Paneer Tandoori: வீடே மணக்கும் ருசியான தந்தூரி பனீர்! இப்படி செஞ்சா மிச்சமே இருக்காது

  • SHARE
  • FOLLOW
Paneer Tandoori: வீடே மணக்கும் ருசியான தந்தூரி பனீர்! இப்படி செஞ்சா மிச்சமே இருக்காது

மேலும், இந்த ரெசிபியானது வெஜ் பிரியர்களுக்கு ஏற்ற சுவையான ரெசிபியாக அமைகிறது. இதில் மனதில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான குறிப்பு என்னவென்றால், பனீர் துண்டுகளை நன்றாக ஊறவைக்க வேண்டும். இவ்வாறு ஊறவைப்பதன் மூலம் சுவைகள் சரியாக உறிஞ்சப்படும். இந்த சுவையான பனீர் தந்தூரி செய்முறையை வீட்டிலேயே எப்படி செய்வது என்பது குறித்து காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: CWC Priyanka Special: குக் வித் கோமாளியில் பிரியங்கா செய்து அசத்திய மட்டன் நல்லி நிஹாரி செய்வது எப்படி?

பனீர் தந்தூரி தயார் செய்யும் முறை

தேவையானவை

  • பனீர் - 400 கிராம்
  • சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - 1/4 கப்
  • கொத்தமல்லி இலைகள் 11/2 கப்
  • வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
  • இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
  • இறைச்சி மசாலா - 1 தேக்கரண்டி
  • பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • கசூரி மேத்தி தூள் - 1 தேக்கரண்டி
  • தயிர் - 1 கப்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பனீரைக் கழுவி சதுரங்கமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு, தனி ஒரு பாத்திரம் ஒன்றில் இஞ்சி விழுது, பூண்டு விழுது, தயிர், இறைச்சி மசாலா மற்றும் கசூரி மேத்தி போன்றவற்றைக் கலக்க வேண்டும்.
  • இந்தக் கலவையில் பனீரைச் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இதை சுமார் 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளலாம்.
  • அதன் பின், இதை தந்தூரில் வைக்கலாம் அல்லது இருபுறமும் கிரில் செய்யலாம்.
  • பிறகு கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்க வேண்டும்.
  • இதில் சிறிது வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.
  • பிறகு சிறிது இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கலாம்.
  • இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து, வறுத்த பனீரைச் சேர்க்கலாம்.
  • இதில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்டு விடலாம்.
  • இது வேகவைத்த பிறகு, முழுவதும் குழம்பு வடிவில் வந்ததும், சிறிது கசூரி மேத்தி சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • இப்போது சுவையான சூப்பரான பனீர் தந்தூரி தயார் செய்யப்பட்டது. இதை ரொட்டி அல்லது பராத்தா அல்லது சாதத்துடன் சூடாக பரிமாறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mushroom Kothu Curry: மஷ்ரூம் கொத்து கரி இப்படி செஞ்சு பாருங்க.! சும்மா அப்படி இருக்கும்…

பனீர் சாப்பிடுவதன் நன்மைகள்

இந்த ரெசிபியை உட்கொள்வதுடன், பனீர் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

புரதம் நிறைந்த பனீர்

சைவ உணவு உண்பவர்களுக்கு புரதத்தின் நல்ல மூலமாக பனீர் சிறந்த உணவாகும். மேலும் உடலின் சரியான செயல்பாட்டுக்கு தேவையான ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது. எனவே இது மற்ற புரத உணவுகளுடன் ஒப்பிடுகையில் ஆரோக்கியமான தேர்வாக அமைகிறது.

தசை உருவாக்கத்திற்கு

புரதம் நிறைந்த பனீரானது தசை வளர்ச்சிக்கும் மற்றும் தசையைப் பழுதுபார்க்கவும் உதவுகிறது. இது விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்கட்டமைப்பாளர்களுக்கு விருப்பமான உணவாக அமைகிறது.

எடையிழப்புக்கு உதவ

பனீர் என்பது குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிக புரதம் கொண்ட உணவாகும். இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இவை நீண்ட காலத்துக்கு நிரம்பியதாக உணர வைப்பதாக அமைகிறது. இதன் மூலம் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களின் மீதான நாட்டத்தைக் குறைக்கலாம். எனினும், பனீர் குறைந்த கலோரி உணவு அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

பனீரில் அதிக அளவிலான ஜிங்க் உள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் சளி, காய்ச்சல் மற்றும் தொற்று போன்ற பொதுவான நோய்த்தொற்றுக்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. இதில் புரதம் நிறைந்துள்ளதால், உடல்நிலை சரியில்லாமல் இருப்பின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது.

இது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் பனீர் ஒரு சுவையான மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவாகும். எனினும், சில குறிப்பிடப்பட்ட உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் பனீர் உட்கொள்ளும் முன்னதாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Afghani Paneer: மாதம்பட்டி ரங்கராஜன் புகழ்ந்து தள்ளிய பூஜாவின் ஆப்கானி பனீர்.. எப்படி செய்யணும்?

Image Source: Freepik

Read Next

Ash Gourd Juice: தினமும் வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா? நன்மைகள் இங்கே!

Disclaimer