Doctor Verified

Leg Pain During Periods: பீரியட்ஸ் டைம்ல கால்வலி வருதா? இது எல்லாம் தான் காரணமாம்

  • SHARE
  • FOLLOW
Leg Pain During Periods: பீரியட்ஸ் டைம்ல கால்வலி வருதா? இது எல்லாம் தான் காரணமாம்


Causes Of Leg Pain During Menstruation: பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாய் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளைச் சந்தித்து வருகின்றனர். அதன் படி, சிலருக்கு வயிற்று வலி, முதுகுவலி போன்றவை ஏற்படலாம். சில பெண்கள் மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத கால்வலியை சந்திப்பர். இந்த வலி இரவில் தூங்கும் போது அல்லது திடீரென எந்த நேரத்திலும் ஏற்படலாம்.

இவ்வாறு மாதவிடாயின் போது ஏற்படும் கால்வலி சில சமயங்களில் அதிகமாகலாம். இந்த நேரங்களில் வலியைக் குறைக்க வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இது எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து பலருக்கும் தெரியாது. இதில் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கால் வலிக்கான காரணங்கள் குறித்து லக்னோவிலுள்ள ஜல்கரிபாய் மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் தீபா ஷர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Hot Water Bag: மாதவிடாய் வலியிலிருந்து நீங்க ஹாட் வாட்டர் பேக்.! எப்படி பயன்படுத்துவது?

மாதவிடாயின் போது ஏற்படும் கால்வலிக்கான காரணங்கள்

மாதவிடாய் காலத்தில் கால்வலி ஏற்பட சில காரணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.

  • மாதவிடாய் காலத்தில் போதிய ஓய்வு இல்லாத போது கால்வலி ஏற்படலாம். பெண்கள் வீடு மற்றும் அலுவலகம் போன்ற இரண்டின் பொறுப்புகளையும் கையாள்வதால் கால் வலி மற்றும் சோர்வு ஏற்படும்.
  • மாதவிடாய் காலத்தில் சிலர் நீர் உட்கொள்ளலைத் தவிர்ப்பர். இவை கால் தசைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக கால்வலி ஏற்படுகிறது.
  • இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளாததன் காரணமாகவும், கால்களில் வலி ஏற்படலாம். கால்களில் வலி இருப்பின், வைட்டமின் பி12, வைட்டமின் டி3 மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • மாதவிடாய் காலத்தில் கருப்பையில் சுருக்கம் ஏற்படும். இதன் காரணமாக இடுப்பு, முதுகு, கால்கள் அல்லது வயிறு போன்றவற்றில் வலி உண்டாகும்.
  • இந்த சூழ்நிலையில் அதிக நேரம் உட்காருவது, படுத்துக் கொள்வது அல்லது ஒரே நிலையில் இருப்பது போன்றவையும் கால்களில் வலியை ஏற்படுத்தும்.
  • மாதவிடாய் நேரங்களில் அதிக உடற்பயிற்சி செய்தால் கால்களில் வலி உண்டாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Salia Seeds For Female: பெண்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த ஒரு விதை போதும்.!

மாதவிடாய் கால்வலிக்கான சிகிச்சை முறைகள்

மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் கால்வலி நீங்க பின்வரும் சிகிச்சை முறைகளைக் கையாளலாம்.

  • மாதவிடாயின் போது கால்வலியைப் போக்க, கல் உப்பைப் பயன்படுத்தலாம். இதற்கு பாத்திரம் ஒன்றில் வெதுவெதுப்பான நீரைச் சேர்த்து கல் உப்பு சேர்த்து சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை கால்களை ஊறவைக்க வேண்டும்.
  • தேங்காய் எண்ணெயை சூடாக்கி, வெதுவெதுப்பான பிறகு சிறிது மஞ்சள் தூள் கலந்து காலில் தடவலாம். இவை விரைவில் நிவாரணம் அளிக்கும்.
  • யூகலிப்டஸ் எண்ணெயை லேசாக சூடாக்கி, பாதாம் எண்ணெய் சேர்க்கவும். இந்த எண்ணெயைக் கொண்டு லேசாக மசாஜ் செய்வது பாதங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

இந்த வழிகளில் மாதவிடாயின் போது ஏற்படும் கால்வலி பிரச்சனையைத் தீர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Period Pain Tips: பெண்களே.! மாதவிடாய் அசௌகரியத்தைக் குறைக்க நீங்க ஃபாலோப் பண்ண வேண்டியது இது தான்.

Image Source: Freepik

Read Next

Almond Benefits: பெண்கள் ஏன் பாதாம் சாப்பிட வேண்டும் தெரியுமா.!

Disclaimer