Millet Upma: ஒரே வாரத்தில் கிலோ கணக்கில் எடை குறையணுமா? அப்போ இதை சாப்பிடுங்க!

ஒரே மாதிரியான உணவு சாப்பிட்டு சலித்து விட்டதா? அப்போ இந்தமுறை திணை உப்புமா செய்து சாப்பிடுங்க சுவையானது மட்டும் அல்ல ஆரோக்கியம் நிறைந்தது.
  • SHARE
  • FOLLOW
Millet Upma: ஒரே வாரத்தில் கிலோ கணக்கில் எடை குறையணுமா? அப்போ இதை சாப்பிடுங்க!

Millet Upma Recipe in Tamil: உடல் எடை குறைப்பு என்பது தற்போது குதிரைக்கொம்பாக மாறிவிட்டது. உடல் எடையை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் உப்புமா சாப்பிடுவார்கள். ஆனால், அடிக்கடி உப்புமா சாப்பிடுவது நமக்கு சலிப்பை ஏற்படுத்தும். எனவே, உங்களுக்காக நாங்கள் ஒரு புதிய ரெசிபி ஒன்றை கூறுகிறோம். இது சுவையானது மட்டும் அல்ல ஆரோக்கியமானதும் கூட. வாருங்கள் திணை உப்புமா செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

திணை - 1/2 கப்
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/ 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து

இந்த பதிவும் உதவலாம்: Pori Mixture: வெறும் பொரி சாப்பிட்டு போர் அடிக்குதா? அப்போ இப்படி செஞ்சி சாப்பிடுங்க!

திணைஉப்புமா செய்முறை:

Barnyard Millet Upma | Varai Upma

  • திணையை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • கடாயில் நெய் ஊற்றி, இதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் போடவும்.
  • கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், இதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
  • 5 நிமிடம் கழித்து, இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • இதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
  • இதில் தண்ணீர் ஊற்றி, கடாயை மூடி 5 நிமிடம் காய்கறிகளை வேகவைக்கவும்.
  • அடுத்து இதில் தண்ணீரை வடித்த திணையை சேர்க்கவும்.
  • கடாயை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் வேகவைத்தால் திணை உப்புமா தயார்.

திணை உப்புமா சாப்பிடுவதன் நன்மைகள்:

How to Make Millet Upma in 15 Minutes ? Easy Breakfast Recipe 2023

செரிமான ஆரோக்கியம்: தினைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துகிறது.

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு: தினைகளில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உதவும்.

எடை இழப்பு: தினைகளில் கலோரிகள் குறைவாக உள்ளன மற்றும் எடை இழப்புக்கு உதவும்.

இதய ஆரோக்கியம்: தினைகளில் மெக்னீசியம் உள்ளது. இது இதய தாளத்தை சீராக்க உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: Chicken Bread Rolls: இனி டீக்கு இந்த சிக்கன் பிரட் ரோல் செய்து கொடுங்க.. சுவை அள்ளும்!

நோய் எதிர்ப்பு சக்தி: தினைகளில் புரதம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும்.

மனநிலை மாற்றம்: தினைகளில் டிரிப்டோபான் உள்ளது. இது மனநிலையை மேம்படுத்தவும் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும்.

எலும்பு ஆரோக்கியம்: தினைகளில் கால்சியம் உள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

தோல் ஆரோக்கியம்: தினை உங்கள் சருமத்திற்கு நல்லது. அதே போல தினை இயற்கையாகவே பசையம் இல்லாதது. இது செலியாக் நோய் அல்லது பசையம் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக அமைகிறது

அழற்சி எதிர்ப்பு: தினைகளில் உள்ள நார்ச்சத்து குடல் அழற்சி நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்

Pic Courtesy: Freepik

Read Next

சந்தையில் விற்கப்படும் போலி உப்பு... கலப்பட உப்பை கண்டறிய FSSAI கூறிய டிப்ஸ்!

Disclaimer