How to make Walnut Halwa Recipe: நம்மில் பலருக்கு அல்வா பிடிக்கும். கருப்பட்டி அல்வா, கேரட் அல்வா, பாதாம் அல்வா, கோதுமை அல்வா, தேங்காய் பால் அல்வா என பல வகையான ஹல்வா கிடைக்கிறது. நாம் சாப்பிடும் உணவையே கொஞ்சம் ஆரோக்கியமாக நீங்கள் சாப்பிட நினைத்தால் நாங்கள் உங்களுக்கு புதிய ரெசிப்பி ஒன்றை கூறுகிறோம். வால்நட்ஸ் ஐ வைத்து அல்வா செய்து சாப்பிடலாம். வாருங்கள் ஆரோக்கியம் நிறைந்த மற்றும் சுவையான வால்நட்ஸ் அல்வா செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வால்நட்ஸ் - 3 கப் (400 கிராம்)
நெய் - 4 மேசைக்கரண்டி
இனிப்பில்லாத கோவா - 150 கிராம்
காய்ச்சி ஆறிய பால் - 500 மில்லி
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
இந்த பதிவும் உதவலாம்: Masala Rice: இந்த 4 மசாலா இருந்தா போதும் சுவையான மசாலா சாதம் தயார்!
ரப்டி செய்ய
பால் - 250 மில்லி
இனிப்பில்லாத கோவா - 50 கிராம்
சர்க்கரை - 4 தேக்கரண்டி
குங்கும பூ கலந்த பால் - 1 டம்ளர்
ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
வால்நட்ஸ் அல்வா செய்முறை:
- அல்வா செய்ய முதலில், வால்நட்ஸ்'ஸை கொர கொரப்பாக அரைக்கவும்.
- கடாயில் நெய் ஊற்றி, அரைத்த வால்நட்ஸ்'ஸை போட்டு வறுக்கவும்.
- அடுத்து இதில் கோவா சேர்த்து கிண்டவும். பின், இதில் பால் ஊற்றி கிளறவும்
- பால் வற்றும் வரை 20 நிமிடம் கிண்டவும்.
- அடுத்து சர்க்கரை சேர்த்து, அல்வா கெட்டியாகும் வரை கிண்டவும்.
- கடைசியாக இதில் நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்.
- டின்'னில் பட்டர் பேப்பர் போட்டு, அல்வாவை போட்டு சமன் செய்து, 3 மணி நேரம் வைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம்: Paasi Paruppu Halwa: வெறும் ஒரு கப் பாசி பருப்பு இருந்தால் போதும்.. சுவையான அல்வா ரெடி!!
ரப்டி செய்ய
- கடாயில் பால் ஊற்றி கொதிக்கவைக்கவும்.
- பால் சிறிது வற்றியதும், இதில் கோவா சேர்த்து கிளறவும்.
- சர்க்கரை சேர்த்து கிளறவும்.
- அடுத்து இதில் குங்கும பால் ஊற்றி கிண்டவும்.
- கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்.
வால்நட்ஸ் அல்வா சாப்பிடுவதன் நன்மைகள்:
இதய ஆரோக்கியம்: வால்நட்ஸ் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இது வீக்கத்தைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்க உதவும்.
மூளை ஆரோக்கியம்: வால்நட்ஸ் பெரும்பாலும் "மூளை உணவு" என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், அவை மூளை செயல்பாட்டை மேம்படுத்தி அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தைக் குறைக்கும்.
எடை மேலாண்மை: வால்நட்ஸில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதம் அதிகமாக உள்ளது. இது குறைந்த கலோரிகளை சாப்பிடும்போது உங்களை முழுதாக உணர உதவும்.
புற்றுநோய் பாதுகாப்பு: வால்நட்ஸ் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: Green Gram Vada: காஃபி டீக்கு ஏற்ற பச்சைப்பயறு வடை செய்வது எப்படி?
குடல் ஆரோக்கியம்: வால்நட்ஸ் நல்ல குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
வால்நட்ஸின் நன்மைகள்:
வால்நட்ஸ் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
வால்நட்ஸ் வகை 2 நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும்.
வால்நட்ஸ் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தும்.
Pic Courtesy: Freepik