How To Make Hyderabadi Biryani: பிரியாணி பிடிக்காத அசைவ விரும்பிகள் இருக்கவே முடியாது. பிரியாணி என்றாலே நம்மில் பலருக்கு நாவில் எச்சில் ஊரும். இந்த உணவை இப்போதுதான் சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை பிரியாணிக்கு எப்போதும் கிடையாது. நினைத்த நேரம் எல்லாம் நாம் பிரியாணி சாப்பிடுவோம். அந்தவகையில், சுவையான ஆந்திரா ஸ்டைல் மட்டன் பிரியாணி எப்படி செய்யணும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்.
எலுமிச்சைபழச்சாறு - 1 பழம்.
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்.
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்.
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்.
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது.
தயிர் - 2 ஸ்பூன்.
பப்பாளி விழுது - 5 ஸ்பூன்.
புதினா இலை - சிறிது.
கொத்தமல்லி இலை - சிறிது.
வறுத்த வெங்காயம் - 1 ஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு..
எண்ணெய் - 4 ஸ்பூன்.
வெங்காயம் - 8 மெல்லியதாக நறுக்கியது.
பாஸ்மதி அரிசி - 1 கிலோ.
எண்ணெய் - 1 ஸ்பூன்.
நெய் - 3 ஸ்பூன்.
பட்டை - 2.
கிராம்பு - 2.
ஏலக்காய் - 1.
பிரியாணி இலை - 1.
புதினா இலை - ஒரு கொத்து.
கொத்தமல்லி இலை - ஒரு கொத்து.
குங்கும பூ பால் - சிறிது.
சப்பாத்தி மாவு - 1 கப்.
இந்த பதிவும் உதவலாம் : Beetroot Jam: குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் ஜாம் எப்படி செய்யணும் தெரியுமா? இதோ ரெசிபி!
மட்டன் பிரியாணி செய்முறை :

- முதலில், மட்டனை ஊறவைக்க வேண்டும். அதற்கு, மட்டன், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைபழச்சாறு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், பச்சை மிளகாய், தயிர், பப்பாளி விழுது, புதினா இலை, கொத்தமல்லி இலை, வறுத்த வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 12 மணி நேரம் பிரிட்ஜ்'ஜில் ஊறவைக்கவும்.
- இதையடுத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி, மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- இதற்கிடையில், பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊறவைக்கவும். தண்ணீர் கொதித்ததும், உப்பு சேர்த்து, அரிசியை போட்டு முக்கால் பாகத்திற்கு வேகவைக்க்வும்.
- தம் பிரியாணி செய்ய, ஒரு அகல பாத்திரத்தில், எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போடவும்.
- அடுத்து ஊற வைத்த மட்டன் துடுகளை போட்டு, 5 நிமிடம் மட்டும் வேகவைத்து அடுப்பை நிறுத்தவும்.
- மட்டன் கலவை மீது, புதினா இலை, கொத்தமல்லி இலை, வேகவைத்த சாதம் பாதி, குங்கும பால் பாதி ஊற்றவும்.
இந்த பதிவும் உதவலாம் : தேங்காய், தக்காளி சட்னியை மிஞ்சும் சுவையில் சூப்பரான புதிய சட்னி ரெசிபி!
- மீதமுள்ள சாதம் மற்றிம் குங்கும பால் ஊற்றவும்.
- இதன் மேல் கொத்தமல்லி இலை, புதினா இலை வறுத்த வெங்காயம் போட்டு தட்டால் மூடவும். பின், ஓரங்களை சப்பாத்தி மாவால் சீல் செய்யவும்.
- பிரியாணி பாத்திரத்தை தாவா மீது வைத்த 1 மணி நேரம் தம் செய்தால், ஹைதெராபாத் மட்டன் தம் பிரியாணி தயார்.
Pic Courtesy: Freepik