White Jamun: கருப்பு நாவல்பழத்தை மிஞ்சும் நன்மைகளைத் தரும் வெள்ளை நாவல்பழம்!

  • SHARE
  • FOLLOW
White Jamun: கருப்பு நாவல்பழத்தை மிஞ்சும் நன்மைகளைத் தரும் வெள்ளை நாவல்பழம்!


Health Benefits Of White Jamun: உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பழங்களில் பெர்ரி வகைகளும் ஒன்று. அந்த வகையில் இந்திய ப்ளாக்பெர்ரி என்றும் அழைக்கப்படும் ஜாமூன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இது செழுமையான சுவையுடன் கூடிய ஒரு பிரியமான கோடைக்கால பழமாகும். பொதுவாக கருப்பு நிற ஜாமுன் பரவலாக அறியப்பட்டாலும், இதன் குறைவான அறியப்பட்ட இனமாக வெள்ளை ஜாமுன் (சிஜிஜியம் குமினி) உள்ளது. இந்த வெள்ளை ஜாமுன் தனித்துவமான பண்புகள் மற்றும் சிறந்த ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டு விளங்குகிறது. அதிலும் குறிப்பாக, சாதாரண கருப்பு நிற ஜாமுனுடன் ஒப்பிடுகையில், வெள்ளை ஜாமுன் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. ஏன் தெரியுமா?

வெள்ளை ஜாமுனின் ஆற்றல்மிக்க ஊட்டச்சத்துக்கள்

வெள்ளை ஜாமுன் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இது எந்தவொரு உணவிற்கும் மதிப்புமிக்க கூடுதலாகும். இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ் போன்ற பல்வேறு வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. கூடுதலாக, வெள்ளை ஜாமுனில் குறிப்பிடத்தக்க அளவு கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் ஆற்றல் உற்பத்தி, எலும்பு ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு ஆதரவு உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு இந்த ஊட்டச்சத்துக்கள் இன்றியமையாததாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Jeera Jaggery Water: சீரகத் தண்ணீருடன் வெல்லம் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

வெள்ளை ஜாமுன் உட்கொள்வதன் நன்மைகள்

எடை மேலாண்மை

வெள்ளை ஜாமுன் உட்கொள்வது உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புவோர்க்கு சிறந்த தேர்வாகும். இதில் குறைந்த கலோரிகளும், அதிக நீர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இது ஒரு சிறந்த சிற்றுண்டியாக விளங்குகிறது. மேலும் வெள்ளை ஜாமுனில் உள்ள நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன், ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையிழப்பைக் கட்டுப்படுத்தலாம்.

குறைந்த கிளைசெமிக் குறியீடு

வெள்ளை ஜாமுனின் குறிப்பிடத்தக்க நன்மைகளில் ஒன்றாக இருப்பது அதன் குறைந்த கிளைசெமிக் குறியீடு ஆகும். குறைந்த கிளைசெமிக் குறியீடு வகை உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும். ஏனெனில், இவை இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்காது. இதில் கிளைசெமிக் குறியீடு 25-30 வரை உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கான சிறந்த பழத் தேர்வாக அமைகிறது. இதன் வழக்கமான நுகர்வு சிறந்த கிளைசெமிக் கட்டுப்பாட்டிற்கு உதவுவதுடன், நீரிழவு நோய் தொடர்பான அபாயத்தைக் குறைக்கிறது.

கல்லீரல் ஆரோக்கியம்

ஆயுர்வேத மருத்துவத்தில் வெள்ளை ஜாமூன் பாரம்பரியமாக அதன் கல்லீரல்-பாதுகாப்பு பண்புகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி அதன் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. வெள்ளை ஜாமுனில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் கல்லீரலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் பல்வேறு சேதத்திலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அன்றாட உணவில் வெள்ளை ஜாமுனை உட்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், கல்லீரல் நோய்களைத் தடுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Dates Seeds Benefits: இது தெரிஞ்சா பேரீச்சம்பழ கொட்டையை தூக்கி போட மாட்டீங்க!

செரிமான ஆரோக்கியம்

வெள்ளை ஜாமூனில் செரிமான ஆரோக்கிய நன்மைகளுக்காக மிகவும் அறியப்படுகிறது. வெள்ளை ஜாமூனில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை சீரான செரிமானத்திற்கும், மலச்சிக்கல்லைத் தடுக்கவும் உதவுகிறது. வெள்ளை ஜாமூனில் உள்ள இயற்கையான அமிலங்கள், வயிற்றில் உள்ள அமிலத்தை சமநிலை அடைய உதவுகிறது. இவை சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கவும், அஜீரணம் மற்றும் அமிலத்தன்மை போன்ற பொதுவான செரிமான பிரச்சினைகளைத் தடுக்கவும் உதவுகிறது.

ஆக்ஸிஜனேற்ற பண்புகள்

வெள்ளை ஜாமுன் சிறந்த ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்ததாகும். இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும் ஃபினாலிக் கலவைகள் மற்றும் ஃபிளவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள், கருப்பு நிற ஜாமுனை விட வெள்ளை ஜாமுனில் அதிகளவு உள்ளது. எனவே, வெள்ளை ஜாமுனைத் தொடர்ந்து உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், இதய நோய் போன்ற பல்வேறு நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

சிறந்த சுவையுடன் கூடிய ஜாமுன்

ஊதா ஜாமூன் புளிப்புத்தன்மையுடன் கூடிய பழமாகும். இதனுடன் ஒப்பிடுகையில், வெள்ளை ஜாமுன் லேசான, இனிமையான சுவை கொண்டதாகக் கருதப்படுகிறது. இது பல்வேறு சமையல் பயன்பாடுகளில் மிகவும் சுவையைத் தரக்கூடிய உணவாகக் கருதப்படுகிறது. வெள்ளை ஜாமுனைப் புதிதாக உண்ணலாம். மேலும் இதை சாலட்களில் சேர்க்கலாம். இது தவிர, ஸ்மூத்திகள், இனிப்பு மற்றும் ஜாம்களில் பயன்படுத்தலாம். இதன் இனிமையான சுவையால் குழந்தைகள், பெரியவர்கள் இருவருக்கும் பிடித்து உண்ணுவர்.

பொதுவாக கருப்பு ஜாமுன் பல ஆரோக்கியதமான நன்மைகளைக் கொண்டிருப்பினும், வெள்ளை ஜாமூன் பல தனித்துவமான நன்மைகளைத் தருகிறது. எனவே கருப்பு ஜாமுனுக்குப் பதிலாக வெள்ளை ஜாமூன் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இதன் வளமான ஊட்டச்சத்துக்கள், குறைந்த கிளைசெமிக் குறியீடு, கல்லீரல் ஆரோக்கியம், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் செரிமான ஆரோக்கியம் போன்றவற்றிற்காக கூடுதல் நன்மைகளைத் தருகிறது. எனவ வெள்ளை ஜாமுனை அன்றாட உணவுமுறையில் சேர்த்துக் கொள்வது சுவையுடன் கூடிய ஆரோக்கியத்தைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Muscle Gain Vegetables: இனி ஜிம்மெல்லாம் வேணாம்! தசை வளர்ச்சியை அதிகரிக்க இந்த காய்கறிகளை சாப்பிடுங்க போதும்

Image Source: Freepik

Read Next

Muscle Gain Vegetables: இனி ஜிம்மெல்லாம் வேணாம்! தசை வளர்ச்சியை அதிகரிக்க இந்த காய்கறிகளை சாப்பிடுங்க போதும்

Disclaimer

குறிச்சொற்கள்