Warm Water Benefits: தினமும் காலையில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

  • SHARE
  • FOLLOW
Warm Water Benefits: தினமும் காலையில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?


வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள்

இரவு தூங்குவது முதல் காலை வரை நீண்ட நேரம் தண்ணீர் இல்லாமல் உடல் வறட்சி அடைகிறது. எனவே உடலை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் குடிக்கவும். தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் எழுந்தவுடன் சில கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும்.

இதையும் படிங்க: இரவு உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 4 நார்ச்சத்து உணவுகள் இங்கே

காலையில் வெறும் வயிற்றில் குடிக்கப்படும் நீர் மலமிளக்கியாக செயல்படுகிறது. உங்கள் வயிற்றில் உள்ள உணவை இலக்கி, குடல் இயக்கத்தை தூண்டுகிறது. இதன்மூலம் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

சமீபகாலமாக உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளால் பலர் அவதிப்படுகின்றனர். உயர் இரத்த சர்க்கரை அளவு உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு, மாரடைப்பு, கரோனரி தமனி நோய் போன்ற பல பிரச்சனைகளை தடுக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்வதோடு, காலையில் எழுந்ததும் வெந்நீரை குடிக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்:

கொலஸ்ட்ரால் குறைகிறது

வெந்நீர் குடிப்பது அதிக கொலஸ்ட்ராலைத் தடுக்க உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து, இதய நோய் அபாயத்தைத் தடுக்கிறது.

எடை கட்டுப்பாடு

காலை எழுந்தவுடன் இரண்டு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உங்கள் உடல் வெப்பநிலையை அதிகரித்து, உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தும். இந்த அதிகரித்த வளர்சிதை மாற்ற விகிதம் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. நல்ல பலனை பெற எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும்.

மிருதுவான சர்மம்

வெந்நீரைக் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி உடலில் உள்ள அசுத்தங்கள் நீங்கும். அதன் தாக்கம் நமது தோலிலும் முகத்திலும் தெரியும். இது முகத்திற்கு அற்புதமான பொலிவைத் தரும்.

இதையும் படிங்க: வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

மாதவிடாய் வலி

மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்கள் காலையில் ஒரு சில கப் வெதுவெதுப்பான நீரை குடிப்பதன் மூலம் பெரும் நிவாரணம் பெறலாம். இந்த நீரின் சூடு வெறும் வயிற்றில் படும் போது அது வயிற்று தசைகளை தளர்த்தி வலியை நீக்குகிறது.

ENT சிக்கல்

ஜலதோஷம் இருக்கும்போது வெதுவெதுப்பான நீரை அருந்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இது திரட்டப்பட்ட சளியை அகற்றுவதால், நீங்கள் நன்றாக சுவாசிக்க உதவுகிறது. தொண்டை வலியை உண்டாக்கும் நுண்ணுயிரிகளையும் வெந்நீர் கொல்லும். இது முழு சுவாச அமைப்புக்கும் நிவாரணம் அளிக்கிறது.

image source: FreePik

Read Next

Benefits of mango juice: மாம்பழ ஜூஸில் இத்தனை நன்மையா?

Disclaimer