Head Whorl: மனிதர்கள் பிறக்கும் போது அவர்களுக்கு என கை, கால், கண், உள் உறுப்பு என அனைத்தும் இருக்கோம். அப்படி இதனுடன் தான் ஒவ்வொரு மனிதர்களுக்கும் என தனித்துவ அடையாளங்கள் இருக்கும். இதில் பிரதான ஒன்று ஒவ்வொருவரின் கைரேகை ஆகும். மனிதர்கள் முகம் கூட ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஒத்தப்போக வாய்ப்பிருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் கைரேகை என்பது சமமாக இருக்க வாய்ப்பே இல்லை.
இப்படி கைரேகை போன்று தான் உடலில் இருக்கும் மச்சம் என்பதும். மச்சம் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு இடத்திலும் இருக்கும். இது சிலருக்கு ஒத்துப்போக வாய்ப்பிருக்கிறது. இதை அடுத்து குறிப்பிட்டால் தலையில் இருக்கும் சுழியை குறிக்கலாம். ஆண்களின் தலையில் தவறாமல் கண்டிப்பாக சுழி இருக்கும்.
தலையில் ஒற்றை சுழி நல்லதா? இரட்டை சுழி இருந்தால் நல்லதா?
பலருக்கு தலையில் ஒற்றை சுழி இருக்கும், சிலருக்கு இரட்டை சுழி, குறிப்பிட்டோருக்கு மூன்று சுழி கூட இருக்கக் கூடும். குழந்தை பிறக்கும் போது பெற்றோர்கள் கவனிக்கும் பல விஷயங்களில் ஒன்று தலையில் எத்தனை சுழிகள் இருக்கிறது என்று. சிலர் குழந்தைக்கு இரட்டை சுழி இருந்தால் மிகவும் சேட்டை செய்வார், கோபம் படுவார் என கூறுவார்கள்.
மேலும் படிக்க: அடுத்தவர் மீது கோபமாக இருந்தால் உடனே மாறிடுங்க... இல்லைன்னா இந்த ஆபத்தான நோய்கள் எல்லாம் வருமாம்..!
இரட்டை சுழி இருந்தால் அதிகம் சேட்டை செய்வார்களா? இரண்டு திருமணம் நடக்குமா?
மேலும் சில கிராமங்களில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணம் நடக்கும் என நக்கலாக கூறுவது உண்டு. இதுபோன்ற கிண்டல்கள் கிராமப்புறங்களில் அதிகமாக கூறுவது உண்டு. சரி, இந்த வதந்திகள் எல்லாம் உண்மையா, அறிவியல் பூர்வமான காரணங்கள் ஏதும் இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.
இரட்டை சுழி வர காரணம் என்ன?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஒரு ஆய்வின்படி, மக்களில் பெரும்பாலானோருக்கு ஒற்றை சுழி தான் இருக்கும். உலகளவில் பார்த்தால் வெறும் 5% நபர்களுக்கு மட்டுமே இரட்டை சுழி இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுவது உண்டு. அதேபோல் அறிவியல் படி, இரட்டை சுழி வருவதற்கு மரபணு முக்கிய காரணமாக இருக்கிறது. குடும்பத்தில் முன்னோர்களுக்கு யாருக்கேனும் இரட்டை சுழி இருந்தால் இது அடுத்த தலைமுறைக்கும் வர அதிக வாய்ப்பிருக்கிறது.
ஜாதகத்தின் படி இரட்டை சுழி ரகசியங்கள்
இரட்டை சுழி இருப்பவர்கள் தங்களை சுற்றி உள்ளவர்கள் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். பொறுமையாக இருப்பார்கள், நேர்மையானவர்கள், அன்பாகவே எப்போதும் இருப்பார்கள் போன்ற காரணங்கள் ஜோதிடத்தின்படி கூறுவது உண்டு. இதில் எத்தனை உண்மை இருக்கிறது என உறுதியாக கூற முடியாது.
மேலும் படிக்க: Frontal Baldness: ஆண்களின் முன் வழுக்கையில் உடனே முடி வளர இதை செய்தால் போதும்!
நிரூபிக்கப்பட்ட காரணம் ஏதும் இல்லை
கைரேகை, மச்சம் போல் தான் மனிதர்களின் தலையில் ஏற்படும் சுழி என்பதும். இதில் யோசிக்க ஒன்றும் வேண்டாம். தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணம், சேட்டை செய்வார்கள் என்பதெல்லாம் வதந்தியாக தான் பார்க்க முடிகிறது. நிரூபிக்கப்பட்ட காரணங்கள் ஏதும் இல்லை.
எனவே ஒற்றை சுழி இருந்தால் அது நடக்கும், இரட்டை சுழி இருந்தால் இது நடக்கும் என குழந்தை பிறக்கும் போதே எதையும் தீர்மானிக்காமல், குழந்தைக்கு நாம் காட்டுவது தான் உலகம். நல்லதை காண்பித்தால் நல்லபடியாக வளர்வார்கள் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை வாழுங்கள்.
image source: freepik