மாம்பழத்தை விரும்பாதோர் எவரும் இருக்க மாட்டார்கள். நாவில் கரையும் சுவையுடன் கூடிய மாம்பழம் உடலுக்கு பல்வேறு நன்மைகலைத் தருகிறது. மாம்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் சுவையான பானங்களில் மாம்பழ லஸ்ஸியும் ஒன்று. மாம்பழ லஸ்ஸி உடலின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மாம்பழ லஸ்ஸியால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்போது காண்போம்.
மாம்பழ லஸ்ஸி
சுவையான, சதைப்பற்றுள்ள மாம்பழங்களில் மாம்பழ லஸ்ஸி தயார் செய்ய முடியும். இது உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் உணர்வைத் தருகிறது. இந்த மாம்பழ லஸ்ஸியானது, மாம்பழம், தயிர், மற்றும் சர்க்கரை போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது ஆரம்பத்தில் பஞ்சாபி மக்களால் உருவாக்கப்பட்டு, தற்போது உலகம் முழுவதும் பிரபலமான ஒன்றாக மாறியுள்ளது. தயிரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மாம்பழ லஸ்ஸியில், மாம்பழம், தயிர் உள்ளிட்டவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.

இந்த பதிவும் உதவலாம்: காய்ச்சல் விரைவில் குணமாக இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்!!!
மாம்பழ லஸ்ஸியின் ஊட்டச்சத்துக்கள்
உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் பானமான மாம்பழ லஸ்ஸி பலராலும் விரும்பி எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும், மாம்பழ லஸ்ஸியின் ஊட்டச்சத்துக்கள் முறையே 360 கலோரி, 46 கலோரி புரதம், 141 கலோரி கொழுப்பு மற்றும் 174 கலோரி கார்போஹைட்ரேட்டுகளையும் கொண்டுள்ளது.
இந்த வகையான ஊட்டச்சத்துகள் உடலில் வலிமையான தசைக்கும், எலும்பு வலிமைக்கும் உதவுகிறது. மேலும், இது உடலில் அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மாம்பழ லஸ்ஸியின் அற்புத நன்மைகள்
தயிர், சர்க்கரை, மாம்பழம் கொண்டு தயாரிக்கப்படும் மாம்பழ லஸ்ஸி அருந்துவதால் கிடைக்கும் பலன்களைக் காணலாம்.
நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட
லஸ்ஸியானது தயிரில் இருந்து தயாரிக்கப்படுவதால், இதில் லாக்டோபாகில்லி உருவாகிறது. இது பிறப்புறுப்பில் அமில கார நிலையை சமநிலையில் இருக்க உதவுகிறது. மேலும், இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் டி சத்துக்கள் மற்றும் லாக்டிக் அமிலம் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க 6 குளிர்கால பானங்கள்
எடை குறைப்பதற்கு மாம்பழ லஸ்ஸி
இந்த லாக்டோபாகில்லியானது உடலில் செரிமானத்திற்கு உதவக்கூடியதாக அமைகிறது. எனவே தான் இவற்றை பெரும்பாலும் உணவு உண்ட பிறகு எடுத்துக் கொள்வர். மாம்பழ லஸ்ஸியானது வயிறு உப்புசத்திற்கு ஒரு தீர்வாகக் கருதப்படுகிறது. மேலும், இதில் குறைவான கலோரிகள் இருப்பினும், அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. மாம்பழ லஸ்ஸியில் போதுமான அளவிலான நார்ச்சத்துக்கள், புரதம், ஸ்டார்ச் போன்றவை உள்ளன. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் மாம்பழ லஸ்ஸியை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.
இதய ஆரோக்கிய நன்மைகள்
மாம்பழத்தில் பெக்டின் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது, இதய நோயாளிக்கு இது பெரிதும் நன்மை பயக்கும். இரத்தத்தில் உள்ள கொழுப்புகளைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதய ஆரோக்கியத்தில் பெக்டின் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: வேர் காய்கறிகளும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும்
புற்றுநோயைத் தடுப்பதில் மாம்பழ லஸ்ஸி
மாம்பழத்தில் அஸ்கார்பிக் அமிலம், டெர்பெனாய்டுகள், கரோட்டினாய்டுகள், பாலிபினால்கள் போன்றவை உடலில் பல்வேறு வகையான புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இதில் உள்ள அதிக அளவிலான பெக்டினும் காரணமாகும்.
இரத்த சோகை குணமாக்க
மாம்பழ லஸ்ஸியில் உள்ள அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களாக இரும்பு, புரதம் மற்றும் கரோட்டின் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. மேலும், இரும்புச் சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையால் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Benefits of Mango Juice: மாம்பழ ஜூஸில் இத்தனை நன்மையா?
Image Source: Freepik