Muscle Gain Vegetables: இனி ஜிம்மெல்லாம் வேணாம்! தசை வளர்ச்சியை அதிகரிக்க இந்த காய்கறிகளை சாப்பிடுங்க போதும்

  • SHARE
  • FOLLOW
Muscle Gain Vegetables: இனி ஜிம்மெல்லாம் வேணாம்! தசை வளர்ச்சியை அதிகரிக்க இந்த காய்கறிகளை சாப்பிடுங்க போதும்


Vegetables That Help In Muscle Building And Have High Protein Content: ஜிம்மிற்குச் சென்றால் தான் தசை வலுவடையும், அதிக எடையைத் தூக்கமுடியும் என்பதல்ல. சில ஆரோக்கியமான மற்றும் சரியான ஊட்டச்சத்து உள்ளடக்கமும் தசை வலுவடைய உதவுகிறது. தசை வளர்ச்சிக்கு புரதம் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே பலரும் தசை வளர்ச்சிக்கு புரதம் நிறைந்த இறைச்சிகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் போன்ற பொதுவான தசை வளர்ச்சியுடன் தொடர்புடைய உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர். அதே சமயம், தசையை வளர்க்கும் செயல்பாட்டில் சைவ உணவுகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் தசை வளர்ச்சிக்கு உதவும் காய்கறிகள் சிலவற்றைக் காணலாம்.

தசை வளர்ச்சிக்கு உதவும் ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள்

கீரை

பசலைக் கீரை ஒரு ஊட்டச்சத்து மிக்க பச்சை இலை காய்கறி வகையைச் சேர்ந்ததாகும். இதில் உள்ள அதிக சத்தான தன்மை காரணமாக இது சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இதில் கணிசமான அளவில் புரதம் உள்ளது. கூடுதலாக இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் தசை செயல்பாடு மற்றும் பழுதுபார்க்க முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே அன்றாட உணவில் கீரையை சமைத்தோ, சாலட்கள் அல்லது ஸ்மூத்திகள் வடிவத்திலோ எளிதாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mushroom Kothu Curry: மஷ்ரூம் கொத்து கரி இப்படி செஞ்சு பாருங்க.! சும்மா அப்படி இருக்கும்…

காளான்

நல்ல அளவிலான புரதச்சத்து மிகுந்த உணவுகளில் இதுவும் ஒன்று. இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் இன்னும் சில அத்தியாவசிய தாதுக்களும் நிறைந்துள்ளது. இவை தசை வளர்ச்சி மற்றும் பழுது பார்க்க முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களும் காளானில் நிறைந்துள்ளது. எனவே அன்றாட உணவில் காளான்களைச் சேர்த்துக் கொள்வது மிகுந்த நன்மை பயக்கும்.

முட்டைக்கோஸ்

இது மிதமான அளவில் புரதச்சத்து மிகுந்த காய்கறியாகும். இதில் வைட்டமின் கே, சி, கால்சியம், மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக் கொள்வது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதுடன், தசை செயல்பாட்டை பராமரிக்கவும் உதவுகிறது.

காலே

காலே புரதச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சிறந்த பச்சை இலைக் காய்கறி வகையைச் சார்ந்ததாகும். இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் தசை ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை அன்றாட உணவில் சாலட்கள், ஸ்மூத்திகள் போன்ற வடிவங்களில் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Dates Seeds Benefits: இது தெரிஞ்சா பேரீச்சம்பழ கொட்டையை தூக்கி போட மாட்டீங்க!

இளம் சோயாபீன்ஸ்

சோயாபீன்கள் முதிர்ச்சியடைவதற்கு முன்பு அறுவடை செய்யப்படுவது இளம் சோயாபீன்கள் அல்லது எடமேம் என அழைக்கப்படுகிறது. இவை புரதம் மிகுந்த ஆதாரமாகும். மேலும் இதில் ஃபோலேட், வைட்டமின் கே, நார்ச்சத்து போன்ற சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இவை தசை வளர்ச்சி மற்றும் மீட்சியை அதிகரிக்கிறது.

வெண்டைக்காய்

பொதுவாக வெண்டைக்காய், ஓக்ரா அல்லது பிந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது தசை வளர்ச்சிக்கு உதவக்கூடிய முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். மெலிந்த உடலைப் பராமரிப்பவர்கள், தசை வளர்ச்சியைத் தூண்ட விரும்புபவர்களுக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. மேலும் இதில் மிதமான அளவிலான புரதச்சத்துக்கள் தசைகளை பராமரிக்கவும், மீண்டும் உருவாக்கவும் உதவுகிறது. இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. மேலும் இதன் நார்ச்சத்து உள்ளடக்கம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது. இது தவிர, வெண்டைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பட்டாணி

புதிய பட்டாணி பல்வேறு ஊட்டச்சத்துக்களின் வளமான ஆற்றல் மையமாகக் கருதப்படுகிறது. இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது தசை வளர்ச்சியை ஆதரிக்கிறது. இதனை உணவில் வேகவைத்த அல்லது சூப்கள் போன்ற வடிவங்களில் எடுத்துக் கொள்ளலாம்.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி ஒரு சக்திவாய்ந்த காய்கறியாக செயல்படுகிறது. இது அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதிக புரதம் நிறைந்த காய்கறிகளில் ஒன்றாக அமைகிறது. மேலும் இதில் குறிப்பிடத்தக்க அளவிலான வைட்டமின் சி, கே, நார்ச்சத்துக்கள் மற்றும் ஃபோலேட் போன்றவை அதிகம் உள்ளது. இவை தசைகளை சரிசெய்வதற்கு அல்லது மீட்டெடுப்பதற்குத் தேவையான கொலாஜனை உற்பத்தி செய்கிறது. அன்றாட உணவில் ப்ரோக்கோலியை வேகவைத்த, வறுத்த அல்லது பொரியல் வடிவில் சேர்க்கலாம்.

இந்த வகை புரதச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது தசை வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் இதன் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Salt Reducing Tips: உணவில் உப்பு சேர்ப்பதைக் குறைக்க நீங்க செய்ய வேண்டியவை

Image Source: Freepik

Read Next

Spicy Milagai chutney: கார சாரமான ஆந்திரா ஸ்டைல் காய்ந்த மிளகாய் சட்னி செய்முறை!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version