கழுத்து மட்டும் கருப்பா அசிங்கமா இருக்கா... அழகுக்கலை நிபுணர் சொல்றத கேளுங்க!

  • SHARE
  • FOLLOW
கழுத்து மட்டும் கருப்பா அசிங்கமா இருக்கா... அழகுக்கலை நிபுணர் சொல்றத கேளுங்க!


Dark Neck Remedies: பெருவாரியானப் பெண்கள் முகத்திற்கு மட்டுமே அதிக அளவில் சரும பராமரிப்பு வேலைகள் செய்கின்றனர். நிறைய பெண்கள் தங்களது கழுத்தை பராமரிக்க மறந்துவிடுகின்றனர். முகத்தை விட அதிகமாய் கழுத்தில் தான் நிறைய வியர்வை தங்குகிறது, மற்றும் நகை, அணிகலன் அணியும் போது நிறைய சரும பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, முகத்தை காட்டிலும் கழுத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம். சிலரது முகம் பளபளப்பாய் டாலடிக்கும். ஆனால் கழுத்தைச் சுற்றி இருக்கும் கருமை மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடும். சங்குக் கழுத்தழகை பெற, கழுத்தின் கருமையைப் போக்க வீட்டிலேயே மருந்திருக்கு என்கிறார், தேஜஸ்வினி அழகுக்கலை நிபுணர் விஜயலட்சுமி.

வீட்டிலேயே இருக்கு சிம்பிள் பொருட்கள் போதும்:

  • எலுமிச்சையானது இயற்கை பிளீச் ஆக செயல்படுகிறது தினசரி குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக கழுத்தின் கருமை பகுதிகளில் எலுமிச்சை சாற்றினை தடவி ஊறவைக்கவும். பின்னர் குளிக்க கழுத்தின் கருமை படிப்படியாக மறையும்.
  • முகத்தையும்,கழுத்தையும் அழகாக பளிச் தோற்றத்துடன் மாற்றும் சக்தி பால்பவுடருக்கு உண்டு. ஒரு டீஸ்பூன் பால் பவுடர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு. அரை டீ ஸ்பூன் பாதம் எண்ணெய் கலந்து கலந்து பசை போல கலக்கவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதிகளில் அப்ளை செய்யவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை இதுபோல் பேக் போட முகமும், கழுத்தும் பளிச் ஆகும்.
  • அதேபோல் ஓட்ஸ், யோகர்டு, தக்காளி ஜூஸ் கலந்து பேக் போடவும் இது கழுத்து கருமைக்கு நல்ல பலனை தரும்.
  • கழுத்து கருமையை போக்குவதில் மஞ்சள்தூள் சிறந்த நிவாரணி. சிறிதளவு மஞ்சள்தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதியில் அப்ளை செய்யவும். கழுத்துக் கருமை போகும்.
  • கழுத்தின் கருமையை போக்குவதில் உருளைக்கிழங்கு சிறந்த பிளீச் ஆக செயல்படுகிறது. உருளைக்கிழங்களை தோல் நீக்கி சீவி எடுத்துக்கொள்ளவும். அதை கழுத்துக் கருமை உள்ள பகுதிகளில் தேய்க்கலாம். பின்னர் அரை மணிநேரம் கழித்து குளிக்க கருமை படிப்படியாய் மறையும்.
  • அதேபோல் தக்காளியை நன்றாக மசித்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதிகளில் அப்ளை செய்யவும். எளிமையான இந்த வைத்தியத்தை தினசரி செய்து வர சில வாரங்களில் கழுத்துக் கருமை சரியாகும்.
  • ஆரஞ்சு சுளையை எடுத்து அதனுடன் பன்னீர் அல்லது பால் கலந்து அப்ளை செய்யவும். 15 முதல் 20 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கழுத்துப்பகுதி பளிச் என்று மாறும்.
  • கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விட்டு பிறகு கழுவி விடவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும். 
  • தர்ப்பூசணி பழச்சாறுடன் பயத்த மாவைக் குழைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும். அரை மணி நேரம் கழித்து இந்தப் பேஸ்ட்டை எடுத்துக் கழுத்தில் தடவி வர, வெயிலில் வறண்டுபோன கழுத்து பளிச்சிடும்.
  • ஒரு டீஸ்பூன் வெங்காயச் சாறு, சிறிது ரோஸ்வாட்டர், இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெய், ஒரு ஸ்பூன் பயத்தமாவு நான்கையும் கலந்து கழுத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் நாளடைவில் அந்த கறுப்பு நீங்கிவிடும்.
  • பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை கழுத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து வரலாம்.
  • முட்டைக்கோஸை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.
  • பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் – இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் படிப்படியாக கருமை நிறம் மறையும்.
  • சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். கடலை மாவு, தயிர் கலந்தும் தடவலாம்.

தக்காளி மற்றும் எலுமிச்சை மாஸ்க்

தக்காளி இங்கு ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக இருந்து உங்களது கழுத்தில் ஏற்படும் கருப்புக் கோடுகளை அகற்றி வெண்மையடைய உதவுகிறது.

தக்காளி ஜூஸை உங்களது கழுத்தில் நன்கு தேய்த்து கழுவிய பின்பு எலுமிச்சை ஜூஸை அதேப்போல பயன்ப்படுத்தவும். பின்பு நீங்கள் இந்த மாஸ்க்கை கழுத்து பகுதியில் உபயோகப்படுத்தி 2௦ நிமிடம் கழித்து தூய்மையான நீரில் கழுத்தை கழுவினால் சருமம் மென்மை அடையும்.

வெள்ளரி மற்றும் தக்காளி

வெள்ளரியையும், தக்காளியையும் நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு அதை கழுத்தில் மாஸ்க் போடவும். இது உங்களது கழுத்து பகுதி சருமத்தை இறுக்கமடைய உதவுகிறது. உங்கள் மேனி வெண்மையடைய விரும்பினால் இதோடு நீங்கள் எலுமிச்சையையும் சேர்த்துக் கொள்ளாலாம்.

வால்நட் மாஸ்க் (walnut)

உங்களது கழுத்து பகுதியில் தங்கும் இறந்த செல்களை அகற்ற இந்த வால்நட் மாஸ்க் பயன்படுத்தலாம். மற்றும் வால்நட்டில் உள்ள வைட்டமின் ஈ உங்களது கழுத்து பகுதி சருமத்தை மிருதுவாக்கிட உதவுகிறது.

பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை

கழுத்து பகுதி சருமத்திற்கு இந்த பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை மாஸ்க் மிகவும் நல்லது ஆகும். ஏனெனில், பாதாமில் இருக்கும் வைட்டமின் ஈ இயற்கையானது ஆகும். இதோடு ஆலிவ் எண்ணெய் மற்றும் சிறிதளவு எலுமிச்சையை சேர்த்துப் பயன்படுத்துவது ஒரு நல்ல காம்பினேசன் ஆகும்.

அரிசி தண்ணீர்

உங்களது கழுத்தில் இருக்கும் கருமை அகல வேண்டுமெனில் அரிசி தண்ணீரைப் பயன்படுத்துங்கள். இது நல்ல பயன் தரும்.

Image Source :Freepik

Read Next

இரவில் முகத்திற்கு தேன் தடவுவது நல்லதா? இதன் பயன்கள் இங்கே!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version