Orange Peel Skin Benefits: இது தெரிஞ்சா இனி ஆரஞ்சு பழத் தோலை தூக்கி போட மாட்டீங்க

  • SHARE
  • FOLLOW
Orange Peel Skin Benefits: இது தெரிஞ்சா இனி ஆரஞ்சு பழத் தோலை தூக்கி போட மாட்டீங்க


Orange Peel Benefits For Face: காலநிலை மாறுபாடு, அழுக்கு மற்றும் மாசுபாடு போன்ற பல்வேறு காரணங்களால், சருமத்தில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படலாம். இதில், முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் போன்றவை அடங்கும். அதே சமயம் நேரமின்மை, அதிக வேலைப்பளு போன்றவற்றின் காரணமாக பெண்களோ அல்லது ஆண்களோ தங்கள் சருமத்தில் கவனம் செலுத்த முடிவதில்லை. இதனால் சருமம் முன்கூட்டிய முதுமை அறிகுறிகளைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். இந்த முகச்சுருக்கங்களைக் குறைக்க சில வீட்டு வைத்தியங்களை மேற்கொள்ளலாம். இயற்கை வழியான ஆரஞ்சு பழத் தோலின் பவுடர் முகச்சுருக்கங்களை நீக்குவதுடன், இயற்கையான பொலிவையும் தருகிறது. இப்போது சுருக்கங்களை நீக்க உதவும் ஆரஞ்சு பழத் தோலின் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்துக் காணலாம்.

சருமத்திற்கு ஆரஞ்சு பழத் தோல்களின் நன்மைகள்

சருமப் பொலிவிற்கு ஆரஞ்சு பழத் தோல் பல்வேறு வகையான நன்மைகளைத் தருகிறது. இப்போது சருமத்திற்கு ஆரஞ்சு பழத் தோல் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Banana Peel Benefits: சரும பிரச்சனையை நீக்க வாழைப்பழத் தோல் உதவுமா?

நிறத்தைப் பொலிவாக்க

முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் காரணமாக, முகத்தின் பொலிவு குறையலாம். இதற்கு ஆரஞ்சு தோலைப் பயன்படுத்துவதன் மூலம் நல்ல தீர்வு காண முடியும். ஆரஞ்சு தோல் தூளில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றி, சருமத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது தோல் தொனியை சீராக மாற்றுகிறது.

வைட்டமின் சி நிறைந்தது

ஆரஞ்சு பழத் தோலில் இருந்து தயாரிக்கப்படும் தூள், வைட்டமின் சி நிறைந்த ஆதாரமாகும். இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக முகச்சுருக்கங்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஃப்ரீ ரேடிக்கல்கள் ஆகும். இந்த ஃப்ரீ ரேடிக்கல்களைத் தவிர்க்க ஆரஞ்சு பழத் தோல் உதவுகிறது. மேலும் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தி உதவக்கூடியது. கொலாஜன் என்பது ஒரு வகையான புரதம் ஆகும். இது தோல் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது. மேலும் ஆரஞ்சு தோலில் இருந்து தயாரிக்கப்படும் தூளைத் தொடர்ந்து பயன்படுத்துவது சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை அதிகரித்து முகப் பொலிவைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Natural Skin Care Tips: அழகான சருமத்திற்கு இயற்கையான சில வீட்டுக்குறிப்புகள்!

இயற்கை எக்ஸ்ஃபோலியேட்டர்

சருமத்தில் இறந்த செல்கள் சேகரிக்கப்பட்டு இருப்பது தோல் சுருக்கங்களை அதிகரிக்கலாம். இதற்கு இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டராக ஆரஞ்சுபழத் தோலைப் பயன்படுத்தலாம். இதில் உள்ள சத்துக்கள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத் துளைகளை நீக்குகிறது. சருமத்தில் புதிய செல்கள் உருவாவததால், தோல் இறுக்கமடைகிறது. இதன் மூலம் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் குறைந்து பளபளப்பாக்குகிறது.

சருமத்திற்கு ஆரஞ்சு தோல் பொடியை பயன்படுத்துவது எப்படி

ஆரஞ்சு பழத் தோல் பொடியைச் சருமத்திற்குப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.

ஸ்க்ரப் செய்வது

கிண்ணம் ஒன்றில் 1 தேக்கரண்டி ஆரஞ்சு தோல் பவுடர், 1 தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் போன்றவற்றைக் கலக்கவும். இதை முகத்தில் தடவி, சிறிது காய்ந்த பின், வட்ட இயக்கத்தில் நகர்த்தி முகத்தில் இருந்து அகற்ற வேண்டும். பின், சாதாரண நீரில் முகத்தை கழுவி விடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Black Neck Remedies: கழுத்தில் இருக்கும் கருமையை போக்க சிம்பிள் டிப்ஸ்!

ஃபேஸ்மாஸ்க்

கிண்ணத்தில் 1 தேக்கரண்டி ஆரஞ்சு தோல் பவுடர், 1 தேக்கரண்டி தேன் மற்றும் ரோஸ் வாட்டரைக் கலக்க வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவலாம். இதை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்தலாம்.

டோனர்

ஒரு கப் காய்ச்சி வடிகட்டில் நீரில் ஒரு தேக்கரண்டி அளவு ஆரஞ்சு தோல் தூள் சேர்க்க வேண்டும். பின், இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து, முகத்தைச் சுத்தம் செய்ய இந்த டோனரைப் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்து வர, முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறையத் தொடங்குகின்றன.

ஆரஞ்சு பழத்தோலில் உள்ள பல்வேறு பண்புகள் சரும பிரச்சனைகளை நீக்கி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் குறையத் தொடங்குகின்றன. எவ்வாறாயினும், ஒவ்வொருவருக்கும் சருமம் தனித்தன்மை வாய்ந்ததாகும். எனவே புதிய வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது அல்லது நிபுணர்களிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Ways To Remove Dark Spots: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் மறைய சில வழிகள்!

Image Source: Freepik

Read Next

Glowing Skin Tips: பார்லர் போகாமல் வெறும் 2 நிமிடத்தில் முகம் பளபளக்க வீட்டிலேயே இதை செய்யுங்க!

Disclaimer