$
Health Benefits Of Onion Peel: வெங்காயத்தின் நன்மைகள் பற்றி நாம் ஏற்கனவே நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால், வெங்காய தோலிலும் ஆரோக்கிய நன்மைகள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இதன் நன்மைகள் குறித்து அறிந்தால், அதனை தூக்கி எறியமாட்டீர். இதன் நன்மைகளை விரிவாக காண்போம்.

வெங்காய தோலின் நன்மைகள் (Benefits Of Onion Peel)
சில சமயங்களில் அலர்ஜி காரணமாக பாதங்களில் அரிப்பு ஏற்படும். இந்த நேரங்களில் வெங்காயம் மற்றும் பூண்டு தோலை வெதுவெதுப்பான நீரில் போட்டு அந்த நீரில் பாதங்களை வைக்கவும். இதைச் செய்வதன் மூலம் வெங்காயத் தோலில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவும்.
இதையும் படிங்க: ஆரஞ்சு தோலை தூக்கி போடாதீங்க!
வேலை அழுத்தம், உடல்நலக் கோளாறுகள் மற்றும் பிற காரணங்களால், இன்று பலர் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள். வெங்காய தோலைக் கொண்டு இந்தப் பிரச்னையைச் சரி செய்துவிடலாம். ஒரு கப் தண்ணீரைச் சூடாக்கி அதில் வெங்காய தோலைச் சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்க விடவும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து தேநீர் போல சாப்பிடவும். இவ்வாறு செய்வதால் தூக்கமின்மை பிரச்சனை நீங்கும்.
வெங்காய தோலை தண்ணீரில் கொதிக்க வைப்பது கிருமி நாசினியாக செயல்படுகிறது. அவை தொண்டையில் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கின்றன. இது சுவாச பிரச்னைகள் மற்றும் தொண்டை தொற்றுகளை தடுக்கும். இந்த நீரை கொதிக்க வைத்து குடிப்பதால் இதய நோய்கள், தசை வலிகள் குறையும். வெங்காயத் தோலில் அதிக அளவு வைட்டமின்கள் இருப்பதால், சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாறும்.

வெங்காயம் முடிக்கு எவ்வளவு நல்லது என்பதை நாம் அனைவரும் அறிவோம். வெங்காய தோல் கூந்தலுக்கும் நல்லது. வெங்காய தோலை தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரால் தலைக்கு குளித்தால், முடி மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் மாறும்.
Image Source: Freepik