$
Benefits Of Jeera And Jaggery Water: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பராமரிக்கவும் பல்வேறு வகையான உணவு வகைகள் உள்ளன. இதில் இனிப்புப் பொருளான வெல்லத்தைக் கொண்டு, பொங்கல் மற்றும் வேறு சில இனிப்பு வகைகள் தயாரிக்க பயன்படுத்தலாம். மேலும் உணவில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உணவில் வாசனை மற்றும் சுவையைச் சேர்ப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இவை இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.
எனினும், வெல்லத்தை தனியாகவும், சீரகத்தைத் தனியாகவும் உட்கொள்வது வழக்கம். ஆனால், இவை இரண்டையும் ஒன்றாக உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு நன்மை பயக்கும் தெரியுமா? இதில் சீரகம் மற்றும் வெல்லம் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mango Chia Seeds: மேங்கோ ஜூஸ் உடன் இந்த ஒரு விதையை சேர்த்து குடிங்க. எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்!
வெல்லம் மற்றும் சீரகத்தின் ஊட்டச்சத்துக்கள்
வெல்லம் மாவுச்சத்து நிறைந்த சிறந்த இனிப்புப் பொருளாகும். இதில் அதிகளவிலான இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் மக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருள்கள் காணப்படுகிறது. சர்க்கரையை சுத்திகரிக்கும் போது பொதுவாக இழக்கப்படும் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற வைட்டமின்களையும் வெல்லம் தக்க வைக்கிறது.
அதே போல, சீரகத்திலும் வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் தினசரி தேவைப்படும் நார்ச்சத்துக்களில் நான்கில் ஒரு பங்கு சீரகத்தில் உள்ளது. இது தவிர, ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் சீரகத்தில் உள்ளது. சீரகம் தூள் அல்லது விதைகள் வடிவில் பயன்படுத்தப்படுகிறது.

வெல்லம் கலந்த சீரகத் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்
முதுகு வலிக்குத் தீர்வாக
முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் வெல்லம் மற்றும் சீரகத்தண்ணீரை அருந்தலாம். ஏனெனில், வெல்லம் மற்றும் சீரகம் கலந்த நீரில் அதிகளவிலான சத்துக்கள் உள்ளது. இவை முதுகுவலி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கிறது.
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
வெல்லம் மற்றும் சீரகத் தண்ணீர் அருந்துவது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை பலப்படுத்துகிறது. இதன் இயற்கையான பண்புகள், உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்துகிறது. மேலும் இது மற்ற நோய்த்தொற்றுக்கள் பரவுதலையும் கட்டுப்படுத்துகிறது.
மாதவிடாய் வலி தீர
மாதவிடாயின் போது பெண்கள் கடுமையான வலியைச் சந்திக்கின்றனர். இந்த சூழ்நிலையில் வலியைக் குறைக்க நாள்தோறும் குறைந்தது ஒரு கிளாஸ் வெல்லம்-ஜீரா தண்ணீரைக் குடிக்க வேண்டும். ஏனெனில் வெல்லம் மற்றும் சீரகம் இரண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. மேலும் இந்த கலவை பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையைக் கட்டுப்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: CWC Irfan’s Recipes: இர்ஃபானின் சுண்டல் மசாலா வடை ரெசிபி! இத ஒரு முறை ருசிச்சா திரும்ப திரும்ப கேப்பீங்க
தலைவலி பிரச்சனைக்கு
அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த பானமாகும். இவர்கள் தினமும் ஒரு கிளாஸ் வெல்லம் மற்றும் சீரகத் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைவலியிலிருந்து நிவாரணம் அளிப்பதுடன், மற்ற நோய்களிலிருந்தும் உடலைப் பாதுகாக்க உதவுகிறது.
இரத்த சோகை பிரச்சனைக்கு
வெல்லம் மற்றும் சீரக தண்ணீர் அருந்துவது இரத்த சோகையைக் குணமாக்க உதவுகிறது. ஏனெனில், வெல்லம், சீரகத் தண்ணீரில் போதுமான அளவிலான இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் ஏற்படும் இரத்தப் பற்றாக்குறையை நீக்கவும், இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை அகற்றவும் உதவுகிறது.

வெப்பநிலையை சீராக்க
சீரகம் மற்றும் வெல்லம் கலந்த பானம், உடல் வெப்பநிலையை சீராகக் குறைக்க உதவுகிறது. இது தலைவலி, காய்ச்சல், எரிச்சல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் தருகிறது. மேலும் இவை உடல் வலியையும் குறைக்க உதவுகிறது.
செரிமான ஆரோக்கியத்திற்கு
இந்த இரண்டு பொருள்களுமே வயிற்றுப் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. இவையிரண்டையும் தனித்தனியே உட்கொள்வது வாயு, மலச்சிக்கல், வயிற்று உப்புசம், வயிற்றுவலி போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. செரிமான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது இயற்கையான தேர்வாக அமைகிறது. மேலும் இது உடலை இயற்கையாகவே நச்சுத்தன்மையாக்கவும், உடலை ஆரோக்கியமாக மற்றும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
வெல்லம் மற்றும் சீரகத் தண்ணீர் தயாரிக்கும் முறை
முதலில் பாத்திரம் ஒன்றில் இரண்டு கப் அளவு தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் வெல்லம் பொடி சேர்த்து நன்கு கொதிக்க வைத்தால் வெல்லம் சீரகத் தண்ணீர் தயாராகி விட்டது. இதை ஆறிய பிறகு குடிக்கலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெல்லம் மற்றும் சீரகத் தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Peerkangai Benefits: பீர்க்கங்காயை சாதாரணமா நினைச்சிடாதீங்க! இதுல எக்கச்சக்க நன்மைகள் இருக்கு!
Image Source: Freepik