Black Neck Remedies: கழுத்தில் இருக்கும் கருமையை போக்க சிம்பிள் டிப்ஸ்!

  • SHARE
  • FOLLOW
Black Neck Remedies: கழுத்தில் இருக்கும் கருமையை போக்க சிம்பிள் டிப்ஸ்!

கழுத்து கருமை நீங்க இதை செய்யவும்

முகத்தை அழகாக காட்டவும், களங்கமற்றதாகவும் காண்பிக்க பெண்கள் பலவிதமான க்ரீம்களை பயன்படுத்துகிறார்கள். பேக்குள், மசாஜ், பார்லர் சென்று சிகிச்சை என பலவகையில் முகத்தை அழகாக வைத்திருக்கிறார்கள். சூரிய வெளிச்சம், மாசுபாடு போன்றவைகளை முகம் மட்டும் சந்திப்பதில்லை கழுத்தும் தான் சந்திக்கிறது என்பதை பலரும் மறந்துவிடுகிறார்கள். முகத்தை பாதுகாக்கும் நாம் கழுத்தை மறந்துவிடுகிறோம்.

இதையும் படிங்க: Causes of Pimples: முகத்தில் பருக்கள் வர முக்கிய காரணம்!

உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு, ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்டவையை கழுத்து கருமையாக மாற்றுகிறது. கழுத்து கருப்பாக மாறினால், முகத்தின் அழகையும் சேர்த்து கிடைக்கும். சில இயற்கையான பேக்குகள் கழுத்தில் உள்ள கருமையை நீக்கி பிரகாசமாக மாற்ற உதவுகிறது. இதற்கான தீர்வுகளை பார்க்கலாம்.

ஓட்ஸ் நன்மைகள்

ஓட்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை சருமத்தை சுத்தப்படுத்தவும் ஈரப்பதமாக்கவும் உதவுகின்றன. ஓட்ஸ் கருமையான கழுத்து தோலை ஒளிரச் செய்வதில் பயனுள்ளதாக இருக்கும். கழுத்து கருமையால் பாதிக்கப்பட்டிருந்தால். ஓட்ஸை அரைத்து அதில் சிறிது தக்காளி விழுது சேர்த்து கலந்து கொள்ளவும். பேஸ்ட் செய்து கழுத்தில் தடவவும். 20 நிமிடங்கள் உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவவும். கழுத்துப் பகுதி கருமை நிறம் மாற இது மிக பயணுள்ளதாக இருக்கும்.

ஆரஞ்சு தோல்களையும் பயன்படுத்தலாம்

ஆரஞ்சு தோலில் சருமத்தை வெண்மையாக்கும் தன்மை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரஞ்சு தோல்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கழுத்து கருமையை ஏற்படுத்தும் டைரோசின் கலவைக்கு எதிராக போராடுகிறது. ஆரஞ்சு தோல் தூளுடன் பால் அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை கழுத்தில் தடவி 10-15 நிமிடங்கள் உலர விட வேண்டும். அதன் பிறகு கழுத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால், கழுத்து கருமை குறைந்து சாதாரண நிறத்தில் இருக்கும்.

எலுமிச்சை சாறை இப்படி பயன்படுத்துங்கள்

எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் டைரோசினுக்கு எதிராக போராடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரோஸ் வாட்டருடன் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலர விடவும், பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை தினமும் தடவி வந்தால் கழுத்து கருமை குறையும்.

கற்றாழை பயன்பாடு

கற்றாழை சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. சருமத்தை ஒளிரச் செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. கற்றாழை கூழ் கழுத்தில் தடவி, மெதுவாக மசாஜ் செய்யவும். அதன் பிறகு 10-15 நிமிடங்கள் உலர விடவும். அதன் பிறகு கழுத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி அடிக்கடி செய்து வந்தால்.. கழுத்தில் உள்ள கருமை நீங்கும்.

காபி தூளின் நன்மைகள்

காபி தூளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், டயர்சினை தடுத்து கழுத்தை கருமையாக மாற்றுவதில் இருந்து தடுக்கிறது. காபி தூளில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை கழுத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலர விடவும். பின்னர் அதை சுத்தம் செய்யவும். பிறகு மாய்ஸ்சரைசர் தடவவும். இந்த பேக்கை வாரம் ஒருமுறை தடவலாம்.

பல நன்மைகள் அளிக்கும் கடலை மாவு

அழகு பராமரிப்பில் கடலை மாவு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கொண்டைக்கடலை மாவு சருமத்தை மென்மையாக்க உதவுகிறது, சருமத்தை சுத்தப்படுத்துகிறது. இதனுடன் உளுந்து மாவு இரண்டு ஸ்பூன் எடுத்து சிறிது மஞ்சள் சேர்க்கவும். அதனுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கவும். இந்த பேஸ்ட்டை கழுத்தில் தடவவும். 15 நிமிடங்கள் உலர விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த மருந்தை வாரம் இருமுறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிங்க: மஞ்சள் மற்றும் பால் கொண்டு முகத்தை சுத்தம் செய்வது எப்படி?

தக்காளி பயன்படுத்தலாம்

பழுத்த தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். கழுத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். நன்கு காய்ந்த பின் கழுவவும். பின்னர் உங்கள் தோல் வகைக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தடவினால் கருமை குறையும்.

இந்த முறைகள் கழுத்துக் கருமையை போக்கும் என்றாலும் அதீத தாக்கத்தை சந்திக்கும் போது உடனே மருத்துவரை கலந்தாலோசித்து தீர்வு காண்பதே சிறந்த முடிவாக இருக்கும்.

image source: freepik

Read Next

Summer Skin Care: கோடையில் சாப்பிட வேண்டிய காய்கறிகள்?

Disclaimer

குறிச்சொற்கள்