Butter Garlic Eggs Recipe In Tamil: விறுவிறுப்பான காலத்தில், நாம்மில் பலருக்கு சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் கூட நேரம் கிடைப்பதில்லை. ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அந்தவகையில், நெடியில் செய்யக்கூடிய புரதம் நிறைந்த ஒரு காலை உணவுக்கான ரெசிபி பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
சட்டுனு தயாராகும் பட்டர் கார்லிக் முட்டை எப்படி செய்வது என இங்கே பார்க்கலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வாருங்கள் பட்டர் கார்லிக் முட்டை எப்படி செய்யணும் என இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டை கலவை செய்ய:
முட்டை - 8
வெண்ணெய் - சிறிது.
உப்பு - 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
சில்லி பிளேக்ஸ் - 1/4 தேக்கரண்டி
பூண்டு - 1 தேக்கரண்டி நறுக்கியது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் பூண்டு சாஸ் செய்ய:
வெண்ணெய் - 5 கியூப்ஸ்
முழு பூண்டு நறுக்கியது
உப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி
சோள மாவு - 1 தேக்கரண்டி
காய்ச்சி ஆறவைத்த பால் - 1 கப்
இட்டாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது - சிறிது
இந்த பதிவும் உதவலாம்: Pasi Paruppu Adai: புரோட்டீன் சத்து நிறைந்த பாசிப்பருப்பு அடை.. எப்படி செய்வது?
பட்டர் கார்லிக் முட்டை செய்முறை:
- முட்டைகளை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றவும்.
- அடுத்து உப்பு, மிளகு தூள், சில்லி பிளேக்ஸ், நறுக்கிய பூண்டு சேர்க்கவும். முட்டை கலவையை நன்றாக அடித்து தனியாக வைக்கவும்.
- ஒரு பரந்த கடாயில், எண்ணெய், வெண்ணெய் சேர்த்து, கடாயில் சமமாக பரப்பவும்.
- முட்டை கலவையை கடாயில் ஊற்றவும்.
- தீயை அதிகப்படுத்தி, முட்டையை துருவல் செய்ய ஆரம்பிக்கவும்.
- முட்டைகள் துருவியதும், அதை ஒரு தட்டில் மாற்றி தனியே வைக்கவும்.
- ஒரு பரந்த கடாயில், வெண்ணெய் சேர்த்து, பான் முழுவதும் பரப்பவும்.
- நறுக்கிய பூண்டு சேர்த்து வெண்ணெயில் வறுக்கவும்.
- பிறகு உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இதனுடன் சோள மாவு சேர்த்து மீண்டும் கலக்கவும். காய்ச்சி ஆறிய பால் சேர்த்து நன்றாக கிளறவும்.
- இட்டாலியன் மசாலா மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
- இப்போது துருவிய முட்டைகளை சேர்த்து நன்கு கலக்கினால், சுவையான பட்டர் கார்லிக் முட்டை தயார். இதை ரொட்டிகளுடன் பரிமாறவும்.
முட்டை சாப்பிடுவதன் நன்மைகள்:
நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்
நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு. ஒரு ஆய்வின் படி, 2 வேகவைத்த முட்டைகளை 6 வாரங்களுக்கு உட்கொண்டால், அது உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
முட்டையில் இயற்கையாகவே கொலஸ்ட்ரால் நிறைந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், இதன் நுகர்வு இரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கிறது என்று அர்த்தமல்ல. முட்டையை சாப்பிடுவது 70 சதவிகிதம் பேருக்கு கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காது, அதேசமயம் 30 சதவிகிதம் பேர் மட்டுமே சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பை அதிகரிக்க முடியும்.
கண்களுக்கு நல்லது
இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் ஏ ஏராளமாக உள்ளது, இது கண்களுக்கு நன்மை பயக்கும். பார்வையை மேம்படுத்த முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Oats Cutlet: ஒரு கப் ஓட்ஸ் இருந்தால் போதும்.. சுவையான கட்லெட் செய்யலாம்!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன்கள் மற்றும் பல வைட்டமின்கள் ஏராளமாக உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.
எலும்புகளை பலப்படுத்துகிறது
வைட்டமின் டி முட்டையில் அதிக அளவில் உள்ளது. எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க இது ஒரு சூப்பர்ஃபுட் என்பதை நிரூபிக்க முடியும்.
மூளைக்கு நன்மை பயக்கும்
முட்டையில் கோலின் உள்ளது. மூளைக்கு உதவியாக இருக்கும். இது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும். அதனால் தான் தினமும் முட்டை சாப்பிடுவது மூளையை கூர்மையாக்கும் என்று கூறப்படுகிறது.
Pic Courtesy: Freepik