கழுத்து சுற்றி உள்ள கருமையை இயற்கையான முறையில் நீக்குவது எப்படி?

  • SHARE
  • FOLLOW
கழுத்து சுற்றி உள்ள கருமையை இயற்கையான முறையில் நீக்குவது எப்படி?


How to remove dark spots on your neck: இன்று பலரும் சரும பராமரிப்பில் அதீத கவனம் செலுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, முகத்தைப் பராமரிப்பதில் பல்வேறு சரும பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இதில் பலர் முகத்தைப் பராமரிக்கும் வேளையில், கழுத்தைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. நீங்கள் பலரின் முகம் வெண்மையாக இருப்பதையும், கழுத்து கருமையாக இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். இதற்கு முக்கிய காரணம் கழுத்தில் சரியான சரும பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே காரணமாகும்.

குறிப்பாக தோல் தடிமனாக இருக்கும் பகுதிகள், வியர்வையின் காரணமாக, சூரிய ஒளி, அல்லது மோசமான சுகாதார நடைமுறைகள் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்ட போன்ற பல்வேறு காரணிகளால் கழுத்து கருமை ஏற்படலாம். இது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். கழுத்து கருமையாக இருப்பது ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சினை இல்லை எனினும், இது ஒருவரின் நம்பிக்கையைப் பாதிக்கலாம். எனினும், சில இயற்கையான வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் கழுத்தில் உள்ள கருமையை நீக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Remedies for Dark Elbows: முழங்கை மற்றும் முழங்கால்களில் உள்ள கருமையை நீக்க சூப்பர் வீட்டு வைத்தியம்!

கழுத்து கருமையை நீக்க உதவும் டிப்ஸ்

நீரேற்றத்துடன் இருப்பது

சருமம் நீரேற்றமாக இல்லாத போது கழுத்தில் கருமை ஏற்படலாம். எனவே சருமத்தை உள்ளேயும் வெளியேயும் நீரேற்றமாக வைத்திருப்பது முக்கியமாகும். அதன் படி, ஆரோக்கியமான மற்றும் மென்மையான சருமத்தை பராமரிக்க நாள் முழுவதும் தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். கழுத்தை நீரேற்றமாக வைக்க, அதில் மாய்ஸ்சரைசரைத் தடவலாம்.

சரியான சுகாதார பராமரிப்பு

கழுத்தில் உள்ள கருமைக்குச் சிகிச்சையளிக்க அல்லது தடுக்க உதவும் எளிய வழிகளில் ஒன்று நல்ல சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும். எனவே க்ளென்சர் அல்லது மென்மையான சோப்பு கொண்டு, தினமும் கழுத்தை சுத்தம் செய்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதை வாரத்திற்கு ஒன்று அல்லது இருமுறை செய்வது, வழக்கமான உரித்தல் மற்றும் இறந்த சரும செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்கி, சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.

சூரிய ஒளியைத் தவிர்ப்பது

அதிக சூரிய ஒளியின் காரணமாக, கழுத்துப் பகுதியில் தோன்றும் கருமை மோசமாகலாம். எனவே தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க வேண்டும். சூரிய ஒளி வெளிப்பாட்டைத் தவிர்க்க, கழுத்தில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இது தவிர, துண்டு அல்லது வேறு ஏதேனும் துணியின் உதவியுடன் சருமத்தை மூடிக் கொண்டு, சூரிய ஒளியைத் தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வாயைச் சுற்றி இருக்கும் கருமையை நீக்க இந்த ரெமிடிஸ் ட்ரை பண்ணுங்க

வெள்ளரிக்காயைப் பயன்படுத்துதல்

இயற்கையான சருமத்தை பிரகாசமாக்கும் விளைவுகளை வெள்ளரிக்காய் கொண்டுள்ளது. மேலும், இது மிகவும் இனிமையானதாகவும், சருமத்தைக் குளிரவைக்கும் தன்மை கொண்டவையாக அமைகிறது. கழுத்து கருமையை நீக்க வெள்ளரிக்காய் ஒன்றை அரைத்து, அதைக் கழுத்தில் தடவிக் கொள்ளலாம். இதை 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். இவை சருமத்தின் நிறமியைக் குறைத்து, நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

கற்றாழை ஜெல்

பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட கற்றாழை சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் சிறந்த தேர்வாகும். இது அதன் இனிமையான மற்றும் சருமத்தை ஒளிரச் செய்யும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. புதிய கற்றாழை ஜெல்லை எடுத்து, அதை கழுத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே வைத்து பின் கழுவி விடலாம். இவ்வாறு தினமும் செய்து வருவதன் மூலம் சருமத்திற்கு ஊட்டமளித்து பிரகாசமான சருமத்தைத் தருகிறது.

எலுமிச்சைச் சாறு

பொதுவாக, எலுமிச்சை ஒரு இயற்கையான ப்ளீச்சிங் முகவராகச் செயல்படுகிறது. எனவே இது கருமையாக உள்ள சருமத்தை ஒளிரச் செய்ய உதவுகிறது. புதிய எலுமிச்சை சாற்றை, பருத்தி பஞ்சு ஒன்றில் தடவி, சுமார் 10-15 நிமிடங்கள் வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளலாம். சிறந்த முடிவுகளைப் பெற, இந்த தீர்வை வாரத்திற்கு சில முறை பயன்படுத்தலாம். எனினும், உணர்திறன் வாய்ந்த அல்லது திறந்த காயங்கள் உள்ள சருமங்களில் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது அவசியமாகும்.

இவ்வாறு எளிமையான மற்றும் இயற்கையான முறையில் கழுத்தில் உள்ள கருமையை எளிதில் நீக்கலாம். மேலும், இதன் மூலம் சருமத்தைப் பொலிவுறச் செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Black Neck Remedies: கழுத்தில் இருக்கும் கருமையை போக்க சிம்பிள் டிப்ஸ்!

Image Source: Freepik

Read Next

Makeup Removal Home Remedies: “போ மாட்டேன் போ”… அடம்பிடிக்கும் மேக்கப்பை நீக்க இயற்கையான 6 வழிமுறைகள்!

Disclaimer