்கும்.

தொப்பை வளர முக்கிய காரணம்

பெரும்பாலானோர் நேரத்துக்குச் சாப்பிடுவதில்லை. பலர் ஒருவேளை அல்லது இருவேளை மட்டுமே உணவை எடுத்துக் கொள்கிறார்கள். இளம் வயதில் இதன் தாக்கம் தெரியவில்லை என்றாலும் வயது முதிர்வின் போது இது பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் இப்படி சாப்பிடுகையில் விரைவான எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. மறுபுறம் ஒருவர் ஒருநாளைக்கு 5 முறை அல்லது அதற்கு மேல் சாப்பிடுவதும் நல்லதல்ல. ஒவ்வொரு 4 மணிநேரத்திற்கும் சிறிய ப்ரோட்டின் உணவை எடுத்துக் கொள்வது நல்லது. இதன்மூலம் எடையும் குறையும், தொப்பையும் குறையும்.

இன்று பலருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பது பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டது. இவற்றை உட்கொள்வது ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும். இப்படி கூடும் உடல் எடையை குறைப்பது மிக கடினம். கேக், பீட்சா, ஒயிட் ப்ரெட் போன்ற உணவுகளை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது மட்டுமின்றி உடல் எடை கூடும். அதற்கு பதிலாக முழு தானியங்கள், ஓட்ஸ் மற்றும் பிரவுன் பிரட் சாப்பிடுவது நல்லது. இதனால் அவர் விரைவாக உடல் எடை குறையும்.

தொப்பை குறைய எதை சாப்பிடலாம்?

ஃபைபர் உணவு என்பது உண்மையில் சிறந்த உணவு முறையாகும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும். நார்ச்சத்து உட்கொள்வதால் வயிறு விரைவில் நிரம்புகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஓட்ஸ், கோதுமை உணவு, சோளம் போன்ற ப்ரோட்டின் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும்.

தொப்பை என்பது பல பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. தொப்பையை குறைப்பது என்பது சாதாரண விஷயமல்ல என்றாலும் முடியாத விஷயமல்ல. உடற்பயிற்சி, உணவு என பல செயல்பாடுகளை மேற்கொள்வது அவசியம். உடல் எடையை குறைக்க விரும்பும் பலரும் சாப்பாடு என்ற விஷயம் வரும்போது மட்டும் நிலைகுலைகிறார்கள்.

உட்கார்ந்த இடத்தில் வேலை

நீங்கள் அதிகமாக உட்கார்ந்து, உங்கள் உடலை அரிதாகவே அசைத்தால், உங்கள் தொப்பை கொழுப்பு எந்த நேரத்திலும் விடைபெற வாய்ப்பில்லை. படிக்கட்டுகளில் ஏறி, 30 நிமிட உடற்பயிற்சி, யோகா மற்றும் உட்புற ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

பலருக்கும் அடிவயிற்றைச் சுற்றி அதிக கொழுப்பு இருப்பதை காணலாம். தொப்பையை குறைத்தாலும் இடுப்பு பகுதி மற்றும் முதுகு பகுதியில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கு கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். முறையான சாப்பாடு என்பது மிக முக்கியமான ஒன்று. அதேபோல் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி என்பதும் பிரதானமான ஒன்று.

இனிப்புகள் வேண்டாம்

இனிப்புகள், காற்றூட்டப்பட்ட பானங்கள், ஸ்குவாஷ்கள், குக்கீகள், மிட்டாய்கள், கேக் உள்ளிட்ட சர்க்கரைப் பொருட்களைக் குறைக்கவும். பசி எடுத்தால் மக்கானா, பழங்கள், தானிய வகைகள் போன்ற ஆரோக்கியமான தின்பண்டங்களை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

காய்கறிகள், கீரைகள் சேர்க்கவும்

ரொட்டி, பிஸ்கட், வெள்ளை அரிசி, மைதா, வெள்ளை உருளைக்கிழங்கு உள்ளிட்டவைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். முழு தானியங்கள், நார்ச்சத்து மற்றும் சர்க்கரை குறைவாக உள்ள உணவுகளை உண்ணுங்கள். உணவில் அதிக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், சாலட் சேர்க்கவும், கீரைகள் உள்ளிட்டவைகளை சேர்த்துக் கொள்ளவும். இது மனநிறைவை மேம்படுத்துவதோடு எப்போதும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவும்.

தொப்பையை குறைக்க உதவும் வழிமுறைகள்

உங்கள் காலை உணவை எப்போதும் தவிர்க்காதீர்கள். உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்து போன்றவைகள் உள்ளதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். கடுகு எண்ணெய், பருப்புகள், மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். விறுவிறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், ஜூம்பா, ஏரோபிக்ஸ், விளையாட்டு உள்ளிட்ட கார்டியோ உடற்பயிற்சிகள் தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது செய்யுங்கள். அதேபோல் காலையில் சூரிய ஒளியில் இருப்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

இவை அனைத்தும் தொப்பையை குறைக்க உதவும் வழிமுறைகள் என்றாலும் தங்கள் உடல்நிலையை பொறுத்து மருத்துவரை அணுகுவது என்பதும் சிறந்த முடிவாகும்.

Read Next

Dry Fruits Tips: உலர் பழங்களை இப்படி சாப்பிட்டால் அதீத நன்மைகள்

Disclaimer

குறிச்சொற்கள்