Mushroom Pasta Recipe In Tamil: நம்மில் பலருக்கு காளான் மற்றும் பாஸ்தா பிடித்த உணவுகளில் ஒன்று. ஆனால், இவற்றை நாம் எப்போதும் ஒரே மாதிரியாக சாப்பிட்டு நமக்கு சலித்து போயிருக்கும். அப்போ, இந்த முறை இப்படி காளான் பாஸ்தா செய்து பாருங்க. சுவை அட்டகாசமா இருக்கும். இது தயாரிக்க குறைந்த அளவே நேரம் செலவாகும். வாருங்க அட்டகாசமான காளான் பாஸ்தா செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பென்னே பாஸ்தா - 1 கிண்ணம்
காளான் - 400 கிராம்
வெண்ணெய் - 2 துண்டு
ஆலிவ் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பூண்டு - 6 பற்கள் பொடியாக நறுக்கியது
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
மைதா - 2 மேசைக்கரண்டி
பால் - 2 கப் காய்ச்சி ஆறவைத்தது
சீஸ் - 2 துண்டு
உப்பு - சிறிது
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
இட்டாலியன் சிசனிங் - 2 தேக்கரண்டி
இந்த பதிவும் உதவலாம்: Banana Parotta: ரெண்டு வாழைப்பழம் இருந்தால் போதும் அட்டகாசமான பரோட்டா செய்யலாம்!
காளான் பாஸ்தா செய்முறை:
- கொதிக்கின்ற தண்ணீரில் உப்பு மற்றும் பாஸ்தாவை சேர்த்து 15 நிமிடம் வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- கடாயில் வெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும்.
- பின்பு நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பிறகு நறுக்கிய காளான் மற்றும் உப்பு, மிளகு தூள், இட்டாலியன் சிசனிங் சேர்த்து 5 நிமிடம் அதிக தீயில் வேகவிடவும்.
- பின்பு மைதா சேர்த்து கலந்து பிறகு பால் சேர்த்து கலந்துவிடவும்.
- பிறகு சீஸ் துண்டுகளை சேர்த்து கலந்து வேகவிட்டு இறக்கினால் சுவையான காளான் பாஸ்தா தயார்!
பாஸ்தா ஆரோக்கிய நன்மைகள்:
நார்ச்சத்து: முழு கோதுமை பாஸ்தா நார்ச்சத்துக்கான ஒரு நல்ல மூலமாகும். இது செரிமானம், குடல் ஆரோக்கியம் மற்றும் எடை இழப்புக்கு உதவும்.
இரத்த சர்க்கரை கட்டுப்பாடு: பாஸ்தாவில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். பாஸ்தாவில் உள்ள முழு தானியங்கள் இன்சுலின் அளவைப் பராமரிக்கவும் குளுக்கோஸ் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.
இதய ஆரோக்கியம்: தேர்ந்தெடுக்கப்பட்டு கவனமாக தயாரிக்கப்படும்போது பாஸ்தா இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Thuvaiyal Omelette: வெறும் 2 முட்டை இருந்தா போதும் சுவையான துவையல் ஆம்லேட் செய்யலாம்!
எடை மேலாண்மை: கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக இருப்பதால் பாஸ்தா எடை இழப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். பசிக்காமல் இருக்க பாஸ்தா உங்களுக்கு முழுதாக உணரவும் உதவும்.
பிற நன்மைகள்: பாஸ்தா பொட்டாசியத்தின் ஒரு நல்ல மூலமாகும். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், பிடிப்புகள் மற்றும் தசை வலிகளைத் தடுக்கவும் உதவும். பாஸ்தா இரும்புச்சத்து மற்றும் பி வைட்டமின்களின் நல்ல மூலமாகும். பாஸ்தா செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பாஸ்தா உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், பாஸ்தா நிலையான ஆற்றலை வழங்கும்.
Pic Courtesy: Freepik