idly vs dosa: இட்லி, தோசை, உத்தப்பம் போன்ற தென்னிந்திய உணவு வகைகளை விரும்புபவர்கள் இந்தியா முழுவதும் ஏராளமானோர் இருக்கின்றனர். இந்த உணவுகள் அனைத்தும் சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இது ஆரோக்கியமானதுதான் என குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம், அவற்றை உருவாக்கும் முறையும், அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களும் தான். இட்லி என்பது உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் உணவாகும். மேலும் இது நீராவி மூலம் தயாரிக்கப்படுகிறது. இட்லி மட்டுமல்ல இடியாப்பம் போன்ற அவித்த உணவுகளும் உடலுக்கு ஆரோக்கியம்தான்.
இட்லி மற்றும் தோசை இரண்டில் எது உடலுக்கு நல்லது?
நீராவி மூலம் தயாரிக்கப்படும் இந்த உணவுகள் சுவையாகவும் எளிதில் ஜீரணமாகவும் உதவியாக இருக்கும். இட்லியில் காணப்படும் ஊட்டச்சத்து காரணமாக, அதை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கிறது. சரி, இப்போது விஷயம் என்னவென்றால் இட்லி, தோசையில் எது நல்லது. இதில் ஏதும் பக்க விளைவுகள் இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க: Head Whorl: தலையில் ஒற்றை சுழி, இரட்டை சுழி அர்த்தம் என்ன? எத்தனை சுழிகள் வாழ்க்கைக்கு நல்லது?
இட்லி ஆரோக்கிய நன்மைகள்
- இட்லியில் நிறைய புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, எனவே இதை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது.
- இட்லி என்பது உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. உளுந்தம் பருப்பில் நார்ச்சத்து அதிகம்.
- இது தவிர, இதில் 26% புரதம், வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6 மற்றும் பல தாதுக்கள் உள்ளன.
- ஒரு நடுத்தர அளவிலான இட்லியில் சுமார் 2 கிராம் புரதம் உள்ளது, அதே சமயம் ஒரு சாதாரண நபருக்கு சுமார் 50 கிராம் புரதம் தேவைப்படுகிறது என்பது கவனிக்கத்த விஷயமாகும்.
எடை குறைய பெரும் உதவியாக இருக்கும்
- இட்லி தயாரிப்பதில் நீராவி பயன்படுத்தப்படுகிறது, எனவே அதில் உள்ள கலோரி உள்ளடக்கம் மிகக் குறைவு.
- ஒரு நடுத்தர அளவிலான இட்லியில் தோராயமாக 39 கலோரிகள் உள்ளன. இது தவிர, இட்லியில் கொலஸ்ட்ரால் அல்லது நிறைவுற்ற கொழுப்பு இல்லை, எனவே அதை சாப்பிடுவது ஆரோக்கியமானது.
- தினமும் 16 கிராமுக்கும் குறைவான நிறைவுற்ற கொழுப்பையும் 300 மில்லி கிராமுக்கும் குறைவான கொழுப்பையும் உட்கொள்வது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
இரத்த அழுத்தம் கட்டுப்பாடு
- இட்லி சாப்பிடுவது ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும், ஏனெனில் அதில் சோடியத்தின் அளவும் மிகக் குறைவு.
- ஒரு நடுத்தர அளவிலான இட்லியில் சுமார் 65 மில்லிகிராம் சோடியம் உள்ளது, அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 2300 மில்லி கிராமிற்கும் குறைவான சோடியத்தை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது.
- இது தவிர, இதில் குறைந்த கொழுப்பு இருப்பதால், இது இரத்த அழுத்த பிரச்சனையை ஏற்படுத்தாது.
நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள்
- இட்லி தயாரிப்பதில் உளுத்தம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது, மேலும் இதில் நிறைய நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
- காலை உணவில் இட்லி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
- ஒரு நடுத்தர அளவிலான இட்லியில் 2 கிராம் உணவு நார்ச்சத்து மற்றும் 8 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
- இது தவிர, இட்லியில் உள்ள புரதங்கள் தசைகளைச் சரிசெய்கின்றன மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆற்றலை வழங்குகின்றன.
- நார்ச்சத்து நமது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
தோசை ஆரோக்கிய நன்மைகள்
முன்னதாக இட்லியில் கூறிய அனைத்து நன்மைகளும் இதில் இருக்கிறது. இருப்பினும் இவற்றில் உள்ள வித்தியாசம் என்று பார்த்தால் இரண்டும் சமைக்கும் முறைதான். இட்லி ஆனது எண்ணெய், நெய் ஊற்றி தயாரிக்கப்படுகிறது.
- தோசை சாப்பிடுவது நீண்ட நேரம் வயிறு நிரம்பி உணர்வை அளிக்கும்.
- உடல் எடை கட்டுப்பாடுக்கு இது உதவியாக இருக்கும். அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க இது உதவும்.
- தோசையில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உங்கள் நாள் முழுவதும் தேவையான ஆற்றலை வழங்குகிறது.
- இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க தோசை உதவியாக இருக்கும்.
தோசை பக்க விளைவுகள்- புளித்த மாவு மற்றும் எண்ணெய்
- தோசை புளித்த மாவில் தயாரிக்கப்படுகிறது. மாவு புளித்தால் தான் தோசை ஊற்றப்படும் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
- புளித்த உணவில் ப்ரோபயோடிக்குகள் இருக்கும். இது ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகளை ஊக்குவிக்கிறது.
- செரிமான அமைப்பை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
- ஆரோக்கியமான எண்ணெய் உபயோகப்படுத்தினால் தோசையும் நல்ல உணவுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- தோசையில் பயன்படுத்தப்படும் எண்ணெயை பொறுத்து ஆரோக்கிய நன்மைகள் மாறுபடும்.
இட்லியா? தோசையா?
இப்படி இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியமானது தான். ஆனால் அனைத்து வகை உணவையும் ஒப்பிடும் போது அவித்த உணவுகள் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை அளிக்கும். அதன்படி இட்லிதான் பெஸ்ட். உடல் நலனுக்கு முடியவில்லை என்றால் இட்லி சாப்பிடும்படி தான் மருத்துவர்களே பரிந்துரைப்பார்கள் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
image source: freepik