Sat Sep 12, 2026 | 01:26 AM IST

Oats Dosa Recipe: ஓட்ஸ் கஞ்சி குடிச்சி போர் அடிக்குதா? இப்படி மொறுகலான ஓட்ஸ் தோசையை செய்து சாப்பிடுங்க

Oats Dosa Recipe For Cholesterol Control: இன்றைய மாறிவரும் காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான பழக்க வழக்கங்கள் பலதரப்பட்ட பிரச்சனைகளுக்குக் காரணமாகிறது. இதனால் உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட தீவிர பிரச்சனைகள் ஏற்படலாம். சிறியவர்கள், பெரியவர்கள், இளம் வயதினர் என அனைவரும் இந்தப் பிரச்சனையால் பாதிப்படைகின்றனர். அதன் படி, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன், முறையான உடற்பயிற்சியை செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

பொதுவாக ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது பலரும் தெரிந்ததே. இவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதய நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும் என ஆராய்ச்சி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பலரும் ஓட்ஸைக் கொண்டு கஞ்சி தயாரித்து அருந்துவர். ஆனால், இது பலருக்கும் பிடிக்காததாக மாறிவிடுகிறது. இதை ஆரோக்கியமான முறையில் மாற்று வழியாக, ஓட்ஸைப் பயன்படுத்தி தோசை தயார் செய்து சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Egg Chapati: இனி குழந்தைகளுக்கு சப்பாத்தியை இப்படி செய்து கொடுங்க… விரும்பி சாப்பிடுவாங்க!

ஓட்ஸ் தோசை தயார் செய்யும் முறை

ஓட்ஸ் காலை உணவுக்கு ஓரே மாதிரி எடுப்பதற்கு பதிலாக தோசை, இட்லி போல பல்வேறு வகையாக சமையல் செய்து சாப்பிடலாம். இதில் மொறுவலான, சுவையான மற்றும் ஆரோக்கியமான ஓட்ஸ் தோசை தயார் செய்யும் முறை குறித்துக் காணலாம்.

தேவையானவை

  • ஓட்ஸ் - அரை கப்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • ரவா- 1/4 கப்
  • அரிசி மாவு - 1/4 கப்
  • வெங்காயம் - 2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • பச்சை மிளகாய் - 1
  • தயிர் - 1/4 கப்
  • இஞ்சி துருவியது - 1/2 டீஸ்பூன்
  • தண்ணீர் - தேவைக்கேற்ப
  • உப்பு - தேவையான அளவு

ஓட்ஸ் தோசை செய்யும் முறை

  • முதலில் ஓட்ஸை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு, ஒரு பாத்திரம் ஒன்றில் எடுத்து ஓட்ஸ் பொடியை சேர்த்து, பின் ஒன்றன் பின் ஒன்றாக சீரகம், அரிசி மாவு, ரவா, தேவையான அளவு உப்பு போன்றவற்றைச் சேர்த்துக் கலக்க வேண்டும்.
  • பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, துருவிய இஞ்சி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள், தயிர் சேர்க்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
  • பின், ரவையையும் தோசையை மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் மாவை 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கலாம்.
  • இப்போது இந்த மாவை அடுப்பில் தோசைக் கல்லை வைத்து, வழக்கம் போல தோசை ஊற்றலாம்.
  • இதில் எண்ணெய் ஊற்றி மொறுமொறுப்பானதாகவும், தோசையாக உட்கொள்ளலாம். இப்போது சுவையான ஓட்ஸ் தோசை தயாராகி விட்டது.
  • இவ்வாறு சூப்பரான, சுவையான ஓட்ஸ் தோசையைச் சாப்பிடுவது கலோரியை அதிகரிக்காது. இது மகிழ்ச்சியானதாக அமைவதுடன், விரும்பிய உணர்வாகவும் அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Paneer Tandoori: வீடே மணக்கும் ருசியான தந்தூரி பனீர்! இப்படி செஞ்சா மிச்சமே இருக்காது

ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும்நன்மைகள்

ஓட்ஸில் பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் பி 1, நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. ஓட்ஸ் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இதய ஆரோக்கியம்

ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்லது. இவை செரிமானத்தின் போது கொலஸ்ட்ராலை உறிஞ்சி உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் பக்கவாத அபாயத்தைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

எடை குறைப்பு

அதிக உடல் எடை கொண்டவர்கள் படிப்படியாக உடல் எடையைக் குறைக்க அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதற்கு ஓட்ஸ் சிறந்த தேர்வாகும்.

நீரிழிவு நோய்க்கு

சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவாகக் கருதப்படுகிறது. எனவே தினமும் ஓட்ஸை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் குளுகோஸ் அளவை கட்டுப்படுத்தலாம்.

மலச்சிக்கல் நிவாரணத்திற்கு

ஓட்ஸில் உள்ள பீட்டா குளுக்கான், உடலில் செரிமானத்தை அதிகரிக்கச் செய்கிறது. இது மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குவதுடன், குடல் பாக்டீரியாக்களை பாதுகாக்க உதவுகிறது.

இவ்வாறு ஓட்ஸ் தோசையை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான நலன்களைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் தேங்காய் வேர்க்கடலை சட்னி! இப்படி செஞ்சி பாருங்க

Image Source: Freepik

Read Next

Egg Chapati: இனி குழந்தைகளுக்கு சப்பாத்தியை இப்படி செய்து கொடுங்க… விரும்பி சாப்பிடுவாங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content