Kongunadu Vellai Biryani Recipe In Tamil: நம்மில் பலருக்கு பிரியாணி என்ற பெயரை கேட்டதும் நாவில் எச்சில் ஊறும். ஏனென்றால், மக்களில் 90 சதவீதம் பிரியாணி பிரியர்கள் என்று கூறினால் அதில் எந்த சந்தேகமும் இல்லை. எப்பவும் மட்டன், சிக்கன், மீன் என ஒரே மாதிரியான பிரியாணி செய்து சலித்து போய்விட்டதா?
அப்போ இந்த முறை சிக்கனை வைத்து சுவையான ஹோட்டல் ஸ்டைலில் கொங்குநாடு வெள்ளை பிரியாணி செய்து கொடுங்கள். வீட்டில் உள்ளவர்கள் உங்க சமையல் திறமையை பார்த்து அசந்து போய்விடுவார்கள். வாருங்கள், கொங்குநாடு வெள்ளை பிரியாணி செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Machine Coffee: அடிக்கடி நீங்க மெஷின் காபி குடிப்பவரா? இதனால் எவ்வளவு பிரச்சனை வரும் தெரியுமா?
தேவையான பொருட்கள்
மசாலா விழுது அரைக்க
சின்ன வெங்காயம் - 20
பூண்டு - 12 பற்கள்
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 4
சோம்பு - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 3
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
உப்பு - 1 தேக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
பிரியாணி செய்ய
சீரகசம்பா அரிசி - 1/2 கிலோ
மட்டன் - 1 கிலோ
நெய் - 2 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பிரியாணி இலை - 2
பட்டை - 1 துண்டு
அன்னாசிப்பூ
ஏலக்காய் - 3
கல்பாசி - 3 துண்டு
மராத்தி மொக்கு - 2
ஜாவித்ரி
கிராம்பு - 5
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 கீறியது
புதினா - 1/2 கட்டு
கொத்தமல்லி - 1/2 கட்டு
தண்ணீர் - 3 கப் (250 மி.லி கப்)
எலுமிச்சைபழச்சாறு - 1 பழம்
இந்த பதிவும் உதவலாம்: Tea and Biscuit: டீயில் பிஸ்கட் நனைத்து சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? இந்த தகவல் உங்களுக்கு தான்!
கொங்குநாடு வெள்ளை பிரியாணி செய்முறை:
- சீரகசம்பா அரிசியை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
- மசாலா விழுது அரைக்க மிக்ஸியில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, உப்பு, மற்றும் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- மட்டனுடன் அரைத்த மசாலா விழுது, தயிர் சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.
- குக்கரில் நெய், நல்லெண்ணெய், பிரியாணி இலை, பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய், கல்பாசி, மராத்தி மொக்கு, ஜாவித்ரி, கிராம்பு சேர்த்து வறுக்கவும்.
- அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்பு ஊறவைத்த மட்டனை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
- பிறகு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு குக்கரை மூடி மிதமான தீயில் 6 விசில் வரும் வரை வேகவிடவும்.
- அடுத்து குக்கரை திறந்து ஊறவைத்த சீரகசம்பா அரிசியை சேர்த்து கலந்து விட்டு எலுமிச்சைபழச்சாறை சேர்த்து மீண்டும் கலக்கவும்.
- ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி 5 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும். பின்பு அடுப்பை அணைத்து விட்டு 10 நிமிடம் தம்மில் வைக்கவும்.
- இப்போது, சுவையான கொங்குநாடு வெள்ளை பிரியாணி தயார்.
இந்த பதிவும் உதவலாம்: மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வாழைக்காய் மசாலா சாதம்! இப்படி செஞ்சா மிச்சமே இருக்காது
பிரியாணி சாப்பிடுவதன் நன்மைகள்:
- இது உங்கள் உடலுக்கு ஊட்டமளிக்கும் ஊட்டச்சத்துக்களின் கலவையுடன் கூடிய எளிதான மற்றும் சுவையான உணவாகும்.
- மஞ்சள், பூண்டு, இஞ்சி, இலவங்கப்பட்டை, கிராம்பு போன்ற பல்வேறு மசாலாப் பொருட்கள் மற்றும் பிரியாணியில் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான பொருட்களால் மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களை கவர்ந்த பிரியாணி. இது அழற்சி எதிர்ப்பு பண்புகள், புற்றுநோய் எதிர்ப்பு, இரத்த சர்க்கரையை குறைக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- பிரியாணி கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களில் சமநிலையை வழங்குகிறது, இது ஆரோக்கியமான நபருக்கு ஏற்றது.
- ஒரு வெஜிடபிள் பிரியாணி, போதுமான அளவு காய்கறிகளுடன் சமைத்தால், சரியான அளவு நார்ச்சத்து கிடைக்கும். இது உங்கள் குடல் இயக்கத்திற்கு அவசியம் மற்றும் உங்கள் எடையை நிர்வகிக்க உதவுகிறது.
- அசைவ பிரியாணி என்பது உங்கள் தினசரி வைட்டமின் பி 12 இன் இயற்கையான மூலமாகும், இது பொதுவாக சைவ உணவு உண்பவர்கள் மற்றும் அசைவ உணவு உண்பவர்களுக்கு குறைவாகவே உள்ளது.
- கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால், ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை மட்டுப்படுத்துவதால், இது உங்களுக்கு முழுமை மற்றும் திருப்தி உணர்வைத் தருகிறது.
Pic Courtesy: Freepik