Doctor Verified

Salia Seeds For Female: பெண்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த ஒரு விதை போதும்.!

  • SHARE
  • FOLLOW
Salia Seeds For Female: பெண்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த ஒரு விதை போதும்.!


அந்த வகையில் சாலியா அல்லது ஹலீம் விதைகள் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இதற்கு சாலியா விதைகளில் உள்ள வைட்டமின்கள் ஏ, சி, பி மற்றும் இரும்பு, ஃபோலேட், புரதம், மற்றும் நார்ச்சத்துக்களே ஆகும். இவை பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமாகும். இதில் பெண்களுக்கு உதவும் சாலியா விதைகளின் நன்மைகள் குறித்து குழந்தைகள் மற்றும் தாய்வழி ஊட்டச்சத்து நிபுணர் ரமிதா கவுர் இன்ஸ்டகிராமில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Menopause Effects On Health: மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் இது தான்.!

பெண்களுக்கு சாலியா விதைகள் தரும் நன்மைகள்

பெண்கள் சாலியா விதைகள் அல்லது ஹலீம் விதைகளை உட்கொள்வது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.

மாதவிடாய் சுழற்சியை பராமரிக்க

பெண்கள் ஆரோக்கியமான மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பெற, சீரான மாதவிடாய் சுழற்சியைக் கொண்டிருப்பது அவசியமாகும். எனவே பெண்கள் ஹலீம் விதைகளை உட்கொள்வது மாதவிடாய் சுழற்சியை சீராக பராமரிக்க உதவுகிறது.

ஹீமோகுளோபின் அதிகரிக்க

பெண்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு, அவர்களின் ஹீமோகுளோபின் அளவு சமநிலையற்று காணப்படும். இந்த சூழ்நிலையில் பெண்கள் சாலியா விதைகளை உட்கொள்வது ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், பிரசவத்திற்கு பின் விரைவாக மீட்கவும் உதவுகிறது.

எலும்புகளை வலுப்படுத்த

சாலியா விதைகளில் உள்ள அத்தியாவசிய பண்புகள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், இதை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவு பராமரிக்கப்படுகிறது.

சருமம் மற்றும் முடி நன்மைக்கு

சாலியா விதைகள் முடி உதிர்வைத் தடுத்து, முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இதனை எடுத்துக் கொள்வது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Painkiller During Periods: மாதவிடாய் வலி நீங்க மாத்திரையா? இது தெரிஞ்சா நீங்க எடுத்துக்க மாட்டீங்க.

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

மற்ற காய்கறிகள் மற்றும் பழங்களின் விதைகளைப் போன்றே, சாலியா விதைகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நோயெதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்க உதவுகிறது.

தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு உதவும் விதமாக, தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க சாலியா விதைகள் மிகவும் நன்மை பயக்கும்.

சாலியா விதைகள் பெண்கள் எவ்வாறு பயன்படுத்துவது

  • ஹலீம் விதைகளை தேங்காய், பால், நெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளுடன் உட்கொள்ளலாம். இரவு தூங்கும் முன்பாக, 1/4 ஹலீம் விதைகளை பாலுடன் கலந்து சாப்பிடலாம்.
  • இதை லட்டுவாக தயார் செய்து உண்ணலாம். தேங்காய் துண்டுகளுடன் அல்லது தயிர், ஸ்மூத்தி அல்லது குலுக்கல் போன்றவற்றில் ஹலீம் விதைகளைச் சேர்த்து உண்ணலாம். ஆனால், ஒரு நேரத்தில் 1/4 தேக்கரண்டி அளவுக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது.

இவ்வாறு சாலியா விதைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மேலே கூறப்பட்ட ஆரோக்கியமான பலன்களைப் பெறலாம். எனினும் உடல் ஆரோக்கியத்திற்கு புதிதாக எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Gestational Diabetes Foods: கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கு இந்த உணவெல்லாம் சாப்பிடுங்க.

Image Source: Freepik

Read Next

Period Pain Tips: பெண்களே.! மாதவிடாய் அசௌகரியத்தைக் குறைக்க நீங்க ஃபாலோப் பண்ண வேண்டியது இது தான்.

Disclaimer

குறிச்சொற்கள்