Kalkandu Pongal in Tamil: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. தைத்திருநாள் என்றாலே, தமிழ் மக்களுக்கு தனி சிறப்பு தான். விவசாயம், சூரியன், கால்நடைகள் என அனைத்தையும் வணங்குவதே இந்த நோக்கம். தைத்திருநாள் மூன்று நாட்கள் கொண்டாடப்படும். முதல் நாளில் விவசாயம் மற்றும் சூரியனுக்கானது. இந்த நாளில் அதிகாலையில், சூரியனை வணங்கி பொங்கல் வைப்பது வழக்கம்.
சிலர் சர்க்கரை பொங்கல் வைப்பார்கள். இன்னும் சிலர் வெள்ளை பொங்கல் வைப்பார்கள். எப்பவும் ஒரே மாதரி பொங்கல் வைக்க உங்களுக்கு சலித்து போயிருந்தால் இந்த முறை கல்கண்டு பொங்கல் செய்து அசத்துங்கள். இது சர்க்கரை பொங்கலை விட மிகவும் அருமையாக இருக்கும். வாருங்கள் கல்கண்டு பொங்கல் செய்வது எப்படி என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Butter Garlic Egg: வெறும் 2 முட்டை போதும்.. அட்டகாசமான பட்டர் கார்லிக் முட்டை செய்யலாம்!
தேவையான பொருட்கள்:
அரிசி - 1/2 கப்
கல்கண்டு - 200 கிராம்
பால் - 1 கப்
ஏலக்காய் தூள் - சிறிது.
முந்திரி - ஒரு கைப்பிடி
உலர்ந்த திராட்சை - ஒரு கைப்பிடி
நெய் - 2 கப்
கல்கண்டு பொங்கல் செய்முறை:
- கடாயில் தண்ணீர் மற்றும் கல்கண்டு சேர்த்து, கல்கண்டு கரையும் வரை கொதிக்கவிட்டு, எடுத்து வைக்கவும்.
- பச்சரிசியை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில், தண்ணீர் மற்றும் பால் சேர்த்து சூடாக்கவும்.
- இதில் ஊறவைத்த அரிசியை சேர்த்து வேகவிடவும்.
- அரிசி குலைய வெந்தவுடன், இதில் செய்த கல்கண்டு பாகை வடிகட்டி ஊற்றவும்
- அனைத்தும் நன்றாக திரண்டு வரும்வரை வேகவிடவும்.
- இதில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராக்ஷை சேர்த்து இறக்கினால் கல்கண்டு பொங்கல் தயார்.
கல்கண்டு ஆரோக்கிய நன்மைகள்:
செரிமானம்: கல்கண்டு செரிமான நொதிகளின் சுரப்பைத் தூண்டி செரிமானத்திற்கு உதவும்.
ஆற்றல்: கல்கண்டு விரைவான ஆற்றல் ஊக்கத்தையும் நிலையான ஆற்றல் நிலைகளையும் வழங்க முடியும்.
இரத்த சர்க்கரை: கல்கண்டு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: கல்கண்டுவில் துத்தநாகம் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
பல் ஆரோக்கியம்: கல்கண்டு மற்ற இனிப்புகளைப் போல பல் சிதைவுக்கு பங்களிக்காது.
சுவாச ஆரோக்கியம்: கல்கண்டு இருமல், சளி மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்.
நச்சு நீக்கம்: கல்கண்டு இயற்கை நச்சு நீக்கியாக செயல்படும்.
எடை இழப்பு: கல்கண்டு உடல் எடையை குறைக்க உதவும்.
இரத்த அழுத்தம்: கல்கண்டு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
மூட்டு வலி: கல்கண்டு மூட்டு வலியைப் போக்க உதவும்.
தீக்காயங்கள்: கல்கண்டு சிறிய தீக்காயங்களை ஆற்ற உதவும்.
தொண்டை புண்: கல்கண்டு தொண்டை புண்களை ஆற்ற உதவும்.
Pic Courtesy: Freepik