Paneer Biryani: நீங்க சைவமா? சிக்கன் சுவையை மிஞ்சும் பன்னீர் பிரியாணி செய்யலாமா?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர் பிரியாணி வீட்டிலேயே செய்வது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
  • SHARE
  • FOLLOW
Paneer Biryani: நீங்க சைவமா? சிக்கன் சுவையை மிஞ்சும் பன்னீர் பிரியாணி செய்யலாமா?


Paneer Biryani In Tamil: நம்மில் பலருக்கு பிரியாணி என்ற பெயரை கேட்டதும் நாவில் எச்சில் ஊறும். ஏனென்றால், மக்களில் 90 சதவீதம் பிரியாணி பிரியர்கள் என்று கூறினால் அதில் எந்த சந்தேகமும் இல்லை. எப்பவும் மட்டன், சிக்கன், மீன் என ஒரே மாதிரியான பிரியாணி செய்து சலித்து போய்விட்டதா?

அப்போ இந்த முறை சிக்கனை வைத்து சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் பன்னீர் பிரியாணி செய்து கொடுங்கள். வீட்டில் உள்ளவர்கள் உங்க சமையல் திறமையை பார்த்து அசந்து போய்விடுவார்கள். வாருங்கள், குக்கரில் பன்னீர் பிரியாணி செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mughlai Chicken Biryani: வீட்டிலேயே அட்டகாசமான முகலாய் சிக்கன் பிரியாணி செய்யலாமா? 

தேவையான பொருட்கள்:

குங்கும பால் செய்ய

சூடான பால் - 1 மேசைக்கரண்டி
குங்கும பூ - 3 ithal

பன்னீர் ஊறவைக்க

கெட்டி தயிர் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
ஆம்சுர் தூள் - 1 தேக்கரண்டி
கசூரி மேத்தி - சிறிது
பன்னீர் - 400 கிராம்
உப்பு - சிறிது

சாதம் சமைக்க

பாஸ்மதி அரிசி - 1 கப் ( 250 கிராம் )
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
பட்டை - 1 துண்டு
அன்னாசி பூ - 1
ஜாவித்ரி - 1
உப்பு - சிறிது

பிரியாணி செய்ய

நெய் - 2 மேசைக்கரண்டி
பிரியாணி இலை - 1
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 4
கிராம்பு - 5
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
புதினா இலை - ஒரு கொத்து 
கொத்தமல்லி இலை - ஒரு கொத்து

இந்த பதிவும் உதவலாம்: குழந்தைகள் விரும்பும் சுவையான, ஹெல்த்தியான செவ்வாழை அம்மினி கொழுக்கட்டை! இப்படி செஞ்சி கொடுங்க! 

பன்னீர் பிரியாணி செய்முறை:

Paneer Butter Masala Biryani Recipe by Archana's Kitchen

  • பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  • ஒரு சிறிய கிண்ணத்தில் வெதுவெதுப்பான பால் எடுத்து குங்குமப்பூ போட்டு வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் கெட்டித் தயிர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மாங்காய் தூள், உப்பு, கசூரி மேத்தி சேர்த்து நன்கு கலந்து இதனுடன் நறுக்கிய பன்னீர் துண்டுகளை போட்டு கலந்து 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  • ஒரு அகல பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை கொதிக்கவிட்டு ஊற வைத்த பாஸ்மதி அரிசியை போடவும்.
  • இதனுடன் கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ மற்றும் உப்பு சேர்த்து முழுமையாக சாதத்தை வேகவைக்கவும்.
  • சாதம் நன்கு வெந்தவுடன் வடித்து எடுத்து வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  • வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • இதன் பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வதங்கிய பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தனியாத்தூள், கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து வதக்கவும்.
  • வதங்கிய பின் ஊற வைத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
  • பன்னீர் மசாலா வதங்கியபின் இதில் மேல் வேக வைத்த சாதத்தை பரப்பி போடவும்.
  • இதன்மேல் குங்குமப் பால், சிறிதளவு கொத்தமல்லி மற்றும் புதினா இலை போட்டு பாயில் பேப்பரை கொண்டு மூடவும்.
  • குறைந்த தீயில் 10 நிமிடங்களுக்கு தம் செய்து எடுத்தால், சுவையான பன்னீர் பிரியாணி தயார்!.

இந்த பதிவும் உதவலாம்: Millet Bisi Bele Bath: இந்த முறை அரிசி வேண்டாம்.. தினையை வைத்து பிசிபெல்லா பாத் செய்து கொடுங்க! 

பன்னீர் ஆரோக்கிய நன்மைகள்:

Paneer Malai Makhani Biryani Recipe

எலும்புகள் வலுவாக இருக்கும்: பனீரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. இது எலும்புகள் பலவீனமடைவதைத் தடுக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைகிறது: பன்னீர் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது: பனீரில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது சாதாரண இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்: பனீரில் உயர்தர புரதம் உள்ளது. இது சருமம் மற்றும் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
தசைகளை வலிமையாக்குகிறது: நீங்கள் ஜிம் அல்லது வேறு ஏதேனும் கடுமையான உடற்பயிற்சி செய்தால், நீங்கள் சீஸ் சாப்பிட வேண்டும்.
வலி நிவாரணம்: மூட்டுவலி போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது. செலினியம் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உங்களை நீண்ட நேரம் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

Pic Courtesy: Freepik

Read Next

Side Effects of Tea: தினமும் இரு கப் டீ குடிப்பது உண்மையில் ஆரோக்கியத்தை பாதிக்குமா?

Disclaimer