$
How To Make Tamarind Rice Powder Recipe At Home: வீட்டிலேயே செய்யக் கூடிய உணவுகளை விட வெளி உணவுகளையே அதிகம் விரும்புவர். இதில் கோவில் என்றாலே பெரும்பாலானோர் புளியோதரைக்காகவே செல்வர். வீட்டில் செய்யும் புளியோதரையை விட, கோவிலில் தரும் புளியோதரைக்கு தனி ஸ்பெஷலே உண்டு. வீட்டிலேயே எளிதான முறையில் தயார் செய்யப்படும் புளியோதரை பவுடர் தேவையான அளவு செய்து வைத்து, ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம்.
இந்த பவுடரைத் தேவைப்படும் போது எடுத்து, எளிதான முறையில் புளியோதரையைத் தயார் செய்து விடலாம். இதை வீட்டிலேயே செய்வதால் சுவை மிகுந்ததாக இருக்கும். இத்தகைய சுவை மிகுந்த புளியோதரையைப் பொடியை வீட்டில் தயார் செய்வது குறித்தும், அந்தப் பொடியை வைத்து புளியோதரையைத் தயார் செய்யும் முறை குறித்தும் காணலாம். இது வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பு ஒரு ரெசிபியாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Pudina Podi: எச்சில் ஊறும் அளவுக்கு புதினா பொடி செய்யனுமா.? இதை ட்ரை பண்ணுங்க…
புளியோதரை பவுடர் செய்யும் முறை
தேவையானவை
- கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
- வெந்தயம் – 1/2 ஸ்பூன்
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- மிளகு – 1/2 ஸ்பூன்
- எள்ளு – 1/2 ஸ்பூன்
- வர மல்லி – ஒரு ஸ்பூன்
- அரிசி - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- பெருங்காயம் – ஒரு சிறிய கட்டி
- எண்ணெய் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்
- புளி – நெல்லிக்காய் அளவு
- கருப்பட்டி – சிறிதளவு
- வர மிளகாய் – 4
- உப்பு - தேவையான அளவு

புளியோதரை பவுடர் செய்முறை
- முதலில் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து, சூடாக்க வேண்டும். பின் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு இரண்டையும் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு அதில் மிளகு, சீரகம், வெந்தயம், எள்ளு, வரமல்லி, அரிசி மற்றும் வர மிளகாய் என அனைத்தையும் சேர்த்து வறுத்துக் கொள்ளலாம்.
- பின் எண்ணெயை ஊற்றி புளி மற்றும் கட்டி பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளலாம்.
- அதன் பிறகு இந்தக் கலவையை ஆறவைத்து அதில் மஞ்சள் தூள், கருப்பட்டி மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொண்டு மிக்ஸி ஜார் ஒன்றில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
- இந்தப் பொடியை தண்ணீர் இல்லாத பாட்டில் ஒன்றில் சேகரித்து வைத்து 1 மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Sambar Podi Recipe: வீடே மனக்குற மாறி சாம்பார் வைக்க சாம்பார் பொடி இப்படி அரச்சு பாருங்க.!
கோவில் புளியோதரை செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
- எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
- உளுந்து – 1/2 ஸ்பூன்
- கடலை பருப்பு – 1 ஸ்பூன்
- கடுகு – 1/4 ஸ்பூன்
- கடலை – ஒரு கைப்பிடியளவு
- வர மிளகாய் – 2
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- அரைத்து வைத்த புளியோதரை பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
- வேகவைத்து வடித்த சாதம் - 1 கப்

கோயில் புளி சாதம் செய்வது எப்படி?
- கடாய் ஒன்றை எடுத்துக் கொண்டு அது சூடான பிறகு கடுகு, உளுந்து, கடலை பருப்பு போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.
- இது சிவந்தவுடன் கறிவேப்பிலை, வர மிளகாய் மற்றும் கடலை சேர்த்து தாளிக்கலாம்.
- அதன் பிறகு அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கி விட வேண்டும்.
- பின் அரிசியை வேகவைத்து, சாதத்தை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இதில் நல்லெண்ணெயை ஊற்றி நன்கு ஆற வைத்து தாளித்து வைத்த பொருள்களைச் சேர்த்து கிளற வேண்டும்.
- இவ்வாறு சூப்பரான கோவில் புளியோதரை தயாராகி விட்டது.
இந்த அசத்தலான சுவையில் தயாரிக்கப்படும் புளியோதரையை ஒரு முறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டு. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி உண்ணுவர்.
இந்த பதிவும் உதவலாம்: Idli Podi Recipe: காரசாரமாக ஹோட்டல் ஸ்டைல் இட்லி பொடி செய்யலாமா?
Image Source: Freepik