சிலருக்கு தொடைகள் மற்றும் கால்கள் எடை கூடுவதால், நடக்கும் போது ஏற்படும் உராய்வு காரணமாக புண்கள் உருவாகுகின்றன. இதனை வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டே சரி செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
எல்லோருடைய உடலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலர் ஒல்லியாகவும் சிலர் குண்டாகவும் இருப்பார்கள். அவர்களது உடல் கொழுப்பு அளவு அதிகமிருக்கும். சிலருக்கு உடம்பெல்லாம் மெலிந்திருந்தாலும், கால்கள் கொழு,கொழுப்பாக இருக்கும். இதனால் நடக்க சிரமம் ஏற்பட்டு, தொடைகளுக்கு அருகில் சருமம் சிவந்து போதல், சொறி போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கும்போது வீட்டில் இருந்தபடியே சில டிப்ஸ்களை பின்பற்றலாம்.
ஓட்ஸ்:

ஓட்ஸில் சருமத்தை மென்மையாக்கும் தன்மை உள்ளது. ஓட்ஸில் சிறிது தயிர் கலந்து பிரச்சனை உள்ள இடத்தில் தடவி, நன்கு காய்ந்த பிறகு கழுவவும். இதன் மூலமாக சருமம் நன்கு மென்மையடையும்.
ஐஸ் ஒத்தடம்:
பாதிக்கப்பட்ட பகுதியில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது நல்ல பலன் தரும். இதன் காரணமாக, வீக்கம் பெருமளவில் குறையும். இதற்கு ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் போட்டு பிரச்சனை உள்ள இடத்தில் அழுத்தவும். இதனால் பிரச்சனை குறையும்.
வாழைப்பழம்:
வாழைப்பழத்தை மென்மையான கூழாக பிசைந்து கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இவ்வாறு செய்வதால் தொடை ஈடுக்குகளுக்கு அருகே ஏற்பட்டுள்ள சிவத்தல் மற்றும் கரடுமுரடான தன்மை பெருமளவு குறையும்.
மாய்ஸ்சரைசர்:
தொடை பகுதிகளில் நல்ல மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துங்கள். இதற்கு வாஸ்லைன், கிளிசரின், ஹைலூரோனிக் அமிலம், லிப் பாம், பாடி ஆயில், லோஷன் போன்றவற்றை தடவலாம். இதனால் சரும பிரச்சனைகள் நீங்கும். சொறி மற்றும் வீக்கமும் குறையும்.
டீட்ரீ ஆயில்:
டீட்ரீ ஆயில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதை தடவுவதால் தொற்று மற்றும் அழற்சியை குறைக்கிறது. இருப்பினும், தேயிலை மர எண்ணெயை நேரடியாக தோலில் தடவுவது நல்ல யோசனையல்ல. எனவே, அதை மற்றொரு எண்ணெயில் கலந்து பயன்படுத்த வேண்டும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துவதால் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். பேக்கிங் சோடாவில் தேங்காய் எண்ணெய் கலந்து பிரச்சனை உள்ள இடத்தில் தடவவும். இது வியர்வையைக் குறைக்கிறது. தேங்காய் எண்ணெயின் பண்புகள் தொடைகளில் ஏற்படும் அழற்சி மற்றும் சொறி ஆகியவற்றை குறைக்கிறது.
Image Source: Freepik