$
What Does Garlic Water Do For The Body: இந்திய சமையலில் பூண்டு பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான உணவுப்பொருளாகும். இதில் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. பலரும் பூண்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ உட்கொள்வதை விரும்புவர். ஆனால், பூண்டை இந்த வழிகளில் சாப்பிடுவதை விட, தண்ணீரில் பூண்டு சேர்த்துக் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளில் தருகிறது.
பூண்டு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
அன்றாட உணவில் பூண்டு சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அந்த வகையில் பூண்டு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்.
வயிறு சார்ந்த பிரச்சனைகள்
பொதுவாக, செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு பூண்டு மிகுந்த நன்மை பயக்கும். அதன் படி, தினமும் பூண்டு தண்ணீர் உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது அஜீரணம், வயிற்று வலி, மலச்சிக்கல், வாய்வு, மற்றும் வாயுப்பிடிப்பு போன்ற பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்குகிறது. மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி மிகவும் பொதுவானதாகும். இந்த சூழ்நிலையில் அதிகாலையில் பூண்டு தண்ணீர் குடிப்பது இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும், வயிற்று வலியைக் குறைக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Raw Garlic Side Effects: பச்சை பூண்டு சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா.?
இதய நோய்க்கு
தினமும் காலை நேரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு பல் பூண்டு சேர்த்து குடிக்க வேண்டும். இவ்வாறு அருந்துவது ரத்த அழுத்தம், மாரடைப்பு, இதய நோய், கொலஸ்ட்ரால் மற்றும் இன்னும் பல பிரச்சனைகள் குணமாகும். மேலும், வைரஸ் நோய்களின் போது பூண்டு தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும். ஏனெனில், பூண்டில் வைட்டமின் பி1, பி6, சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் திறனைக் கொண்டது.

குடல் ஆரோக்கியத்திற்கு
பூண்டு சக்திவாய்ந்த ஆன்டிபயாடிக் பண்புகள் நிறைந்துள்ளது. இதில் Diallyl Sulfide என்ற கலவை உள்ளது. இந்தக் கலவையானது கேம்பிலோபாக்டர் பாக்டீரியம் போன்ற பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளை விட 100 மடங்கு அதிக திறன் கொண்டதாகும். இது நுண்ணுயிர் எதிர்ப்பிகளில் நன்மை பயக்கும். மேலும் பூண்டில் உள்ள ஆன்டி பயாடிக் பண்புகள் குடல் நோய்த்தொற்றுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது குடலில் பாக்டீரியா செயல்பாட்டைத் தடுக்க உதவுகிறது.
பாக்டீரியாவை எதிர்த்துப் போராட
பூண்டில் ஆன்டிபயாடிக் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளை எதிர்த்துப் போராட உதவுவதாக ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் பூண்டில் டயாலிசல்பைடு என்ற கலவை நிறைந்துள்ளது. இவை நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவைக் குறைக்க உதவுகிறது. கூடுதலாக, பூண்டு தண்ணீர் உட்கொள்வதால் பல்வேறு தீவிர பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
இருமல், சளி நீங்க
பூண்டு பல நேரங்களில் இருமல் மற்றும் சளியைத் தடுப்பதற்கு அல்லது சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர். எனவே பூண்டு தண்ணீரைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் பெரியவர்களுக்கு ஏற்படும் சளித்தொல்லையைக் குறைக்கலாம் என ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Garlic Tea Benefits: ஒரு டம்ளர் பூண்டு டீ போதும்! பல பயன்களை அடைவீர்கள்
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவும் உணவுப்பொருள்களில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் படி பூண்டு தண்ணீர் உட்கொள்வது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் பூண்டில் வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது.

பூண்டு தண்ணீர் எப்போது குடிக்கலாம்?
பூண்டு தண்ணீரை உட்கொள்ள விரும்புபவர்கள் பூண்டை நீண்ட நேரம் தண்ணீரில் ஊற வைத்து குடிக்கலாம் அல்லது ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இதில் விரும்பினால் உப்பு மற்றும் கருமிளகு சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு பூண்டை தண்ணீரில் ஊறவைக்கும் போது, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நீரில் கலந்து விடும். இந்த ஊட்டச்சத்து மிக்க பூண்டு நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு வெறும் வயிற்றில் பூண்டு நீர் அருந்துவது மிகுந்த நன்மை பயக்கும். அதே சமயம், ஒவ்வாமை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு இந்த நீரை அருந்த வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Garlic Empty Stomach Benefits: வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுங்க. இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்கும்
Image Source: Freepik