உச்சந்தலை அரிப்பால் அவதியா? அதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து தெரிஞ்சிக்கோங்க

How will the itching in the head stop: இன்று பலரும் முடி மற்றும் சருமம் தொடர்பான பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதிலும் வியர்வை மற்றும் அழுக்கு காரணமாக உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இதில் தலையில் அரிப்பு ஏற்பட காரணங்கள் மற்றும் அதைத் தவிர்க்க என்ன செய்வது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
உச்சந்தலை அரிப்பால் அவதியா? அதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து தெரிஞ்சிக்கோங்க


How to stop scratching your head: பருவகால மாற்றத்தின் போது பலரும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். முடி உதிர்வு, முடி உடைதல், நரைமுடி பிரச்சனை மற்றும் உச்சந்தலை அரிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் எழலாம். இதில் உச்சந்தலை அரிப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. கடுமையான வெயில், வியர்வை மற்றும் இன்னும் பல காரணங்களால் உச்சந்தலையில் அரிப்பு பிரச்சனைகள் ஏற்படலாம். அதிலும் சில நேரங்களில் இந்த அரிப்பு அதிகமாகி, ஒருவர் மீண்டும் மீண்டும் தலையை அரிக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இதனால் எரிச்சல், முடி உதிர்தல் மற்றும் தோல் தொற்றுக்கு கூட வழிவகுக்கலாம். உண்மையில், கோடையில் தூசி, வியர்வை மற்றும் அழுக்கு போன்ற பல்வேறு பிரச்சனைகள் உச்சந்தலையை பாதிக்கிறது. இவை உச்சந்தலையை எண்ணெய் பசையாக மாற்றுகிறது. இது அரிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. இது தவிர தோல் ஒவ்வாமை, பொடுகு, பூஞ்சை தொற்று, தவறான முடி தயாரிப்புகளைப் பயன்படுத்துவது மற்றும் முடியை சரியாகப் பராமரிக்காதது போன்றவை தலையில் அரிப்புக்கான பொதுவான காரணங்களாக அமைகிறது.

இது குறித்து ஜெய்ப்பூரில் உள்ள டாக்டர் மஹிமாஸ் டென்டல் & காஸ்மெடிக் ஹப்பில் உள்ள மருத்துவ அழகுசாதன நிபுணர் டாக்டர் மஹிமா சர்மா சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: இரவில் உச்சந்தலையில் அரிப்பு ஏற்பட என்ன காரணம்.?

உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்

  • தலையில் அரிப்பு ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களில் ஒன்றாக அமைவது பொடுகு. இதனால், தலையின் தோல் வறட்சியடைந்து, செதில்களாக மாறுகிறது. இதனால் அரிப்பு, எரிச்சல் மற்றும் சில நேரங்களில் முடி உதிர்தல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
  • உச்சந்தலையில் ஈரப்பதம் இல்லாதபோதும் அரிப்பு ஏற்படுவது இயற்கையானதாகும். ஆனால், அடிக்கடி ஷாம்பு செய்வது அல்லது குளிர்ந்த காலநிலையில் இந்த பிரச்சனை மேலும் அதிகரிக்கிறது.
  • சில சமயங்களில், பூஞ்சை தொற்று காரணமாகவும் தலையின் தோல் பகுதி பாதிக்கப்படுகிறது. இது சிறு குழந்தைகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு வகை பூஞ்சை தொற்று ஆகும்.
  • உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவதற்கு பேன்களும் ஒரு பொதுவான காரணமாக அமைகிறது. இது முடியின் வேர்களில் இருந்து இரத்தத்தை உறிஞ்சுவதுடன், கடுமையான அரிப்புக்கு வழிவகுக்கிறது.
  • சிலருக்கு ஹேர் கலர் அல்லது ஹேர் ஜெல் போன்ற கூந்தல் பொருட்களால் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுகிறது. இது போன்ற ரசாயனங்கள் உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
  • அரிக்கும் தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சி போன்ற தோல் நிலைகளும் உச்சந்தலையைப் பாதித்து அதிகப்படியான அரிப்பை ஏற்படுத்தக்கூடும்.
  • மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவை சருமத்தில் நேரடி விளைவை ஏற்படுத்துகிறது. சிலர் அதிக மன அழுத்தத்தின் கீழ் உச்சந்தலையை மீண்டும் மீண்டும் அரிப்பை ஏற்படுத்தும்.

உச்சந்தலை அரிப்பு நீங்க என்ன செய்வது?

எண்ணெய் மசாஜ்

கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், அல்லது தேயிலை மர எண்ணெய் போன்ற எண்ணெய்களைக் கொண்டு வாரத்திற்கு 1-2 முறை தலைக்கு மசாஜ் செய்வது உச்சந்தலை ஈரப்பதமாக வைக்கவும், பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றுக்களைக் குறைக்கவும் உதவுகிறது.

சரியான ஷாம்பூவைப் பயன்படுத்துதல்

அரிப்பு ஏற்பட்டால் சல்பேட் மற்றும் பாரபென் இல்லாத ஷாம்பூவைப் பயன்படுத்தலாம். இதற்கு பொடுகு எதிர்ப்பு ஷாம்புகள் நன்மை பயக்கும்.

வேம்பு நீர்

பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட வேம்பு, தலை அரிப்புக்கு உதவுகிறது. இதற்கு வேப்பிலைகளை வேகவைத்து, தண்ணீரை குளிர்வித்து, தலைமுடியைக் கழுவுவதன் மூலம் பிரச்சனையை குணப்படுத்தலாம். இதன் பூஞ்சை தொற்றிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Itchy Scalp Remedies: உச்சந்தலை அரிப்பால் அவதியா? இந்த ஐந்து பொருள்கள் போதும்!

கற்றாழை ஜெல்லின் பயன்பாடு

கற்றாழை ஒரு இயற்கையான குளிர்ச்சியூட்டும் பொருள் ஆகும். இவை உச்சந்தலையை குளிர்வித்து ஈரப்பதமாக்கவும், இதை நேரடியாக உச்சந்தலையில் தடவுவது அரிப்பு மற்றும் எரிச்சலைப் போக்கவும் உதவுகிறது.

சரிவிகித உணவை எடுத்துக் கொள்வது

உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அவசியமாகும். எனவே அன்றாட உணவில் பச்சை காய்கறிகள், பழங்கள், நட்ஸ் மற்றும் போதுமான அளவு தண்ணீரைச் சேர்த்துக் கொள்ளலாம்.

மன அழுத்தத்தைத் தவிர்ப்பது

அதிகளவிலான மன அழுத்தம் முடி ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இந்நிலையில், யோகா, தியானம் மற்றும் பிராணயாமம் போன்ற பயிற்சிகளைச் செய்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைப்பது உச்சந்தலையின் நிலையை மேம்படுத்துகிறது.

தூய்மையை கவனித்துக் கொள்வது

தலைமுடியைத் தொடர்ந்து கழுவுவது, சீப்பு மற்றும் துண்டுகளைச் சுத்தமாக வைத்திருப்பது மற்றும் மற்றவர்களின் தலைமுடி உபகரணங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது போன்றவை அனைத்தும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

முடிவுரை

உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாகும். எனினும், பொடுகு முதல் தொற்று வரை இதற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும் சில பொதுவான முன்னெச்சரிக்கைகள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் மூலம் இதைத் தடுக்கலாம். இந்த பிரச்சனை மீண்டும் மீண்டும் வந்தால் அல்லது அதிகரித்து காணப்பட்டால், நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். தலையின் தோல் உடலின் மற்ற பகுதிகளைப் போலவே உணர்திறன் கொண்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Scalp Itching: உச்சந்தலை அரிப்பில் இருந்து நிவாரணம் பெற இந்த விஷயங்களை முயற்சிக்கவும்!

Image Source: Freepik

Read Next

சொன்னா நம்பமாட்டீங்க… படிகாரக்கல்லை இப்படி யூஸ் பண்ணுனா முடி தாறுமாறா வளரும்!

Disclaimer

குறிச்சொற்கள்