ஓட்ஸ் கஞ்சி வேணாம், ஓட்ஸ் லட்டு செய்யுங்க! குழந்தைங்க வேணாம்னு சொல்ல மாட்டாங்க

  • SHARE
  • FOLLOW
ஓட்ஸ் கஞ்சி வேணாம், ஓட்ஸ் லட்டு செய்யுங்க! குழந்தைங்க வேணாம்னு சொல்ல மாட்டாங்க

இது போன்ற ஏராளமான நன்மைகளைப் பெற நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். ஆனால், இதனை பலரும் உணவில் சேர்த்துக் கொள்வதை விரும்பவில்லை. அதிலும் குறிப்பாக, வியாதி வந்தவர்களே ஓட்ஸ் உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். அவ்வப்போது உணவில் ஓட்ஸ் உணவில் சேர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஓட்ஸில் கஞ்சி செய்து உண்பதை பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள். எனினும் கவலை வேண்டாம். இப்போது ருசியான மற்றும் சுவையான ஓட்ஸ் லட்டு செய்து சாப்பிடலாம். இது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவர். இப்போது சுவையான ஓட்ஸ் லட்டு செய்யும் முறை குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் ஒரு கிராம்பு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

ஓட்ஸ் லட்டு செய்வது எப்படி?

ஓட்ஸ் லட்டு செய்ய தேவையான பொருள்கள்

  • ஓட்ஸ் - 1 கப்
  • நிலக்கடலை -1/2 கப்
  • வெள்ளை எள் - ஒரு டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் துருவல் - 1/2 கப்
  • நாட்டு சர்க்கரை - 1 கப்
  • உலர்திராட்சை - 50 கிராம்
  • முந்திரிபருப்பு - 50 கிராம்
  • பேரிச்சம்பழம் - 10
  • நெய் - தேவையான அளவு

ஓட்ஸ் லட்டு செய்வது எப்படி?

  • முதலில் ஒரு கப் ஓட்ஸ் எடுத்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும்.
  • பின் ஓட்ஸை நன்றாக வறுத்து எடுக்கும் போது, அதன் பச்சை வாடை நீங்கும் வரை வறுக்க வேண்டும்.
  • பிறகு அதை தனியாக தட்டு ஒன்றில் வைக்க வேண்டும்.
  • அதே கப்பில் அரை கப் நிலக்கடலையை எடுத்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் நன்றாக வறுத்த நிலக்கடலையின் தோலை நீக்கி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
  • பின் இதில் இரண்டு ஸ்பூன் வெள்ளை எள்ளை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு தேங்காய் துருவலை லேசாக வறுத்து எடுத்து கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Vitamin D Deficiency: வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்ய எந்த உலர் பழங்கள் சாப்பிடலாம்?

  • பின்னர் ஓட்ஸ், கடலை இரண்டையும் மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளலாம்.
  • இதில் கடைசியாக நாட்டுச்சர்க்கரையைச் சேர்த்து கலவை உடைந்து போகும் வரை இரண்டு பல்ஸ் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது வாணலி ஒன்றில் தேவையான அளவு நெய் சேர்த்து அதில் முந்திரி, திராட்சை போன்றவற்றைச் சேர்த்து வறுத்து, பின் அதில் அரைத்த பொருளில் சேர்க்க வேண்டும்.
  • அதன் பின் அதில் 10 பேரிச்சம்பழத்தைப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதில் அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு, நெய் சேர்த்து மிதமான சூடாக இருக்கும் போதே லட்டு உருண்டை பிடித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான மற்றும்சத்தான ஓட்ஸ் லட்டு ரெசிபி தயாராகி விட்டது. இதை குழந்தைகள் , பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். மேலும் இதில் நாட்டுச்சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம், கருப்பட்டி போன்றவற்றைச் சேர்க்கலாம். அதே போல, பாதாம், பிஸ்தா போன்ற பல்வேறு நட்ஸ் வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த லட்டுவை நீண்ட நாள்கள் வைத்துக் கொள்ள விரும்பினால் தேங்காயைத் தவிர்த்து விடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Curd and Onion: தயிர் மற்றும் வெங்காயத்தை ஒன்றாக சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

Image Source: Freepik

Read Next

Vitamin D Deficiency: வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்ய எந்த உலர் பழங்கள் சாப்பிடலாம்?

Disclaimer