What can i eat to increase my low blood pressure: உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கம் போன்றவற்றின் காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் இரத்த அழுத்த பிரச்சனையும் அடங்கும். அதாவது உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். பொதுவாக உடலின் சாதாரண இரத்த அழுத்தம் 120/80 mmHg அளவாக இருக்கலாம். ஆனால், இந்த அளவில் 90/60 mmHg இரத்த அழுத்தத்திற்குக் கீழே குறையும் போது, அது குறைந்த இரத்த அழுத்தம் என்றழைக்கப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது போல, குறைந்த இரத்த அழுத்தமும் பல கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். இரத்த அழுத்தத்தில் ஏற்படும் திடீர் வீழ்ச்சி காரணமாக பலவீனம், மயக்கம், தலைச்சுற்றல், குமட்டல், மங்கலான பார்வை மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை ஒருவர் சந்திக்கலாம். எனவே குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டால், உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதில் குறைந்த இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து உணவியல் நிபுணர் அபர்ணா மேத்யூனன் அவர்கள் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: சம்மர்ல அதிக இரத்த அழுத்தத்தைக் குறைக்க நீங்க ஃபாலோ பண்ண வேண்டியது இது தான்!
குறைந்த இரத்த அழுத்தத்தை உடனடியாக குணப்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள்
எலுமிச்சைப் பழச்சாறு
சில சமயங்களில், உடலில் நீர்ச்சத்து குறைவதன் காரணமாக இரத்த அழுத்தம் குறைக்கப்படலாம். எனவே, குறைந்த இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் எப்போதும் நீரேற்றமாக இருப்பது அவசியமாகும். இவர்கள் நாள் முழுவதும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். திடீரென இரத்த அழுத்தம் குறையும் போது எலுமிச்சை நீர், தேங்காய் நீர், சாறு அல்லது லஸ்ஸி போன்றவற்றையும் சாப்பிடலாம். இதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
முக்கிய கட்டுரைகள்
முட்டை
முட்டைகளை சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இதில் புரதம், ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை குறைந்த இரத்த அழுத்தப் பிரச்சினையில் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் பி-12 ஆனது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதன் நுகர்வு இரத்த சோகை மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
டார்க் சாக்லேட்
குறைந்த இரத்த அழுத்த பிரச்சனைக்குத் தீர்வாக டார்க் சாக்லேட்டை சாப்பிடலாம். இதில் ஃபிளாவனால்கள் உள்ளது. இவை இரத்த அழுத்தத்தை சாதாரணமாக வைத்திருக்க உதவுகிறது. இரத்த அழுத்த அளவு திடீரெனக் குறைந்தால், டார்க் சாக்லேட் சாப்பிடுவது உடனடி நிவாரணத்தை அளிக்கிறது. எனினும், இது குறைந்த அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Low Blood Pressure: உங்களுக்கு லோ பிரஷர் இருக்கா? உடனடி நிவாரணம் பெற இந்த பானங்களை குடியுங்க!
காபி
குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள் காபி அருந்தலாம். இதில் உள்ள காஃபின் ஆனது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இரத்த அழுத்தம் திடீரெனக் குறைக்கும் போது காபி குடிப்பது உடனடி நிவாரணத்தை அளிக்கிறது. குறிப்பாக கருப்பு காபி குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் நுகர்வு இதயத் துடிப்பை மேம்படுத்த உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தை சாதாரணமாகிவிடும். காபி கிடைக்கவில்லை எனில், தேநீர் குடிப்பதும் ஒரு நல்ல தேர்வாக அமையும்.
சீஸ்
குறைந்த இரத்த அழுத்தம் கொண்டவர்கள் சீஸ் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். உண்மையில், குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டால், அதிக உப்பு உள்ள உணவுகளை உட்கொள்ள பரிந்துரைக்கபப்டுகிறது. இத்தகைய சூழ்நிலையில், திடீரென இரத்த அழுத்தம் குறைந்தால், பனீர் உப்பு அல்லது சாட் மசாலா சேர்த்து சாப்பிட வேண்டும். இவை புரதம் மற்றும் ஃபோலேட் நிறைந்த மூலமாகும். இது இரத்த அழுத்தத்தை சாதாரணமாக வைத்திருக்க உதவுகிறது. இதை உட்கொள்வதன் மூலம் வலிமையைப் பெறலாம்.
குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டால், மேலே கூறப்பட்டுள்ள உணவுகளை உட்கொள்வது விரைவில் நிவாரணத்தை அளிக்கிறது. எனினும், நிலை மிகவும் மோசமாக இருப்பின் தாமதிக்காமல் உடனடியாக ஒரு மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: அடிக்கடி கை, கால்களில் நடுக்கம் வருதா? லேசுல விடாதீங்க.. அதுக்கு இந்த பிரச்சனை கூட காரணமா இருக்கலாம்
Image Source: Freepik