Mushroom Kothu Curry: மஷ்ரூம் கொத்து கரி இப்படி செஞ்சு பாருங்க.! சும்மா அப்படி இருக்கும்…

  • SHARE
  • FOLLOW
Mushroom Kothu Curry: மஷ்ரூம் கொத்து கரி இப்படி செஞ்சு பாருங்க.! சும்மா அப்படி இருக்கும்…

மஷ்ரூம் கொத்து கரி ரெசிபி (Mushroom Kothu Curry Recipe)

மசாலாவுக்கான பொருட்கள்

மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்

பட்டை - 1 இன்ச்

கிராம்பு - 2

ஏலக்காய் -1

அண்ணாசி பூ - 1

சோம்பு - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

கறிவேப்பிலை - 1 கொத்து

முந்திரி - 10

கசகசா - 1 டீஸ்பூன்

கொத்து கரி செய்ய தேவையான பொருட்கள்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3

கறிவேப்பிலை - 1 கொத்து

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

பொடியாக நறுக்கிய தக்காளி - 2

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கஷ்மீரி மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்

வறுத்து அரைத்த மசாலா பொடி

தண்ணீர் - தேவையான அளவு

பொடியாக நறுக்கிய மஷ்ரூம் - 2 கப்

மல்லி இலை - 1 கைப்பிடி

இதையும் படிங்க: Nandu Rasam Recipe: உடம்புக்கு தெம்பை சேர்க்கும் நண்டு ரசம்.. இப்படி செஞ்சி பாருங்க…

மஷ்ரூம் கொத்து கரி செய்முறை

  • முதலில் கடாயில் மல்லி இஅலி சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாசி பூ, சோம்பு, மிளகு, சீரகம் சேர்த்து வதக்கவும்.
  • இதனுடன், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, முந்திரி சேர்த்து வதக்கவும்.
  • அடுப்பை அணைத்து, இதில் கசகசா சேர்த்து வதக்கவும்.
  • வதக்கிய பொருட்களை உலர விட்டு, இதனை மிக்ஸியில் மாற்றி பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • தற்போது கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் சோம்பு சேர்க்கவும். சோம்பு பொரிந்ததும், இதில் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் இதனுடன் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தற்போது இதில் கஷ்மீரி மிளகாய் தூள், வறுத்து அரைத்த மசாலா கேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
  • தற்போது தண்ணீர் சேர்த்து மசாலாவை கொதிக்க விடவும்.
  • நன்கு கொதித்து வரும் போது, மஷ்ரூம் சேர்த்து கலந்து விட்டு மூடி வைக்கவும்.
  • மஷ்ரூம் டெடி ஆனதும், மல்லி இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  • அவ்வளவு தான் ருசியான மஷ்ரூம் கொத்து கரி ரெடி. இதனை சப்பாத்தி, இட்லி, தோசை, சாதத்துடன் இணைத்து சாப்பிடலாம்.

மஷ்ரூம் நன்மைகள் (Mushroom Benefits)

இரத்த அழுத்தம் குறையும்

மஷ்ரூம் பொட்டாசியத்தின் வளமான மூலமாகும். பொட்டாசியம் இரத்த நாளங்களில் பதற்றத்தை குறைக்கிறது. மேலும் இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

மஷ்ரூம் அழற்சி எதிர்ப்பு விளைவு நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்திறனை பெரிதும் மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மஷ்ரூமில் அதிக அளவு செலினியம், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி6 உள்ளன. செலினியம் நம் உடலில் உள்ள செல் சேதத்தைத் தடுக்க உதவுகிறது, வைட்டமின் D செல் வளர்ச்சிக்கு உதவுகிறது, வைட்டமின் B6 நம் உடலில் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது. காளானில் உள்ள இந்த சத்துக்கள் அனைத்தும் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது.

எடை குறையும்

உடற்பயிற்சி மற்றும் பிற வாழ்க்கை முறை மாற்றங்களுடன் இணைந்து,, மஷ்ரூம் எடை இழப்பில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். மஷ்ரூம்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உயிரணுக்களின் பாதுகாப்பு அமைப்புகளை அதிகரிக்கலாம். இதனால் அழற்சி எதிர்ப்பு செயல்களை மேம்படுத்துகிறது மற்றும் உடல் பருமன் தொடர்பான உயர் இரத்த அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது.

மஷ்ரூம் ஊட்டச்சத்து விவரம்

மஷ்ரூம் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் பணக்கார, குறைந்த கலோரி மூலமாகும். அல்சைமர், இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற தீவிரமான சுகாதார நிலைமைகளை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கவும் அவை உதவக்கூடும். மேலும் இதில் செலினியம், செம்பு, தியாமின், வெளிமம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது.

Image Source: Freepik

Read Next

தொப்பை குறைய மாட்டேன்னு அடம் பிடிக்குதா.? இத சாப்பிடுங்க போதும்..!

Disclaimer