$
மாதவிடாய் சுழற்சியின் போது பெண்கள் அனுபவிக்கூடிய வலிகளை வார்த்தைகளால் புரிந்து கொள்ள முடியாது. சிலருக்கு மாதவிடாயின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் வயிற்று வலி, முதுகு வலி போன்றவை ஏற்படக்கூடும். ஆனால் இந்த வலி எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது.
சிலருக்கு வலி குறைவாக இருக்கும். மற்றவர்களுக்கு, மாதவிடாய் தொடங்கிய முதல் நாளிலிருந்து ஐந்து நாட்களுக்கு தாங்க முடியாத வலி இருக்கும். இந்த நேரத்தில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக, மன அழுத்தம் மற்றும் பதட்டம் வேறு ஏற்படுவது உண்டு.

மாதவிடாய் சுழற்சியின் போது பெண்களின் கருப்பையில் புரோஸ்டாக்லாண்டின் ஹார்மோன் வெளியிடப்படுகிறது. இது இப்பகுதியில் வலிக்கு பங்களிக்கிறது. ஆனால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, கருப்பையின் தசைகள் சரியாக வேலை செய்யாததை சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பீரியட்ஸ் வலிகளை கட்டுப்படுத்த சிலர் மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். இதைவிட வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய இயற்கை வைத்தியங்கள் சிறப்பான நிவாரணம் தரக்கூடும். எனவே மாதவிடாய் வலியை சமாளிக்கக்கூடிய சில வீட்டு வைத்தியங்களை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்…
இதையும் படிங்க: Fiber Foods: இந்த உணவுகளை காலை டிபனாக சாப்பிட்டால் எத்தனை நன்மைகள் தெரியுமா?
பீரியட்ஸின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்:
எண்ணெயில் பொறித்த உணவுகள் பேக்கரி மற்றும் பாஸ்ட் ஃபுட் ஐயிட்டம், போக்கிங் உணவுகள் ஆகியவை செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதால் தவிர்க்க வேண்டும்.
பீரியட்ஸின் போது சாப்பிடக்கூடியவை:
காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்து உணவுகளை அதிகம் உட்கொள்ளலாம். அவகேடோ, பீனட் பட்டர், கொண்டைக்கடலை, வாழைப்பழம் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
கீரை, செலரி, வெள்ளரிகள், தர்பூசணி, பெர்ரி போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள். கால்சியத்திற்காக பால் மற்றும் பால் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். இவற்றுடன் எள் மற்றும் பாதாம் பருப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாதவிடாய் வலியை சமாளிக்க வீட்டிலேயே செய்யக்கூடிய வீட்டு வைத்தியங்கள் சில இதோ….
வெந்நீர் குளியல்:
மாதவிடாய் வலியில் அவதிப்படும் போது வெந்நீர் குளியல் சிறப்பான நிவாரணம் அளிக்கக்கிறது. இதனால் உடலில் உள்ள வலிகளுடன், மன அழுத்தமும் நீங்குகிறது. குறைந்தது 10 நிமிடங்களாவது வயிறு மற்றும் முதுகு பகுதிகளில் சூடான நீரை ஊற்றும் போது வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்:
மாதவிடாய் காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்கவும். நீரிழப்பு வலியை மோசமாக்கும் என்பதால், நீரேற்றமாக இருப்பது மாதவிடாய் வலியைக் குறைக்க உதவும். அதே நேரத்தில், காபி, தேநீர், மற்ற காஃபின் பானங்கள் மற்றும் மது பானங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஆனால் சில மூலிகை தேநீர் குடிப்பதால் வலியிலிருந்து விடுபடலாம்.
வெல்லம்:
இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கெமிக்கல் ஸ்டடீஸின் கருத்துபடி, மாதவிடாய் சுழற்சியின் போது இரத்த இழப்பு உங்களை பலவீனமாகவும் சக்தியற்றதாகவும் உணரக்கூடும். இதைத் தடுப்பதில் வெல்லம் பயனுள்ளதாக இருக்கும்.
சிறிதளவு வெல்லத்தை அவ்வப்போது சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். மேலும் வெல்லத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துக்கள் மற்றும் ஆன்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் வயிற்று வலியை போக்க உதவுகின்றன.
ஆயில் மசாஜ்:
மாதவிடாய் வலியை போக்க ஆயில் மசாஜ் சிறந்தது. லாவெண்டர், ரோஸ், கிராம்பு, இலவங்கப்பட்டை போன்ற எண்ணெய்களை வயிற்றில் மசாஜ் செய்யும் போது பிடிப்புகள் குறையும்.
இதையும் படிங்க: Mental Health: எப்பவுமே மனசு ஹேப்பியா இருக்கனுமா?… இந்த 5 விஷயங்கள ஃபாலோப் பண்ணுங்க!
ஆனால் இந்த எண்ணெய்களை நேரடியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, முதலில் தேங்காய் எண்ணெயைத் தடவ வேண்டும், பின்னர் எசன்சியல் ஆயில்களை தடவி மசாஜ் செய்தால், தசைப்பிடிப்பு மற்றும் வலிகளில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.
ஹீட்டிங் பேட்
சுவாசப்பயிற்சி, உறக்கம்:
சுவாசப்பயிற்சிகள், லேசான உடற்பயிற்சி, யோகா, சூடான குளியல் மற்றும் தியானம் போன்ற எளிய முறைகளைப் பயன்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கலாம். மேலும், இந்த முறைகளைக் கையாள்வதன் மூலம் சிறந்த இரவு தூக்கத்தைப் பெறலாம்.
Image Source: Freepik