இந்த ஒரு மசாலா மட்டும் அரைச்சி வச்சிக்கோங்க; பாய் வீட்டு பிரியாணி டு குருமா ஈசியா செஞ்சிடலாம்...!

பாய் வீட்டு பிரியாணி மற்றும் அசைவ குழம்பு வகைகளுக்கு என எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அது என்னவோ தெரியல பாய் அம்மா உங்க வீட்டு பிரியாணி வாசம் எங்க வீட்டுல என்ன செஞ்சாலும் வரமாட்டேங்குது என பக்கத்து வீட்டில் இனி வேதனைப்பட வேண்டாம். இந்த ஒரு மசாலாவை அரைத்து வைத்துக் கொண்டால் போதும். வெஜ், நான் வெஜ் பிரியாணி, குருமா, வறுவல் என அனைத்திலும் சேர்ந்து வீட்டில் இருப்பவர்களை குஷிப்படுத்தலாம்.
  • SHARE
  • FOLLOW

தேவையான பொருட்கள்:

காய்ந்த மிளகாய் – 3
பிரியாணி இலை – 7
தனியா – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
ஷா ஜீரா – 1 டீஸ்பூன்
ஜாவித்ரி – 3
இலவங்கப்பட்டை – 2 அங்குலம் அளவு
ஜாதிக்காய் – 1
கிராம்பு – 1 டீஸ்பூன்
கருப்பு ஏலக்காய் – 3
நட்சத்திர சோம்பு – 3
ஏலக்காய் – 10
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்

செய்முறை:

  • இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக வறுத்து, நன்றாக ஆறவைத்து பொடியாக அரைத்து எடுத்து ஒரு டபபவில் வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு, தேவையான போது எடுத்து பயன்படுத்துங்கள்.
  • பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் இவை மூன்றையும் வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். உங்களால் வெயிலில் காயவைக்க வசதி இல்லை ஏற்றல் ஒன்றும் பிரச்சனை இல்லை அடுப்பில் வாணலியை வைத்து நன்கு சூடுபடுத்தவும்.
  • வாணலி நன்கு சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஏலக்காய், கிராம்பு மற்றும் பட்டை இவை முன்றியும் சேர்த்து ஒரு 5 நிமிடம் கவனமாக கருகிவிடாமல் வறுக்கவும்.
  • பிறகு அதனை மிக்சி ஜாரில் செய்து நன்கு பவுடர் போல் அரைத்து எடுத்தால் போதும் பிரியாணிக்கு சுவையூட்டும், பிரியாணி மசாலா தயார்.

பயன்படுத்தும் முறை:

  • ஒருகிலோ அரிசி, ஒரு கிலோ மட்டன் என்றால் நீங்கள் தாராளமாக இந்த பிரியாணி மசாலாவை இரண்டு ஸ்பூன் வரை பிரியாணி செய்ய பயன்படுத்தலாம்.
  • அதுவே ஒரு கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ சிக்கன் என்றால் இந்த பிரியாணி மசாலாவை ஒரு ஸ்பூன் வரை பிரியாணி செய்ய பயன்படுத்தலாம்.
  • அதுவே வெஜ் பிரியாணி, கிரேவி, குருமா மற்றும் குருமா குழம்பு இது போன்று செய்கிறீர்கள் என்றால் இந்த பிரியாணி மசாலாவை 1/2 ஸ்பூன் வரை பயன்டுத்தி கொள்ளலாம்.
  • மற்றபடி மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா இவையெல்லாம் செய்யும் போது இந்த பிரியாணி மசாலாவை 1/4 ஸ்பூன் அளவு பயன்படுத்தலாம்.

Read Next

உங்களுக்கு லோ பிபியா? உடனே அதிகரிக்க நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள்.. நிபுணர் சொன்னது

Disclaimer

குறிச்சொற்கள்