$
Side Effects Of Taking Painkillers During Periods: மாதவிடாய் காலங்களில் பெண்கள் வயிற்று வலி, சோர்வு, முதுகு வலி, இடுப்பு வலி என பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிண்றனர். சிலர் இந்த மாதவிடாய் வலியைக் குறைப்பதற்காக அடிக்கடி மாத்திரைகளை எடுத்துக் கொள்வர். ஆனால், மாதவிடாய் வலி குறைப்பிற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் உடல் நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
மருந்துகளை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது. மாதவிடாய் காலத்தில் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதில், மாதவிடாயின் போது எடுத்துக் கொள்ளும் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து லக்னோ, கேர் இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்சஸ், டாக்டர் சீமா யாதவ் எம்.டி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Period Fatigue: மாதவிடாயின் போது ஏற்படும் சோர்வை சமாளிக்க உதவும் சில வழிகள்
மாதவிடாயின் போது மாத்திரைகள் உட்கொள்வதால் பக்கவிளைவுகள்
மாதவிடாய் காலத்தில் மருந்துகளை உட்கொள்வது பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மாதவிடாய் காலத்தில் மருந்துகளை உட்கொள்பவராக இருப்பின், அதனால் ஏற்படும் விளைவுகள் சிலவற்றைக் காணலாம்.
நெஞ்செரிச்சல் & வாந்தி
மாதவிடாயின் போது ஏற்படும் பொதுவான வலிகளில் ஒன்றாக வயிற்றுப்பிடிப்பு ஏற்படும். இதை போக்க பெண்கள் அடிக்கடி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் வயிற்றில் வாயு உண்டாகுதல், வயிற்றுப்போக்கு போன்றவையும் மாதவிடாய் காலத்தில் பொதுவானதாகும். எனவே உணவில் கவனம் செலுத்துவது, உடலை நீரேற்றமாக வைத்திருப்பது போன்றவற்றைக் கையாள வேண்டும். இந்த நேரங்களில் மருந்துகளை உட்கொள்வது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம். மேலும், மாதவிடாயில் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு மருந்துகளை உட்கொள்ளும் போது, பலரும் வாந்தி பிரச்சனையை அனுபவிக்கின்றனர்.

தூக்க பிரச்சனை
மாதவிடாய் காலத்தின் போது மருந்துகளை உட்கொள்வது தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தலாம். இது தவிர, மாதவிடாய் காலத்தில் மருந்துகளை உட்கொள்வது வயிற்று வலி பிரச்சனையை அதிகரிக்கலாம்.
குமட்டல் உணர்வு
மாதவிடாய் வலியைக் குறைக்க எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் வயிற்று வலியுடன் குமட்டல் உணர்வையும் ஏற்படுத்துகிறது. மேலும் இது கடுமையான தலைவலியை ஏற்படுத்தலாம். மாதவிடாய் மருந்துகளால் இரத்தப்போக்கு பிரச்சனையும் ஏற்படும். இதனால், பலர் அசௌகரியத்தையே உணர்வர்.
இந்த பதிவும் உதவலாம்: Skin Condition During Periods: மாதவிடாய் சமயத்தில் சரும பிரச்சனையா? அதுக்கு இத செய்யுங்க.
மலச்சிக்கல் பிரச்சனை
மாதவிடாயின் போது ஏற்படும் வலியை நீக்க பாரசிட்டாமல் கலந்த மருந்துகளை உட்கொள்வதால் சிறுநீரக பாதிப்பு, தோல் வெடிப்பு, அமைதியின்மை போன்றவை ஏற்படலாம். மேலும், மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படுவது, வயிற்று வலி, குமட்டல், மார்பு இறுக்கம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
சரும அலர்ஜி
மாதவிடாயின் போது மருந்துகளை உட்கொள்வது சரும ஒவ்வாமை பிரச்சனைகளை உண்டாக்கலாம். மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் சருமத்தில் அலர்ஜி ஏற்படும். எனவே அலர்ஜி பிரச்சனையை உணர்ந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பேட்ச் டெஸ் செய்து கொள்ளலாம்.

குறிப்பு
மாதவிடாயின் போது மருந்துகளை எடுத்துக் கொள்வதில் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. ஏனெனில் ஒவ்வொரு முறை மருந்துகளை எடுத்துக் கொண்ட போது, பல வகையான உடல் உபாதைகளை சந்திக்க நேரிடலாம். இந்த காலகட்டத்தில் இயற்கையான முறையில் மாதவிடாய் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
அந்த வகையில், மாதவிடாய் காலத்தில் ஆரோக்கியமான உணவு, குறைந்த செயல்பாடுடைய உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் மாதவிடாய் வலியைக் குறைக்கலாம். இந்த செயல்முறைகளைச் செய்து வருவதன் மூலம் மாதவிடாய் மருந்துகள் உட்கொள்வதைத் தவிர்க்க முடியும். மேலும், ஏதேனும் ஒவ்வாமை பிரச்சனை கொண்டவர்களாயின் மருந்துகளை உட்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Period Cramps Remedies: மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைக்க உதவும் எளிமையான வழிகள்!
Image Source: Freepik