$
How to make delicious Tomato and Peas Poha: நம்மில் பலருக்கு காலை உணவு சமைக்க நேரம் கிடைப்பதில்லை. நிற்பதற்கும், நடப்பதற்கு நேரம் கிடைக்காத போது எங்கிருந்து சமைக்க நேரம் கிடைக்க போகிறது. அப்படி சமைக்க நேரம் இலாத நேரத்தில் வெறும் 20 நிமிடத்தில் செய்ய கூடிய ஒரு அட்டகாசமான ரெசிப்பி பற்றி நாங்கள் கூறுகிறோம்.
இது உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகவும் நல்லது. உடல் எடை குறைப்புக்கு உதவும் அவல், வேர்க்கடலை, பச்சை பட்டாணி, எலுமிச்சை வைத்து போஹா ரெசிபி எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Mushroom Biryani Recipe: செஃப் ஆஃப் தி வீக் வாங்கிய திவ்யா துரைசாமி.. கை கொடுத்த மஷ்ரூம் பிரியாணி..
தேவையான பொருட்கள் :
அவல் - 1 கப்.
வேர்க்கடலை - 1/2 கப்.
வெங்காயம் - 1.
பச்சை பட்டாணி - 1/2 கப்.
தக்காளி - 1.
பச்சை மிளகாய் - 2.
கறிவேப்பிலை - 1 கொத்து.
எலுமிச்சை - 1.
சர்க்கரை - 1 ஸ்பூன்.
கடுகு - கால் ஸ்பூன்.
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :

- போஹா செய்வதற்கு முன்னதாக, அவலை ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சேர்த்து 2 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், அதில் உள்ள தண்ணீரை வடிகட்டி , அவலை மட்டும் தனியே ஊற வைக்கவும்.
- இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்க்காமல் வேர்க்கடலையினை மட்டும் வறுத்துக்கொள்ளவும். பின்னர் இந்த வறுத்த கடலையின் தோல் நீக்கி தனியே எடுத்து வைத்துகொள்ளவும்.
- தற்போது அவல் செய்வதற்கு, மற்றொரு கடாயினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Frozen Peas Side Effects: சாப்பிட நல்லாதான் இருக்கும்.. ஆனால் உறைய வைத்த பச்சை பட்டாணி ஆபத்து.!
- தொடர்ந்து, பெரிய வெங்காயம் ஒன்றை பொடியாக நறுக்கி, கடாயில் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கும் அதே நேரத்தில் பச்சை மிளகாய் 2-னை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இதில் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வேக விடவும். பின் பச்சை பட்டாணி சேர்க்கவும். தொடர்ந்து மஞ்சள் தூள், உப்பு மற்றும் பொடியாக அரைத்த சர்க்கரையினை சேர்த்து வதக்கவும்.
- இந்த சேர்மம் நன்கு வதங்கி, மணம் வரும் நிலையில் இதனுடன் வடித்து வைத்த போஹா சேர்த்து கிளறிவிடவும். தொடர்ந்து எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு முறை கிளறி, அடுப்பை அணைத்துவிட சுவையான போஹா ரெடி.
- சுவைமிக்க இந்த போஹாவினை வேர்க்கடலை சட்னி அல்லது பொட்டுக்கடலை சட்னியுடன் பரிமாறலாம். போஹாவின் சுவையை அதிகரிக்க, இதன் மீது தேங்காய் துருவல் சற்று சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Veg Cutlet Recipe: குழந்தைகளுக்கு திவ்யா திரைசாமி செய்து கொடுத்த வெஜ் கட்லெட் ரெசிபி..
போஹா சாப்பிடுவதன் நன்மைகள்

செரிமானத்திற்கு நன்மை பயக்கும்
போஹா சாப்பிடுவதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அது உங்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதனால், மலச்சிக்கல் பிரச்சனை குறையும். ஏற்கனவே உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் நிவாரணம் கிடைக்கும். இதில் உள்ள ஃபைபர் குடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இது குடல் நுண்ணுயிரியை சிறப்பாக வைத்திருக்கிறது.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்
போஹா ஒரு குறைந்த கிளைசெமிக் உணவு. அதாவது, அதை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இதில் நார்ச்சத்து உள்ளது, இது சர்க்கரையை மெதுவாக இரத்தத்தில் வெளியிடுகிறது. எனவே, போஹாவை உணவில் சேர்த்துக் கொள்வது நீரிழிவு நோயைத் தடுக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Onion Tamarind Rice: வெறும் வெங்காயம் இருந்தா போதும்; ஒரு சூப்பரான லன்ச் பாக்ஸ் ரெசிபி தயார்!
அதிக ஆற்றல் கிடைக்கும்
போஹாவில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே, காலை உணவாக இதை சாப்பிடுவது நாள் முழுவதும் வேலை செய்யும் ஆற்றலைக் கொடுக்கும். இருப்பினும், அதை சாப்பிடும் போது பகுதி கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
புரதம் கிடைக்கும்
போஹாவை அதிக சத்தானதாக மாற்ற, அதில் வேர்க்கடலை மற்றும் முளைகளை சேர்க்கலாம். இது உங்களுக்கு புரதத்தை வழங்குவது மட்டுமல்லாமல், போஹாவின் சுவையும் சிறப்பாக மாறும்.
எடை இழக்க உதவும்
போஹாவில் கொழுப்பு உள்ளடக்கம் 30 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. குறைந்த கலோரி உள்ளடக்கம் காரணமாக, எடை குறைக்க உதவுகிறது. இருப்பினும், இது குறைந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும், ஏனெனில் இதில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.
இந்த பதிவும் உதவலாம் : Idli Podi Recipe: காரசாரமாக ஹோட்டல் ஸ்டைல் இட்லி பொடி செய்யலாமா?
இரத்த சோகை ஆபத்து குறையும்
போஹாவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த சோகை அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே, இது இரத்த சோகை அபாயத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இரத்த சோகை நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும்.
Pic Courtesy: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version