Banana Parotta Recipe In Tamil: பரோட்டா பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. என்னதான் பரோட்டா மைதா பயன்படுத்தி செய்து, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்தாலும் மாதம் ஒரு முறையாவது பரோட்டா சாப்பிட்டு தங்கள் ஆசையை தீர்த்துக்கொள்ளுபவர்கள் பலர். சூடான இரண்டு பரோட்டாவை பர பர என தட்டில் பிட்சு போட்டு.
அதன் மேல் சால்னா ஊற்றி 20 வினாடி ஊறவைத்து எடுத்து சாப்பிட்டால்… அடடே, கேட்கும் போதே நம்மில் பலரது நாவில் எச்சில் ஊறி இருக்கும். அந்தவகையில், பரோட்டா பிரியர்களுக்கான நாங்கள் ஒரு புதிய ரெசிபியை கூறுகிறோம். வாருங்கள், வாழைப்பழ பரோட்டா செய்வது எப்படி என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Schezwan Paneer: உங்களுக்கு பன்னீர் பிடிக்குமா? ஒரு முறை இப்படி செஸ்வான் பன்னீர் செய்து சாப்பிடுங்க!
தேவையான பொருட்கள்
பரோட்டா மாவு செய்ய
மைதா மாவு - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வாழைப்பழ கலவை செய்ய
வாழைப்பழம் - 3
பொடித்த வெல்லம் - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
முந்திரி பருப்பு நறுக்கியது
காய்ந்த திராட்சை - 10
ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
பிரட் தூள்
வாழைப்பழ பரோட்டா செய்முறை:
- பரோட்டா மாவு செய்ய ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்து, பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக 5 நிமிடம் பிசையவும்.
- பிசைந்த மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
- வாழைப்பழ கலவை செய்ய ஒரு பாத்திரத்தில் மசித்த வாழைப்பழம், பொடித்த வெல்லம், துருவிய தேங்காய், முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து பிரட் தூள் சேர்த்து சரியான பதத்திற்கு கலக்கவும்.
- அடுத்து பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கொள்ளவும்.
- பின்பு சப்பாத்தி கல்லில் எண்ணெய் தடவி மாவை வைத்து தேய்த்து, மாவின் மேல் வாழைப்பழ கலவையை வைத்து மாவை மடிக்கவும்.
- பானில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் செய்த பரோட்டாவை வைக்கவும்.
- அடுப்பை குறைந்த தீயில் வைத்து வாழைப்பழ பரோட்டாவை இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் வாழைப்பழ பரோட்டா ரெடி!.
வாழைப்பழ பரோட்டா பயன்கள்:
நார்ச்சத்து ஆதாரம்: முழு கோதுமையுடன் தயாரிக்கப்படும் போது, பரோட்டா உணவு நார்ச்சத்துக்கான நல்ல மூலமாக இருக்கும். இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் ஒழுங்கை ஊக்குவிக்கிறது.
சத்துக்கள் நிறைந்தது: முழு கோதுமை மாவில் பி வைட்டமின்கள், இரும்பு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
புரத உள்ளடக்கம்: மிதமான அளவு புரதத்தை வழங்குகிறது, குறிப்பாக புரதம் நிறைந்த பக்க உணவுகளுடன் இணைக்கும்போது.
ஆற்றல் ஆதாரம்: அதிக கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் நீடித்த ஆற்றலை வழங்க முடியும், இது சுறுசுறுப்பான நபர்களுக்கு ஏற்றதாக அமைகிறது.
Pic Courtesy: Freepik