Prawn Biryani recipe in Tamil: நம்மில் பலருக்கு பிரியாணி என்ற பெயரை கேட்டதும் நாவில் எச்சில் ஊறும். ஏனென்றால், மக்களில் 90 சதவீதம் பிரியாணி பிரியர்கள் என்று கூறினால் அதில் எந்த சந்தேகமும் இல்லை. எப்பவும் மட்டன், சிக்கன் என ஒரே மாதிரியான பிரியாணி செய்து சலித்து போய்விட்டதா?
அப்போ, இந்த முறை இறாலை வைத்து சுவையான ஹோட்டல் ஸ்டைலில் பிரியாணி செய்து கொடுங்கள். வீட்டில் உள்ளவர்கள் உங்க சமையல் திறமையை பார்த்து அசந்து போய்விடுவார்கள். வாருங்கள், குக்கரில் பிரான் பிரியாணி செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Kongunadu Vellai Chicken Biryani: அருமையான கொங்குநாடு வெள்ள சிக்கன் பிரியாணி.! இப்படி செஞ்சி பாருங்க..
தேவையான பொருட்கள்:
இறால் - 1 கிலோ
பாஸ்மதி அரிசி - 2 கப்
நெய் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
பிரியாணி இலை
அன்னாசி பூ
வெங்காயம் - 4 நீளமாக நறுக்கியது
தக்காளி - 3 நறுக்கியது
உப்பு
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
புதினா இலை
தேங்காய் பால் - 2 கப் நீர் சேர்த்தது
மசாலா விழுது அரைக்க
பூண்டு - 12 பற்கள்
இஞ்சி - 2 இன்ச் துண்டு நறுக்கியது
சின்ன வெங்காயம் - 10
துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
காய்ந்த மிளகாய் - 5
புதினா இலை
கொத்தமல்லி இலை
இறால் பிரியாணி செய்முறை:

- பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
- இறால்'லை சுத்தம் செய்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு கழுவவும்.
- சுத்தம் செய்த இறால்'லை, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து ஊறவைக்கவும்.
- மிக்ஸியில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து, நன்கு விழுதாக அரைக்கவும்.
- தேங்காயை அரைத்து, பிரியாணி'க்கு தேவையான தேங்காய் பால் தயார் செய்யவும்.
இந்த பதிவும் உதவலாம் : Mushroom Biryani Recipe: செஃப் ஆஃப் தி வீக் வாங்கிய திவ்யா துரைசாமி.. கை கொடுத்த மஷ்ரூம் பிரியாணி..
- பிரஷர் குக்கர்'ரில், நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன் நிறமானதும், அரைத்த மசாலா விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு மசிந்த பின், இதில் உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
- அடுத்து இதில் ஊறவைத்த இறால் சேர்த்து கிண்டவும்.
- குறைந்த தீயில், தேங்காய் பால் ஊற்றி கிளறவும்.
- அடுத்து இதில் ஊறவைத்த அரிசி சேர்த்து கிண்டவும்.
- குக்கர்'ரை மூடி, ஆவி வந்ததும், வெயிட் போட்டு 8 நிமிடம் வேகவைக்கவும்.
- குக்கர்'ரின் பிரஷர் இறங்கியதும், திறந்தால் சுவையான இறால் பிரியாணி தயார்.
இந்த பதிவும் உதவலாம் : Gilli Chicken Biryani: விடிவி கணேஷ் இப்படி தான் கில்லி சிக்கன் பிரியாணி செஞ்சாரு..
இறால் பிரியாணி ஆரோக்கிய நன்மைகள்:

புரதம்
இறால் புரதத்தின் ஒரு நல்ல மூலமாகும், இது நீங்கள் முழுதாக உணரவும் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
இறாலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, இது கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
வைட்டமின் ஈ
இறாலில் வைட்டமின் ஈ உள்ளது, இது சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
துத்தநாகம் மற்றும் அயோடின்
இறால்கள் துத்தநாகம் மற்றும் அயோடின் ஆகியவற்றின் நல்ல மூலமாகும், இது எடை இழப்புடன் தொடர்புடையது.
இந்த பதிவும் உதவலாம் : Kollu Sadam: உடல் எடையை சட்டுனு குறைக்க உதவும் கொள்ளு சாதம் செய்வது எப்படி?
பாஸ்பரஸ்
இறால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான பாஸ்பரஸின் நல்ல மூலமாகும்.
ஆக்ஸிஜனேற்றிகள்
இறாலில் செலினியம் மற்றும் அஸ்டாக்சாண்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு அமைப்பு
இறாலில் வைட்டமின்கள் மற்றும் துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஈ போன்ற தாதுக்கள் உள்ளன, அவை நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கின்றன.
Pic Courtesy: Freepik