Can lemon remove dark inner thighs: ஆண்கள், பெண்கள் என இருவருமே தங்களது சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதிலும் குறிப்பாக, வெண்மை போன்ற பளபளப்பான சருமத்தைப் பெற பல்வேறு வீட்டு வைத்தியங்களைக் கையாள்கின்றனர். ஆனால், சில சமயங்களில் உடலில் ஒரு சில இடங்களில் நாம் கருமையாக இருப்பதை உணரலாம். தொடைகளில் இருக்கும் கருமை கூட அவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லாத தன்மையை ஏற்படுத்தலாம்.
ஆனால் பலரின் தொடைகளில் கருமையான புள்ளிகள் இருப்பதை பார்த்திருப்பர். இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதிகப்படியான வியர்வை, ஹார்மோன் சமநிலையின்மை, இறுக்கமான ஆடைகளை அணிவது, தோல் ஒன்றுக்கொன்று உராய்வது மற்றும் சரியான பராமரிப்பு இல்லாதது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. இந்நிலையில், சரியான நேரத்தில் சரியான பராமரிப்பு எடுக்கப்படாவிட்டால் இந்த கருமை மேலும் மோசமடையக்கூடும்.
இந்த பதிவும் உதவலாம்: Thighs Burning: ரெண்டு தொடையும் உரசி, உரசி ஏற்பட்ட காயத்துக்கு வீட்டிலேயே இருக்கு சூப்பர் தீர்வு!
தொடைப்பகுதியின் கருமையை நீக்க உதவும் வைத்தியங்கள்
தொடைப்பகுதியில் காணப்படும் கருமையை நீக்குவதற்கு சில இயற்கையான வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். இதற்கு எலுமிச்சை மற்றும் தயிர் இரண்டுமே தொடைப்பகுதியில் உள்ள கருமையை நீக்கலாம்.
எலுமிச்சை மற்றும் தயிர் குறிப்புகள்
தொடைகளில் உள்ள கருமை நிறம் நீச்சலுடைகள் அல்லது குட்டையான ஆடைகளை அணிய தயங்க வைக்கலாம். இந்நிலையில், தொடைகளில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்க விரும்புபவர்கள் இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றலாம். தொடைப்பகுதியின் கருமையை நீக்க எலுமிச்சை மற்றும் தயிர் போன்ற இயற்கை வைத்தியம் மூலம் வீட்டிலேயே இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
முதலில் சுத்தம் செய்வது
முதலில் வெதுவெதுப்பான நீரில் தொடைகளை நன்கு கழுவ வேண்டும். இது சருமத்தின் மேற்பரப்பில் படிந்துள்ள தூசி, வியர்வை மற்றும் அழுக்குகளை நீக்க உதவுகிறது. அதே சமயத்தில், எலுமிச்சை மற்றும் தயிர் போன்ற இயற்கை பொருட்கள் சருமத்தில் ஆழமாக உறிஞ்ச உதவுகிறது. எனவே சருமத்தை முதலில் சுத்தம் செய்ய வேண்டும்.
தயிர் மற்றும் எலுமிச்சை பேஸ்ட் தயாரிப்பது
இந்த கலவை தயார் செய்ய ஒரு டீஸ்பூன் புதிய தயிரை எடுத்து அதில் அரை எலுமிச்சையை பிழிந்து கொள்ளலாம். இப்போது இவை இரண்டையும் நன்றாக கலந்து மென்மையான மற்றும் அடர்த்தியான பேஸ்டை தயார் செய்ய வேண்டும். இதை கருமையான பகுதிகளில் தடவலாம். இந்தக் கலவை சருமத்தை இயற்கையாகவே வெண்மையாக்கவும், சருமத்தை உரிக்கவும் உதவுகிறது. மேலும் இது படிப்படியாக கரும்புள்ளிகளை நீக்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: தொடையில் வலி ஏற்பட என்ன காரணம் தெரியுமா? அதிலிருந்து விடுபட உதவும் சூப்பர் ரெமிடிஸ் இதோ
சருமத்தில் தடவுவதற்கான சரியான வழி
இந்த தயாரிக்கப்பட்ட எலுமிச்சை, தயிர் கலவையை விரல்களால் தொடைகளின் கருமையான பகுதிகளில் லேசாக தடவ வேண்டும். இதை 10 முதல் 15 நிமிடங்கள் வரை சருமத்தில் அப்படியே வைக்கலாம். இவ்வாறு வைப்பது எலுமிச்சை மற்றும் தயிரின் ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் உறிஞ்சப்படும் வகையில் அமைகிறது. இதை நன்றாகப் பயன்படுத்துவதன் மூலம் இது சருமத்தில் சமமாக திறம்பட செயல்பட முடிகிறது.
மெதுவாக தேய்ப்பது
தயிர் மற்றும் எலுமிச்சை சேர்த்த கலவையை முழுவதுமாக உலருவதற்கு முன், இறந்த சரும செல்களை அகற்றுவதற்கு இதை வட்ட இயக்கத்தில் லேசாக தேய்க்க வேண்டும். அதன் பிறகு, இதை வெதுவெதுப்பான நீரில் மெதுவாக கழுவலாம். மேலும் இது சருமத்தை சுத்தமாகவும், மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் உணர வைக்கிறது. மேலும் இது படிப்படியாக கருமையையும் குறைக்கிறது.
இவ்வாறு எளிமையான வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் தொடைப்பகுதிகளின் கருமையை நீக்கலாம். எனினும், சருமம் உணர்திறன் மிக்கது என்பதால், இதைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது. இதன் மூலம் எரிச்சல், அரிப்பு போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: தொடை உராய்வால் அவதியா? வலி டக்குனு சரியாக இந்த ரெமிடிஸ் யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik