உடலில் தசை வலிமையை அதிகரிப்பதுடன் உடலில் உள்ள கொழுப்பையும் குறைக்க வேண்டும் என்பது பெரும்பாலான நபர்களின் முயற்சியாகும். வலிமையான தசை பெற உடற்பயிற்சி செய்வது மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். சரியான ஊட்டச்சத்து அளவுடன், உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தால் வலிமையான தசையை பெறலாம். இதில், உடல் தசை வலிமைக்கு அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ள வேண்டிய சில உணவுகளைக் காண்போம்.
தசை வலிமையை அதிகரிக்க உதவும் உணவுகள்
இயற்கையாக கிடைக்கும் உணவை எடுத்துக் கொள்வதன் மூலம், உடலை ஆரோக்கியத்துடனும், பாதுகாப்புடனும் வைத்துக் கொள்ள முடியும். மேலும், இதன் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்களும் இயற்கையாக கிடைத்து விடும். தசை வலிமையை அதிகரிக்க உதவும் சில உணவுகளை இதில் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இரவு உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 4 நார்ச்சத்து உணவுகள் இங்கே
பால் பொருள்கள்
உடல் தசையை வலிமையாக்குவதில் பால் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு பாலில் உள்ள புரதச்சத்துக்களே காரணம் ஆகும். பால் சார்ந்த பொருள்களில் கால்சியம் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவையே எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இவற்றைத் தவிர வைட்டமின் ஏ, பி2, பி3, பி6, பி13, டி, ஈ, கே, பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் காணப்படுகின்றன. இவை உடலில் தசை வலிமையடைவதற்கு உதவுகின்றன.
குயினோவா
சைவ உணவுப்பிரியர்களுக்கு புரதச்சத்து வழங்குவதில் குயினோவா முக்கியமான ஒன்றாகும். இது உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொண்ட தானிய வகைகளாகும். இதில் அனைத்து அத்தியாவசியமான அமினோ அமிலங்களும் உள்ளன. மேலும் இவை நல்ல கார்போஹைட்ரேட்டுகளையும் கொண்டிருக்கிறது. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: குயினோவா ஏன் சாப்பிட வேண்டும்?
பருப்பு வகைகள்
உடலின் முழு ஆரோக்கியத்திற்கும் உதவும் வகையில் பீன்ஸ் போன்ற பருப்பு வகைகள் முக்கியமான தாதுக்களைக் கொண்டுள்ளது. இது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதுடன், தசை வலிமைக்கும் உதவுகிறது. மேலும், இதன் கூடுதல் நன்மையாக பீன்ஸில் சோடியம் குறைவாக உள்ளது. இது கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை தசை வலிமைக்கு பெரிதும் உதவுகிறது.
கீரை வகைகள்
அன்றாட வாழ்வில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருள்களில் கீரைகளும் ஒன்று. தசை வளர்ச்சிக்குத் தேவையான இரும்பு மற்றும் நைட்ரேட்டுகளைக் கீரை வகைகள் கொண்டுள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதற்கு கீரை வகைகள் உதவுகின்றன.
முட்டை
புரோட்டீன்கள், அமினோ அமிலங்கள் போன்ற அத்திவாசிய ஊட்டச்சத்துக்களை முட்டை கொண்டுள்ளது. இவற்றில் இரும்புச்சத்து, வைட்டமின்கள், கால்சியம் போன்ற தாதுச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை தசை வலுப்பெறுவதற்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: தினையின் வகை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை ஆராய்வோம்?
இறைச்சி
கோழியின் நெஞ்சுப்பகுதியில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இதில் செல்களின் தேய்மானத்தைக் குறைத்து, புதுப்பிக்க உதவுகிறது. மேலும் இது உடல் தசைகளின் வலிமைக்கு உதவுகிறது.