Genetic Testing: பெண்கள் வயதாகும்போது, அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பராமரிப்பது மிக முக்கியமானது. குறிப்பாக 35 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கு, புறக்கணிக்கக் கூடாது. பெண்களின் ஆரோக்கியத்தின் ஒரு முக்கியமான அம்சம், மரபணு பரிசோதனை. இதுகுறித்து டாக்டர் ஷிவா முரார்கா, Neuberg Centre for Genomic Medicine கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.
மரபணு ஸ்கிரீனிங் சோதனைகள் பரம்பரை நோய்கள் பற்றிய தகவல்களை அறிய உதவுகிறது. இது சரியான நேரத்தில் தீர்வையும் தனிப்பட்ட மருத்துவ கவனிப்பையும் பெற உதவுகிறது.
இதையும் படிங்க: சொத்தைப் பற்களுக்கான ரூட் கெனால் சிகிச்சை - முழு விவரங்களையும் மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்வோம்
35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான மரபணு ஸ்கிரீனிங் சோதனைகளின் முக்கியத்துவத்தையும், இந்தச் சோதனைகள் ஆரோக்கியமான வாழ்வுக்கு எவ்வாறு பங்களிக்கும் என்பதையும் இந்த தகவலை படித்து அறிந்துக் கொள்வோம்.
மரபணு ஸ்கிரீனிங்
மரபணு ஸ்கிரீனிங் என்பது ஒரு தனிநபரின் DNAவின் மரபணு மாறுபாடுகளைக் கண்டறிவது. இந்த சோதனைகள் மார்பக புற்றுநோய் முதல் அல்சைமர் நோய் வரை பலவிதமான நிலைமைகள் பற்றிய தகவல்களை அறிய முடியும். 35 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கு, பல மரபணு சோதனைகள் என்பது முக்கியமானவை ஆகும்.
மார்பக புற்றுநோய்
இந்த வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மிகவும் முக்கியமான மரபணு ஸ்கிரீனிங் சோதனைகளில் ஒன்று BRCA மரபணு மாற்ற சோதனை ஆகும். BRCA1 மற்றும் BRCA2 மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் மார்பக மற்றும் கருப்பை (Ovarian Cancer) புற்றுநோய்களின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கின்றன.
இந்த மரபணுக்களை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், நோய்த்தடுப்பு அறுவை சிகிச்சைகள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த முடிவுகளை தகுந்த நேரத்தில் எடுக்கலாம்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஸ்கிரீனிங் என்பது புற்றுநோயைக் கண்டறிய HPV தொற்றுக்கான பரிசோதனையை உள்ளடக்கியது ஆகும். சாதாரணமாக பெண்கள் 30 வயதிலிருந்து மரபணு பரிசோதனை தொடங்கலாம். 5 முதல் 10 வருடங்களுக்கு ஒருமுறை HPV மரபணு வகைப் பரிசோதனையுடன் வழக்கமான ஸ்கிரீனிங் செய்வது நல்லது.
கர்ப்ப கால ஆரோக்கியம்
பெண்கள் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில், கேரியர் ஸ்கிரீனிங் சோதனைகள் செய்வதன் மூலம், தங்கள் குழந்தைகளுக்கு மரபணு மாற்றங்கள் ஏதும் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவும். இத்தகைய சோதனைகள், பெண்களும் அவர்களது கணவரும் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய தேர்வுகளை மேற்கொள்ள உதவுவதோடு, தேவைப்பட்டால், செயற்கைக் கருத்தரித்தல் போன்ற விருப்பங்களை ஆராயலாம்.
இதய ஆரோக்கியம்

பெண்களுக்கு வயதாகும்போது இதய நோய் மிகவும் அடிப்படை பிரச்சனையாக மாறுகிறது. மரபணு
சோதனைகள் மூலம் குடும்ப ஹைபர்கொலஸ்டிரோலீமியா (hypercholesterolemia) அல்லது ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபத (hypertrophic cardiomyopathy) போன்ற நிலைகளுக்கான பரம்பரை ஆபத்து காரணிகள் உள்ளதா என்பதை கண்டறியலாம்.
இந்த அபாயங்களைப் பற்றி ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்வது, வாழ்க்கை முறை சரிசெய்தல்
மற்றும் இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்க பொருத்தமான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது.
அல்சைமர் நோய்
அல்சைமர் நோய் வயதான பெண்களுக்கு மட்டும் வரும் நோய் அல்ல என்றாலும், அதன் பாதிப்பு வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. APOE மரபணு சோதனையானது அல்சைமர் நோய்க்கான ஒரு நபரின் ஆபத்தை பற்றிய நுண்ணறிவுகளை அறிய முடியும்.
பெண்களை மேம்படுத்துதல்
35 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கான மரபணுத் ஸ்கிரீனிங் சோதனைகள் தனிநபர்கள் தங்கள் ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்த பெருமளவு உதவுகின்றன.
இந்தச் சோதனைகள் மூலம் கண்டறியும் தகவலின் மூலம், தங்கள் உடல்நலப் பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து தகுந்த நேரத்தில் உரிய சிகிச்சையை பெறலாம்.
இந்த மரபணு சோதனைகள் தனிநபருக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
இதையும் படிங்க: Kidney Infections: இருப்பதை எப்படி தெரிந்துக்கொள்வது
மரபணு ஸ்கிரீனிங் சோதனைகள் 35 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கு ஒரு சக்திவாய்ந்த கருவியாகும், பரிசோதனையை முன்கூட்டியே செய்வதன் மூலம், பெண்கள் தங்கள் உடல்நலம் குறித்து தகவலறிந்த தகுந்த முடிவுகளை எடுக்கலாம். இந்த சோதனைகள், ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்
Image Source: FreePik