Health Benefits Of Mango Juice With Chia Seeds: இன்று மாம்பழத்தை விரும்பாதவர்கள் எவர் உள்ளனர். மாம்பழத்தின் மீதான ஆசை கோடைக்காலத்தை வரவேற்கத்தக்கதாக அமைகிறது. மாம்பழத்தை பல்வேறு வழிகளில் ருசிக்க விரும்பினார். இதில் மாம்பழ சாலட் அல்லது அதை அப்படியே பச்சையாக உண்ணுவர். சிலர் மாம்பழத்தை சாறாக எடுத்துக் கொள்வர்.
வெற்று மாம்பழ சாறு சுவையுடன் கூடிய ஆரோக்கிய நன்மைகளைத் தந்தாலும், இதனுடன் சியா விதைகளைச் சேர்த்து உட்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் சிறந்த தேர்வாக அமைகிறது. இதற்கு சில காரணங்கள் உள்ளன. இதில் மாம்பழ சாற்றில் சியா விதைகளைச் சேர்த்து உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Chia Seeds Benefits: குட்டி விதையில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்!
மாம்பழம் மற்றும் சியா விதைகளின் ஊட்டச்சத்துக்கள்
மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை பார்வை ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும். இதனுடன் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும் சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக வைட்டமின் ஈ சத்துக்களைக் கொண்டுள்ளது. மாம்பழச் சாறு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உடலில் நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
அதே போல, சியா விதைகளும் பல்வேறு ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்டுள்ளது. சியா விதைகளில் கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும்வைட்டமின் ஏ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நல்ல பல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்து ஆகும். இவை இரண்டையும் சேர்த்து உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல வித நன்மைகளைத் தருகிறது.
மாம்பழ சாறுடன் சியா விதைகள் உட்கொள்வதன் நன்மைகள்
சியா விதைகளிலிருந்து கிடைக்கும் நன்மைகள்
சியா விதைகளில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மூளை செயல்பாடு, வீக்கம் மற்றும் இதய ஆரோக்கியம் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாம்பழச் சாற்றில் சியா விதைகளைச் சேர்ப்பது, ஒமேகா-3 உட்கொள்ளலை அதிகரிப்பதுடன், இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது.
கூடுதலாக, சியா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. மாம்பழ சாற்றுடன் சியா விதைகளை எடுத்துக் கொள்ளல் வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த
சியா விதைகள் மற்றும் மாம்பழம் இரண்டுமே ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போரடும் ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. மேலும் இவை நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, மாம்பழத்தில் குவெர்செடின் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவை தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது. மேலும் சியா விதைகளில் உள்ள ஃபிளாவனாய்டுகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பினாலிக் கலவைகள் போன்றவை இந்த பாதுகாப்பு நன்மைகளை வழங்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Chia Seeds Water: இது தெரிந்தால் உங்கள் தினசரி உணவில் கட்டாயம் சியா விதை இருக்கும்!
நீரேற்றமிக்க பானம்
மாம்பழ சாறுடனான சியா விதைகள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவும் நீரேற்றத்தை அளிக்கிறது. இவை சுவைகளுடன் கூடிய நீரேற்றத்துடன் இருப்பதால், கோடைக்காலத்தில் இந்த சியா விதை மாம்பழ சாறு பானம் அனைவரும் விரும்பி அருந்தக்கூடிய பானமாக மாறுகிறது. அதே போல, சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி, உடலில் திரவ சமநிலையை சீராக வைக்க உதவுகிறது.
சிறந்த ஆற்றல் பானமாக
சியா விதைகள் மற்றும் மாம்பழங்களின் கலவையானது புரதம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட சீரான பானமாக கருதப்படுகிறது. இது நாள் முழுவதும் தேவையான நீடித்த ஆற்றலை வெளியிடுகிறது. இது பேக்கேஜ் செய்யப்பட்ட சர்க்கரை பானங்கள் போலல்லாமல், இயற்கையான சர்க்கரையைத் தரக்கூடிய பானமாகவும், உற்சாகம் மற்றும் கவனம் செலுத்துவதற்குத் தேவையான நிலையான ஆற்றலைத் தருகிறது.
இவ்வாறு சியா விதைகள் கலந்த பானத்தை உட்கொள்வது பல்வேறு வழிகளில் உடலுக்கு நன்மை பயக்கும். இந்த பானம் திறம்பட எடை மேலாண்மைக்கு உதவுகிறது. எனினும், சர்க்கரை நோயாளிகள் அல்லது வேறு சில உடல் பிரச்சனை உள்ளவர்கள் பகுதி அளவு அல்லது மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mango Lassi Benefits: சுவை தரும் மாம்பழ லஸ்ஸியில் இத்தனை நன்மைகளா?
Image Source: Freepik