தொடையில் வலி ஏற்பட என்ன காரணம் தெரியுமா? அதிலிருந்து விடுபட உதவும் சூப்பர் ரெமிடிஸ் இதோ

Causes of thigh pain: அன்றாட வாழ்வில் பல்வேறு காரணங்களால் தொடையில் வலி ஏற்படலாம். இதனால் நடப்பதில் கூட சிரமம் உண்டாகலாம். இதில் தொடை வலி எதனால் ஏற்படுகிறது மற்றும் அதைத் தவிர்க்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
தொடையில் வலி ஏற்பட என்ன காரணம் தெரியுமா? அதிலிருந்து விடுபட உதவும் சூப்பர் ரெமிடிஸ் இதோ

Causes of thigh pain and home remedies to get rid of it: நாம் பலரும் அன்றாட வாழ்வில் பல்வேறு உடல் உறுப்புகளில் வலி ஏற்படுவதை உணர்ந்திருப்போம். இதில் முக்கிய உறுப்பாக விளங்கும் கால் தொடையும் பல காரணங்களால் வலி ஏற்படலாம். இவ்வாறு ஏற்படும் தொடை வலிக்கு அதிக அழுத்தம், தசை கிழிதல் போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கலாம். பொதுவாக, நாம் நடக்கும் போது, எழுந்திருக்கும் போது, உட்காரும் போது மற்றும் பிற செயல்களைச் செய்யும்போது தொடைகள் நம் உடலைத் தாங்குகின்றன. இந்நிலையில் தொடையில் வலி ஏற்பட்டால், சாதாரணமாக நடப்பதில் கூட சிரமம் ஏற்படலாம்.

தொடை வலியின் காரணமாக சில சமயங்களில் அந்தப் பகுதியில் மரத்துப் போகுதலை ஏற்படுத்தக்கூடும். மேலும், தொடையில் வலி ஏற்பட்டால் எரிச்சல் அல்லது கூச்ச உணர்வு ஏற்படலாம். இது தவிர அரிப்பு, வீக்கம் போன்றவையும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே தொடைப்பகுதியில் வலி ஏற்படுவதை அசாதாரணமாகக் கருதக்கூடாது. இதில் தொடை வலி ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்தும், அதிலிருந்து விடுபட உதவும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்தும் காணலாம்.

தொடை வலி எதனால் ஏற்படுகிறது?

உடலில் தொடை வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

  • நீண்ட நேரம் ஒரே நிலையில் இருப்பது தொடை வலியை ஏற்படுத்தக்கூடும்
  • உடலில் கொழுப்பு அதிகரிப்பின் காரணமாக தொடை வலி ஏற்படலாம்
  • உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது தொடை வலி ஏற்படுகிறது
  • தொடை வலியானது தசைகள், எலும்புகள் அல்லது நரம்புகள் தொடர்பான பிரச்சனைகளால் ஏற்படுகிறது
  • உடலில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் குறைபாட்டின் காரணமாக தொடை வலி ஏற்படலாம்
  • எலும்பு முறிவு காரணமாகவும் தொடையில் வலி ஏற்படுத்தக்கூடும்
  • உடலில் இரத்தம் உறைவதன் காரணமாக தொடைகளில் வலி ஏற்படுகிறது

இந்த பதிவும் உதவலாம்: Leg cramp at night: தூங்கும்போது கால் பிடிப்பு அல்லது வலி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

தொடை வலியைப் போக்குவதற்கான வீட்டு வைத்தியங்கள்

தொடை வலி பிரச்சனையைத் தீர்க்க MRI, CT ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே போன்ற சோதனைகள் செய்யப்படுகிறது. இந்த தொடை வலிக்கு இரத்த உறைவு காரணமாக இருக்கலாம். இரத்தக் கட்டிகளைப் பரிசோதிக்க அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்படுகிறது. இப்போது தொடை வலி பிரச்சனையிலிருந்து விடுபட உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

பச்சை பூண்டு

தொடை வலியைப் போக்குவதற்கு பச்சை பூண்டு மிகுந்த நன்மை பயக்கும். மூட்டு வலியைப் போக்கவும் பச்சை பூண்டு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டை பச்சையாக சாப்பிடலாம். பூண்டில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, நார்ச்சத்து, புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் இதில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. தொடை வலியுடன், பல்வலியிலிருந்து நிவாரணம் பெற பச்சை பூண்டை எடுத்துக் கொள்ளலாம்.

யூகலிப்டஸ் எண்ணெய்

தொடை வலியைப் போக்குவதற்கு யூகலிப்டஸ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதற்கு யூகலிப்டஸ் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இதன் பயன்பாடு தொற்று பிரச்சனையையும் நீக்குகிறது. இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வது, எரியும் உணர்வை நீக்குகிறது. தேங்காய் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற எந்த கேரியர் எண்ணெயுடனும் யூகலிப்டஸ் எண்ணெயைக் கலக்க வேண்டும். இந்த எண்ணெயை இரு கைகளிலும் எடுத்துக்கொண்டு, அதை தொடைகளில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் மசாஜ் செய்வதன் மூலம் சிறந்த பலன்களைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: High Cholesterol: நடக்கும்போது இந்த அறிகுறிகள் தோன்றுகிறதா? உஷார் ஹை கொலஸ்ட்ராலாக இருக்கலாம்!

இஞ்சி

தொடை தசைகளில் வலி ஏற்பட்டால் இஞ்சியைப் பயன்படுத்தலாம். இதற்கு இஞ்சி விழுதுடன் பாதாம் எண்ணெயை கலக்க வேண்டும். இந்தக் கலவையைக் கொண்டு தொடைகளை மசாஜ் செய்வது நிவாரணம் அளிக்கிறது. மேலும் இஞ்சி சாறு குடிப்பது வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. தொடை வலியிலிருந்து நிவாரணம் பெற விரும்புபவர்கள், இஞ்சியை அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி, தேன் சேர்த்து குடிக்கலாம்.

ஐஸ்கட்டி பயன்பாடு

தொடை வலிக்கு ஐஸ்கட்டியைப் பயன்படுத்தலாம். இதற்கு ஐஸ் கட்டியுடன் சேர்த்து உப்பையும் சூடாக்க வேண்டும். இதை ஒரு சுத்தமான பருத்தி துணியில் போட்டு தடவ வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை தடவலாம். அதன் பின்னர் 1 மணி நேரம் கழித்து மீண்டும் தடவலாம். இவ்வாறு செய்வது நிவாரணத்தைத் தருகிறது.

தினமும் ஓடுவது

தொடைகளில் கொழுப்பு அதிகரிப்பதன் காரணமாக வலி ஏற்படலாம். எனவே தினமும் ஓடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தினமும் 2 முதல் 3 கிலோமீட்டர் ஓடுவது தொடை தசைகளை வலுப்படுத்துகிறது. எனினும், நரம்பு அல்லது இதயம் தொடர்பான ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு ஓடுவது நல்லது. இது தவிர, எந்த இயந்திரமும் இல்லாமல் செய்யக்கூடிய வான்வழி சைக்கிள் ஓட்டுதல் பயிற்சியும் ஒரு நல்ல தேர்வாகும். இதில் தரையில் முதுகில் படுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு கால்களையும் காற்றில் மிதப்பதாக வைக்க வேண்டும். இதை 10 முதல் 12 முறை மீண்டும் செய்யலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Leg Pain During Periods: பீரியட்ஸ் டைம்ல கால்வலி வருதா? இது எல்லாம் தான் காரணமாம்

Image Source: Freepik

Read Next

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சாதாரண வாழ்க்கையை வாழ முடியுமா? - மருத்துவர் விளக்கம்!

Disclaimer