Expert

Beetroot Jam: குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் ஜாம் எப்படி செய்யணும் தெரியுமா? இதோ ரெசிபி!

  • SHARE
  • FOLLOW
Beetroot Jam: குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் ஜாம் எப்படி செய்யணும் தெரியுமா? இதோ ரெசிபி!

பீட்ரூட் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது நம்மில் பலருக்கும் தெரியும். அந்தவகையில், வீட்டிலேயே சுவையான பீட்ரூட் ஜாம் எப்படி செய்வது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Ulundu Choru Recipe: எலும்புகளை வலுவாக்கும் உளுந்து சாதம் எப்படி செய்யணும் தெரியுமா?

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது).
பேரிட்சை பழம் - 10 (விதைகள் நீக்கியது).
நெய் - தேவையான அளவு.
சர்க்கரை - 1 கப்.
முந்திரி, பாதாம் - 1/4 கப் (பொடித்தது).

செய்முறை:

  • பீட்ரூட் ஜாம் செய்ய முதலில் பீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
  • பேரிட்சை பழத்தை விதைகளை நீக்கிவிட்டு இரண்டையும் குக்கரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதை ஆறவைத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
  • ஒரு கடாயில் சர்க்கரை, (வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சர்க்கரை, பிரவுன் சுகர் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்) சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைந்து வந்தவுடன், அதில் அரைத்த பீட்ரூட் கலவையை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
  • நன்றாக கலந்துவிட்டு, தண்ணீர் வற்றி ஜாம் பதம் வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.

இந்த பதிவும் உதவலாம் : Carrot 65 Masala: சிக்கன் 65 தெரியும்… அதென்ன கேரட் 65? இதோ உங்களுக்கான ரெசிபி!

  • தேவைப்படும்போது இடையில் நெய் சேர்த்துக்கொள்ளவேண்டும். இறக்கும்போது பொடித்து வைத்த முந்திரி பாதாம் சேர்த்து இறக்கினால் சூப்பர் சுவையான பீட்ரூட் ஜாம் தயார்.

பீட்ரூட் சாப்பிடுவதன் நன்மைகள்:

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதில் நைட்ரேட் உள்ளது. இது உடலில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்திக்கு உதவுகிறது. நைட்ரிக் ஆக்சைடு உடலில் உள்ள இரத்த நாளங்களை தளர்த்தும் வகையில் செயல்படுகிறது.

எடையைக் கட்டுப்படுத்த உதவும்

பீட்ரூட் சாற்றில் மிகக் குறைந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் காணப்படுகின்றன. இது எடையைக் குறைக்க உதவுகிறது. இதை காலையில் குடிப்பதால், நாள் முழுவதும் உடலுக்கு சக்தி கிடைக்கும்.

கல்லீரலுக்கு நன்மை பயக்கும்

பீட்ரூட்டில் உள்ள பீடைன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரலில் கொழுப்பு அமிலங்கள் சேர விடாது. இதனால், கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : வீட்டிலேயே சுவையான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?

பொட்டாசியத்தின் நல்ல ஆதாரம்

பீட்ரூட்டில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது உடலின் தசைகள் மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் உடலில் பொட்டாசியம் அளவு சமமாக இருக்கும்.

இதயத்திற்கு நன்மை பயக்கும்

பீட்ரூட் சாறு குடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சகிப்புத்தன்மையை அதிகரிக்கும்

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால், உடலில் பிளாஸ்மா நைட்ரேட் அளவு அதிகரிக்கிறது. இது உடலின் சகிப்புத்தன்மையையும் அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : ஓட்ஸ் கஞ்சி வேணாம், ஓட்ஸ் லட்டு செய்யுங்க! குழந்தைங்க வேணாம்னு சொல்ல மாட்டாங்க

புற்றுநோய் அபாயத்தை குறைக்க

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பீட்ரூட் சாற்றில் காணப்படுகின்றன. இது புற்றுநோயின் அபாயத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

வீட்டிலேயே சுவையான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?

Disclaimer

குறிச்சொற்கள்