Dry Fruits Tips: வயது முதிர்வு, வெளியில் உணவு சாப்பிடுவது, போதுமான ஊட்டச்சத்து இல்லாத உணவு என பல்வேறு காரணங்களால் உடல் பலவீனம் அடையத் தொடங்குகிறது. இதை சரிசெய்ய உலர் பழங்களை பயன்படுத்தலாம். உலர் பழங்களில் பல்வேறு நன்மைகள் கொட்டிக் கிடக்கிறது. இது ஒரு சுவையான உணவும்கூட. உலர் பழங்களை சாப்பிடும் போது சில விதிகளை கடைபிடித்தால் இன்னும் சிறப்பான பலன்களை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீரணம் பிரச்சனை
பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்புகள், பைன் பருப்புகள், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளும் நன்மை பயக்கும் என்றாலும் இது ஜீரணிக்க சிறிது நேரமாகும். ஜீரணம் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சிக்கல் கொடுக்கும். ஆனால் உலர் பழங்களில் இந்த பிரச்சனைகள் இல்லை.
இதையும் படிங்க: Warm Water Benefits: தினமும் காலையில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?
உலர் பழங்களின் நன்மைகள் என்ன?
உலர் பழங்களை சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்பதை நாம் அறிவோம். தினமும் ஒரு கைப்பிடி உலர் பழங்களை எடுத்துக் கொண்டால், சோம்பல், மந்தம் போன்றவை ஏற்படாது, உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். கொட்டைகளில் வைட்டமின் ஈ, கால்சியம், செலினியம், தாமிரம், மெக்னீசியம் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை நிறைந்துள்ளன. இவற்றில் இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், வைட்டமின் பி, நியாசின், தியாமின் மற்றும் ஃபோலேட் போன்றவையும் நிறைந்துள்ளன.
கட்டுக்குள் இருக்கும் சர்க்கரை நோய்கள்
உலர் பழங்களில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கணையம் மற்றும் மார்பக புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கிறது. சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் உலர் பழங்களைச் சாப்பிட்டால் ஓரளவு நிவாரணம் பெறலாம். அவற்றில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. அதேபோல் உலர் பழங்களை சாப்பிடும்பட்சத்தில் டைப் 2 சர்க்கரை நோயும் கட்டுக்குள் இருக்கும்.
ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள் மற்றும் நார்ச்சத்து
உலர் பழங்களை சாப்பிடும் போது சில கூடுதல் விதிகளை கடைபிடித்தால் இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். நட்ஸ், உலர் பழங்களில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதன் காரணமாக இது அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. எனவே உலர் பழங்களை சாப்பிடுவதற்கு முன் 6-8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், விதைகளின் வெப்பமூட்டும் பண்புகள் குறைக்கப்படுகின்றன. அதேபோல் இந்த முறை உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வேகமாக பெற உதவுகிறது. ஒருவேளை உலர வைக்க மறந்தால் உலர்த்தி வறுத்து சாப்பிடுங்கள்.
உலர் பழங்களை சாப்பிடுவது எப்படி?
தினமும் காலையில் வெறும் வயிற்றில் உலர் பழங்களை சாப்பிடுவது நல்லது. அதேபோல் நட்ஸ்களை மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டால் அதிக உணவு சாப்பிடும் ஆசை குறையும்.
இதையும் படிங்க: தினையின் வகை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை ஆராய்வோம்?
எதுவாகினும் தினமும் உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். செரிமான சக்தியை மேம்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். இவை அனைத்தையும் செய்தும் கூடுதலாக ஒரு கையளவு நட்ஸ், உலர் பழங்கள் சாப்பிடுவது கூடுதல் சிறப்பு.
இதுபோன்று நட்ஸ்கள், உலர் பழங்களை சாப்பிடுகையில் ஏதேனும் சிக்கலை சந்தித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள் அதுவே சிறந்த முடிவாகும்.