$
Benefits Of Onion Peels You Should Know: வெங்காயம் இல்லாமல் எந்த சமையலும் முழுமையடையாது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதன் விலை எவ்வளவு அதிகரித்தாலும் 4-க்கு பதிலாக 2 வெங்காயத்தைப் பயன்படுத்தியாவது சமைப்போம் தவிர, அதன் பயன்பாட்டை நிறுத்த முடியாது. ஏனென்றால், செய்யும் உணவுக்கு முழுமையான சுவையையும் மனத்தையும் வழங்கக்கூடியது வெங்காயம் தான்.
அந்தவகையில், நம்மில் பலர் வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்திவிட்டு, அதன் தோலை குப்பையில் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால், வெங்காயத்தில் உள்ள அளவு அதன் தொழிலும் அதிக அளவு சத்துக்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? உண்மைதான். வெங்காயத்தோலில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Warm Lemon Water Benefits: உடலில் தேங்கிய கொழுப்பை சீக்கிரமா கரைக்கும் லெமன் வாட்டர்!
வெங்காயத் தோலின் நன்மைகள்

சரும கறைகள் நீங்கும்
பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தழும்புகளால் சிரமப்படுகின்றனர். இவை உங்கள் தோற்றத்தைக் கெடுப்பது மட்டுமின்றி, உங்கள் வயதைக் காட்டிலும் உங்களை வயதானவர்களாகக் காட்டுகின்றன. இந்நிலையில், வெங்காய செய்முறை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதற்கு முதலில் வெங்காயத் தோலை ஒரு கிண்ணத்தில் எடுத்து அரைத்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பிறகு, கறை படிந்த இடத்தில் தடவி, 20 நிமிடங்கள் வைத்திருந்த பிறகு, குளிர்ந்த நீரில் கழுவவும்.
தூக்கத்திற்கு நல்லது
வெங்காயத் தோல்களில் எல்-டிரிப்டோபான் உள்ளது. இது ஒரு அமினோ அமிலமாகும். இது இயற்கையான மயக்க மருந்தாக செயல்படுகிறது. வெங்காயத்தோல் தேநீர் குடிப்பதன் மூலம் உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Kovakkai Benefits: தினமும் கோவக்காய் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா? நிபுணர் கூறுவது என்ன?
ஹேர் டோனர்
உலர்ந்த மற்றும் மந்தமான கூந்தலுக்கு வெங்காயத் தோல்களை ஹேர் டோனராகவும் பயன்படுத்தலாம். வெங்காயத் தோலைப் பிரவுன் நிறமாக மாறும் வரை தண்ணீரில் கொதிக்க வைத்து இந்த டோனரைத் தயாரிக்கலாம். இதை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து தலையில் தடவலாம்.
தோல் அரிப்பு நீங்கும்

வெங்காயத் தோல்களில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன மற்றும் உங்கள் தோல், தடிப்புகள் மற்றும் தடகள கால்களில் ஏற்படும் அரிப்புகளை குறைக்க உதவுகிறது. நிவாரணம் பெற வெங்காயத் தோல் நீரை சருமத்தில் தடவலாம்.
பொடுகுத் தொல்லையில் இருந்து நிவாரணம்
வெங்காயத் தோலைப் பயன்படுத்துவதன் மூலமும் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதற்கு, ஒரு கிண்ணம் தோலை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அது பாதியாக குறையும் போது, உங்கள் தலைமுடியைக் கழுவ வேண்டும். இந்த தண்ணீரில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன, எனவே இது பொடுகைப் போக்க உதவுவது மட்டுமல்லாமல், முடி உதிர்தல் பிரச்சனையையும் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : Arugampul Benefits: பல வியாதிகளை விரட்டியடிக்கும் அருகம்புல்., ஆரோக்கிய நன்மைகள்!
முடி உதிர்வதைத் தடுக்கும்
வெங்காயத் தோலை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முடி மற்றும் உச்சந்தலையில் ஹேர் மாஸ்க் போல தடவி, 20 முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு லேசான ஷாம்பு கொண்டு தலையைக் கழுவவும். இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தினால் முடி உதிர்வது குறைந்து பொலிவு ஏற்படும்.
வெங்காயத் தோலை சருமத்திற்கு எப்படி பயன்படுத்துவது?

- முகத்தில் உள்ள கறைகளை நீக்க வெங்காயத் தோலை தண்ணீரில் குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2 மணி நேரம் கழித்து, ஒரு வடிகட்டி உதவியுடன் தோல்களை வடிகட்டி, தண்ணீரை பிரிக்கவும்.
- வெங்காயத்தோல் தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து பேஸ்ட் செய்யவும்.
இந்த பதிவும் உதவலாம் : Frozen Peas Side Effects: சாப்பிட நல்லாதான் இருக்கும்.. ஆனால் உறைய வைத்த பச்சை பட்டாணி ஆபத்து.!
- இந்த பேஸ்ட்டை முகத்தில் ஃபேஸ் பேக் போல 15 முதல் 20 நிமிடங்கள் வரை தடவி பின் கழுவவும்.
- சிறந்த முடிவுகளுக்கு வாரத்திற்கு இரண்டு முறையாவது இந்த பேக்கை பயன்படுத்தவும்.
Pic Courtesy: Freepik