சைத்ரா ரெட்டியின் அசத்தலான அக்கி ரொட்டி ரெசிபி! இப்படி செஞ்சா மிச்சமே இருக்காது

  • SHARE
  • FOLLOW
சைத்ரா ரெட்டியின் அசத்தலான அக்கி ரொட்டி ரெசிபி! இப்படி செஞ்சா மிச்சமே இருக்காது

அக்கி ரொட்டி டாகோஸ் ரெசிபி தயார் செய்யும் முறை

இதில் முதலில் அக்கி ரொட்டி தயார் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் செய்முறை குறித்துக் காணலாம்.

தேவையானவை

  • தண்ணீர் - 11/2 கப்
  • உப்பு - 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • அரிசி மாவு - 1 கப்

இந்த பதிவும் உதவலாம்: Kovil Puliyodharai Powder: கோவில் சுவையில் வீட்டிலேயே புளியோதரை பவுடர் தயாரிப்பது எப்படி?

செய்முறை

  • முதலில் வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து தண்ணீரை ஊற்றி உப்பு, எண்ணெய் போன்றவற்றைக் கொடுக்கப்பட்ட அளவில் சேர்க்க வேண்டும்.
  • பின் இதில் அரிசி மாவு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். இதை மிதமான தீயில் வைத்து கட்டிகள் இல்லாதவாறு கலக்க வேண்டும்.
  • பிறகு அடுப்பை அணைத்து, அதை ஆற விட வேண்டும்.
  • சூடு ஆறிய பிறகு, கையில் மாவை நன்கு மென்மையாக மாறும் வரை பிசைந்து கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு குறைந்தது 2 முதல் 3 நிமிடங்கள் அழுத்தம் கொடுத்து மாவை பிசைய வேண்டும்.
  • பின் அரிசி மாவு தூவி, சப்பாத்திக்கு மாவு உருட்டுவதை போல, உருட்டிக் கொள்ளலாம்.
  • நன்கு மெலிதாக உருட்டி, வட்ட வடிவில் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் வட்ட வடிவிலான பாத்திரத்தைக் கொண்டு மாவை அதே வடிவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் தோசைக்கல் வைத்து சிறிது எண்ணெய் தடவி அதில் அக்கி ரொட்டியைச் சேர்க்கலாம்.
  • இரு புறமும் நன்கு வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
  • இதை அழுத்தம் கொடுத்து கரண்டியால் அழுத்தும் போது, உப்பிய நிலைக்கு வரும்.

அக்கி ரொட்டி ஸ்டஃப்டு தயாரிக்கும் முறை

இதில் அக்கி ரொட்டியினுள் வைக்கும் ஸ்டஃப்பிங் தயாரிக்கும் முறை குறித்துக் காணலாம்.

தேவையானவை

  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
  • குடைமிளகாய் - 1 (நீளமாக நறுக்கியது)
  • கேரட் - 1 (நீளமாக நறுக்கியது)
  • உப்பு - தேவையான அளவு
  • சோளம் - 1 சிறிய கப்
  • மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
  • சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
  • துளசி இலை - சிறிதளவு (தூளாக்கப்பட்டது)
  • தக்காளி கெட்சப் - 1 டேபிள் ஸ்பூன்

இந்த பதிவும் உதவலாம்: Vazhakkai Kola Urundai: கலக்கலான சுவையில் வாழைக்காய் கோலா உருண்ட ரெசிபி! எப்படி செய்வது?

செய்முறை

  • முதலில் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், கேரட், உப்பு போன்றவற்றை மேலே கூறப்பட்டவாறு சேர்க்க வேண்டும்.
  • பிறகு அதில் சோளம், மிளகாய் தூள், சீரகத் தூள், துளசி இலை மற்றும் தக்காளி கெட்சப் போன்றவற்றையும் குறிப்பிடப்பட்ட அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இதை 2 நிமிடம் அடுப்பில் வைத்து நன்றாக வதக்க வேண்டும்.

அக்கி ரொட்டி டாகோஸ் தயாரிக்கும் முறை

இப்போது அக்கி ரொட்டி மற்றும் ஸ்டஃப்டு சேர்த்து தயார் செய்யப்படும் அக்கி ரொட்டி டாகோஸ் எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.

  • அக்கி ரொட்டியை எடுத்து சிறிது தக்காளி கெட்சப் சேர்த்து சீஸை துருவி பரவலாகச் சேர்க்கலாம்.
  • பின் தயார் செய்த ஸ்டஃபிங்கை ரொட்டியின் சீஸ் மீது பரவலாக பாதி வரை சேர்க்க வேண்டும்.
  • பிறகு ரொட்டியை அப்படியே மூடி வைக்க வேண்டும்.
  • அதன் பின், வாணலி ஒன்றில் எண்ணெய் சேர்த்து, நன்கு சூடான பிறகு இந்த ஸ்டஃப்பிங் ரொட்டியைச் சேர்க்க வேண்டும். இது மிதமான தீயில் நன்கு பொரிந்த பிறகு எடுத்து விடலாம்.
  • இப்போது சூப்பரான அக்கி ரொட்டி டாகோஸ் ரெசிபி தயாரானது.

இதை வீட்டிலேயே எளிதான முறையில் செய்து அசத்தி பரிமாறலாம். இது சுவையுடன், பல்வேறு காய்கறிகளின் ஆரோக்கியமிக்க ஊட்டச்சத்துக்களையும் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Pudina Kulambu Recipe: புதினா சட்னி செஞ்சி போர் அடிக்குதா? புதினா குழம்பு இப்படி செஞ்சி சாப்பிடுங்க

Image Source: Freepik

Read Next

Weight Gain Drinks: ஒல்லியா இருக்கீங்கன்னு கவலப்படுறீங்களா.? இத மட்டும் குடிங்க..

Disclaimer

குறிச்சொற்கள்