How to make Poha Nuggets Recipe at Home: மழைக்காலத்தில் சூடான தேநீருடன் மொறு மொறுப்பான ஸ்னாக்ஸை விட சிறந்த விஷயம் வேறு எதுவாக இருக்கும். மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைக்கு நாம் எப்போதும் புதிய புதிய ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கவே விரும்புவோம். ஆனால், செய்த உணவையே மீண்டும் மீண்டும் செய்தால் நமக்கும், சாப்பிடுபவர்களுக்கும் சலித்து போய்விடும்.
அந்தவகையில், ஆரோக்கியத்திற்கு நல்லது என கருதப்படும் ஓட்ஸ் வைத்து ஒரு சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபி பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். நம்மில் பெரும்பாலானோர் சமைக்க நேரம் இல்லாத நேரத்தில் ஓட்ஸ் உப்புமா செய்வோம். ஆனால், இந்த முறை உப்புமா இல்லை ஓட்ஸ் வைத்து கட்லெட் செய்யலாம். வாருங்கள் சூப்பரான மொறு மொறு ஓட்ஸ் கட்லெட் எப்படி செய்வது என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Paneer Biryani: நீங்க சைவமா? சிக்கன் சுவையை மிஞ்சும் பன்னீர் பிரியாணி செய்யலாமா?
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 கப்
உருளைக்கிழங்கு - 2 வேகவைத்தது
பட்டாணி - 1/4 கப் வேகவைத்தது
கடலை பருப்பு - 1/4 கப் வேகவைத்தது
வெங்காயம் - 1 நறுக்கியது
குடைமிளகாய் - 1/4 கப் நறுக்கியது
கேரட் - 1 நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
கொத்தமல்லி இலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
ஆம்சூர் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
முக்கிய கட்டுரைகள்
ஓட்ஸ் கட்லெட் செய்முறை:
- முதலில், கடலை பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- கடலை பருப்பு, உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணியை குக்கரில் சமைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, கடலை பருப்பை சேர்க்கவும்.
- பின்பு வெங்காயம், குடைமிளகாய், கேரட், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரக தூள், ஆம்சூர் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் ஊறவைக்கவும்.
- இப்போது, பானில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- கையில் எண்ணெய் தடவி கட்லெட் கலவையை எடுத்து தட்டி பானில் வைத்து இரண்டு பக்கமும் பொன்னிறத்தில் பொரித்து எடுத்தால் சுவையான ஓட்ஸ் கட்லெட் தயார்!.
இந்த பதிவும் உதவலாம்: Karuvattu Kulambu: ஒரு முறை இப்படி கருவாட்டு குழம்பு வையுங்க.. தெருவே மணக்கும்!
ஓட்ஸ் சாப்பிடுவதன் நன்மைகள்
- ஓட்ஸில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இது அதிகமாக சாப்பிடும் வாய்ப்பைக் குறைக்கிறது.
- ஓட்ஸில் உள்ள பீட்டா-குளுக்கன் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
- ஓட்ஸில் உள்ள சத்துக்களால் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படும்.
- ஓட்ஸில் உள்ள டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் தூக்கத்தை வரவழைக்க உதவுகிறது.
- ஓட்ஸில் உள்ள வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ், இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை இரத்த சோகையை ஈடுசெய்கிறது.
- ஓட்ஸில் உள்ள கலவைகள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. இதனால், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
- ஓட்ஸில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- வெறும் வயிற்றில் ஓட்ஸ் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
Pic Courtesy: Freepik